Books / Thirumurai 6

74. 6.82 திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம்௿

6.82.1

வானத் திளமதியும் பாம்புந் தன்னில்௿
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்௿
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்௿
தில்லை நடமாடுந் தேவர் போலும்௿
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்௿
நன்மையுந் தீமையு மானார் போலுந்௿
தேனொத் தடியார்க் கினியார் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

6.82.1

6.82.2

விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்௿
வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்௿
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்௿
அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்௿
பண்ணார் களிவண்டு பாடி யாடும்௿
பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்௿
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

6.82.2

6.82.3

கானிரிய வேழ முரித்தார் போலுங்௿
காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்௿
வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்௿
வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்௿
ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்௿
உயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந்௿
தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

6.82.3

6.82.4

ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்௿
ஊழி பலகண் டிருந்தார் போலும்௿
மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்௿
மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங்௿
கானுற்ற ஆட லமர்ந்தார் போலுங்௿
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந்௿
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந் ௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

6.82.4

6.82.5

கார்மல்கு கொன்றையந் தாரார் போலுங்௿
காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்௿
பார்மல்கி யேத்தப் படுவார் போலும்௿
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்௿
ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்௿
ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ்௿
சீர்மல்கு பாட லுகந்தார் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

6.82.5

6.82.6

மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய௿
மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்௿
மூவாத மேனி முதல்வர் போலும்௿
முதுகுன்ற மூதூ ருடையார் போலுங்௿
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்௿
குரைகழலா லன்று குமைத்தார் போலுந்௿
தேவாதி தேவர்க் கரியார் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

6.82.6

6.82.7

கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங்௿
காரோணத் தென்று மிருப்பார் போலும்௿
இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்௿
ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்௿
படியொருவ ரில்லாப் படியார் போலும்௿
பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ்௿
செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

6.82.7

6.82.8

விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்௿
வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்௿
மலையினார் மங்கை மணாளர் போலும்௿
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந்௿
தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலுஞ்௿
சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலுஞ்௿
சிலையினார் செங்க ணரவர் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

6.82.8

6.82.9

அல்ல லடியார்க் கறுப்பார் போலும்௿
அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்௿
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்௿
நள்ளாறு நாளும் பிரியார் போலும்௿
முல்லை முகைநகையாள் பாகர் போலும்௿
முன்னமே தோன்றி முளைத்தார் போலுந்௿
தில்லை நடமாடுந் தேவர் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

6.82.9

6.82.10

உறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால்௿
ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச௿
நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்௿
நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்௿
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்௿
பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ்௿
சிறப்புடைய அடியார்கட் கினியார் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

6.82.10

6.82 — note

௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - சாயாவனேசுவரர்,௿ தேவியார் - குயிலினும்நன்மொழியம்மை.௿ ௿