Books / Thirumurai 6

75. 6.83 திருப்பாசூர் - திருத்தாண்டகம்௿

6.83.1

விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி௿
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற௿
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி௿
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற௿
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்௿
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற௿
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.1

6.83.2

வேதமோர் நான்காயா றங்க மாகி௿
விரிக்கின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக்௿
கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக்௿
குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக்௿
காதலால் வானவர்கள் போற்றி யென்று௿
கடிமலர்க ளவைதூவி ஏத்த நின்ற௿
பாதியோர் மாதினனைப் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.2

6.83.3

தடவரைக ளேழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்௿
தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக்௿
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக்௿
காண்கின்ற கதிரவனும் மதியு மாகிக்௿
குடமுழவச் சதிவழியே அனல்கை யேந்திக்௿
கூத்தாட வல்ல குழக னாகிப்௿
படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.3

6.83.4

நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை௿
நிறைமதிய முடன்சூடி நீதி யாலே௿
சீராரும் மறையோதி உலக முய்யச்௿
செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்ச முண்ட௿
காராருங் கண்டனைக் கச்சி மேய௿
கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப்௿
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.4

6.83.5

வேடனாய் விசயன்றன் வியப்பைக் காண்பான்௿
விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்௿
கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்௿
கொலைப்பகழி யுடன்கோத்துக் கோரப் பூசல்௿
ஆடினார் பெருங்கூத்துக் காளி காண௿
அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு௿
பாடினார் நால்வேதம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.5

6.83.6

புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலாற்௿
பொதுப்பந்தர் அதுவிழைத்துச் சருகால் மேய்ந்த௿
சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்௿
சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க௿
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு௿
விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்௿
பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.6

6.83.7

இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்௿
இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்௿
அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர்௿
அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்௿
தணல்முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்௿
தத்துவனைச் சாந்தகிலி னளறு தோய்ந்த௿
பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.7

6.83.8

அண்டவர்கள் கடல்கடைய அதனுட் டோ ன்றி௿
அதிர்ந்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்௿
எண்டிசையுஞ் சுடுகின்ற ஆற்றைக் கண்டும்௿
இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர்௿
வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று௿
வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்௿
பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.8

6.83.9

ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை௿
நான்முகனு மறியாத நெறியான் கையிற்௿
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்௿
தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்௿
காலத்தா லுதைசெய்து காதல் செய்த௿
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்௿
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.9

6.83.1

வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்௿
மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட் டோ டிச்௿
சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்௿
தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி௿
ஏந்துதிரள் திண்டோ ளுந் தலைகள் பத்தும் ௿
இறுத்தவன்றன் இசைகேட்டு விரக்கங் கொண்ட௿
பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.1

6.83 — note

௿