Books / Thirumurai 6

76. 6.84 திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம்௿

6.84.1

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்௿
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி௿
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்௿
எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி௿
அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை௿
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்௿
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

6.84.1

6.84.2

துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்௿
தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட௿
அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்௿
ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து௿
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை௿
வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற௿
செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

6.84.2

6.84.3

உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை௿
உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற௿
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்௿
பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும்௿
முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்௿
முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த௿
திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

6.84.3

6.84.4

கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்௿
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்௿
சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்௿
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்௿
பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே௿
பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்௿
சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

6.84.4

6.84.5

நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை௿
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக௿
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை௿
வியன்கெடில வீரட்டம் மேவி னானை௿
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி௿
மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்௿
செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

6.84.5

6.84.6

கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்௿
கடவூரில் வீரட்டங் கருதி னானைப்௿
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்௿
பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்௿
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்௿
பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று௿
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

6.84.6

6.84.7

எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை௿
ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்௿
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்௿
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்௿
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்௿
பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்௿
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

6.84.7

6.84.8

கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்௿
கற்றார்கள் உற்றோருங் காத லானைப்௿
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்௿
பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை௿
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க௿
நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்௿
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

6.84.8

6.84.9

அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை௿
அலைகடலில் ஆலால மமுது செய்த௿
கரியதொரு கண்டத்துச் செங்க ணேற்றுக்௿
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை௿
உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்௿
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்௿
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

6.84.9

6.84.1

போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்௿
புறம்பயமும் புகலூரும் மன்னி னானை௿
நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்௿
நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்௿
பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்௿
பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற௿
சீரரவக் கழலானைச் செல்வன் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

6.84.1

6.84 — note

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - கணபதீசுவரர்,௿ தேவியார் - திருக்குழல்மாதம்மை.௿ ௿