Books / Thirumurai 6

77. 6.85 திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம்௿

6.85.1

ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா௿
அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்௿
போர்த்தான்காண் புரிசடைமேற் புனலேற் றான்காண்௿
புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண்௿
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்௿
கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே௿
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.

6.85.1

6.85.2

கருத்தன்காண் கமலத்தோன் றலையி லொன்றைக்௿
காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி௿
ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண்௿
ஓருருவின் மூவுருவா யொன்றாய் நின்ற௿
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்௿
மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற௿
திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.

6.85.2

6.85.3

நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்௿
நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்௿
இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்௿
ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்௿
கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்௿
அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச்௿
செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.

6.85.3

6.85.4

மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்௿
முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்௿
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்௿
கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்௿
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்௿
ஆரழலாய் அயற்கரிக்கும் அறிய வொண்ணாத்௿
தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.

6.85.4

6.85.5

கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்௿
கனலாட வல்லான்காண் கையி லேந்தும்௿
மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்௿
வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்௿
ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்௿
உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந்௿
தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.

6.85.5

6.85.6

உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்௿
ஒழிவற நின்றெங்கு முலப்பி லான்காண்௿
புற்றரவே ஆடையுமாய்ப் பூணு மாகிப்௿
புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்௿
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக௿
நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினாற்௿
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.

6.85.6

6.85.7

உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி௿
உருண்டோ டத் தொடர்ந்தருக்கன் பல்லை யெல்லாந்௿
தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற௿
தலையவன்காண் மலைமகளாம் உமையைச் சால௿
மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி௿
வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்௿
சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.

6.85.7

6.85.8

உரிந்தவுடை யார்துவரா லுடம்பை மூடி௿
உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்௿
பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம்௿
பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை௿
நிரந்துவரும் இருகரையுந் தடவா வோடி௿
நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்௿
திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.

6.85.8

6.85.1

அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்௿
அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்௿
மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி௿
மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்௿
கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்௿
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்௿
செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.

6.85.1

6.85 — note

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. ௿ இத்தலம் நடுநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - முண்டீசுவரர்,௿ தேவியார் - கானார்குழலியம்மை.௿ ௿