Books / Thirumurai 6

78. 6.86 திருவாலம்பொழில் - திருத்தாண்டகம்௿

6.86.1

கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்௿
கமலத்தோன் றலையரிந்த கபா லியை௿
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை௿
உணர்வெலா மானானை ஓசை யாகி௿
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை௿
மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய௿
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.1

6.86.2

உரித்தானைக் களிறதன் றோல் போர்வை யாக௿
உடையானை உடைபுலியி னதளே யாகத்௿
தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத்௿
தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்௿
பரித்தானைப் பவளமால் வரையன் னானைப்௿
பாம்பணையான் றனக்கன்றங் காழி நல்கிச்௿
சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.2

6.86.3

உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை௿
ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளாற்௿
கருவீன்ற வெங்களவை யறிவான் றன்னைக்௿
காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்௿
கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை௿
அள்ளூறி எம்பெருமா னென்பார்க் கென்றுந்௿
திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.3

6.86.4

பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம்௿
பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத்௿
தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் றன்னை௿
வாட்போக்கி யம்மானை எம்மா னென்று௿
வாரமதா மடியார்க்கு வார மாகி௿
வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்௿
சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.4

6.86.5

வரையார்ந்த மடமங்கை பங்கன் றன்னை௿
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை௿
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த௿
அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்௿
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் றன்னைப்௿
பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத்௿
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.5

6.86.6

விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை௿
வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் றன்னை௿
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா௿
ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்௿
பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்௿
பாழ்படுப்பான் சிலைமலைநா ணேற்றி யம்பு௿
தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச்சிந்தி நெஞ்சே.

6.86.6

6.86.7

பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்௿
புறம்புறமே சோதித்த புனிதன் றன்னை௿
எல்லாருந் தன்னையே இகழ அந்நாள்௿
இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்௿
சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத்௿
தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்௿
செல்லாத நெறிசெலுத்த வல்லான் றன்னைத்௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.7

6.86.8

ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ௿
டயன்தேடி நாடரிய அம்மான் றன்னைப்௿
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்௿
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் றன்னைப்௿
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்௿
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்௿
சிந்தியவெந் தீவினைகள் தீர்ப்பான் றன்னைத்௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.8

6.86.9

கையிலுண் டுழல்வாருஞ் சாக்கி யருங்௿
கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப்௿
பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்௿
பூணாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்௿
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்௿
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த௿
செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.9

6.86 — note

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று. ௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - ஆத்மநாதீசுவரர்,௿ தேவியார் - ஞானாம்பிகையம்மை.௿ ௿