Books / Thirumurai 6

79. 6.87 திருச்சிவபுரம் - திருத்தாண்டகம்

6.87.1

வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்௿
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்௿
ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண்௿
ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்௿
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்௿
கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந்௿
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

6.87.1

6.87.2

நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த௿
நாதன்காண் பூதகண மாட ஆடுஞ்௿
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்௿
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்௿
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்௿
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற௿
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

6.87.2

6.87.3

வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்௿
மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண்௿
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்௿
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்௿
அம்பர்நகர்ப் பெருங்கோயி லமர்கின் றான்காண்௿
அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்௿
செம்பொனெனத் திகழ்கின்ற உருவத் தான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

6.87.3

6.87.4

பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம்௿
பீடழியச் சாடி யருள்கள் செய்த௿
முத்தன்காண் முத்தீயு மாயி னான்காண்௿
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க௿
அத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண்௿
அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட௿
சித்தன்காண் சித்தீச் சரத்தான் றான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

6.87.4

6.87.5

தூயவன்காண் நீறு துதைந்த மேனி௿
துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்௿
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்௿
சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண்௿
ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண்௿
அடியார்கட் காரமுத மாயி னான்காண்௿
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

6.87.5

6.87.6

பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்௿
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற௿
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்௿
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்௿
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றி௿
பிரியாது பலநாளும் வழிபட் டேத்துஞ்௿
சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

6.87.6

6.87.7

வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்௿
வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்௿
மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்௿
வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க௿
கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்௿
காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்௿
செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

6.87.7

6.87.8

இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் மறைந்து போயின.

6.87.8

6.87.1

கலையாரு நூலங்க மாயி னான்காண்௿
கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி௿
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற௿
மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண்௿
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்௿
தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்ட௿
சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

6.87.1

6.87 — note

௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர்,௿ தேவியார் - பெரியநாயகியம்மை.௿ ௿