Books / Thirumurai 6

80. 6.88 திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம்௿

6.88.1

ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை௿
அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்௿
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை௿
எழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை௿
ஊராரும் படநாக மாட்டு வானை௿
உயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்௿
சீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.1

6.88.2

ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா௿
அமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச்௿
சோதிமதி கலைதொலையத் தக்க னெச்சன்௿
சுடரிரவி அயிலெயிறு தொலைவித் தானை௿
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்௿
உயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந்௿
தீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.2

6.88.3

வருமிக்க மதயானை யுரித்தான் றன்னை௿
வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்௿
தருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்௿
சங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல்௿
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி௿
உத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந்௿
திருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.3

6.88.4

அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ௿
அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை௿
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ௿
விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை௿
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்௿
உயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந்௿
தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.4

6.88.5

பாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப்௿
பரிந்தவனுக் கருள்செய்த பரமன் றன்னைப்௿
பாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார்௿
பாராத வகைபண்ண வல்லான் றன்னை௿
ஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலியூர்௿
உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றுந்௿
தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.5

6.88.6

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னை௿
ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்௿
வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை௿
மணவாள நம்பியையென் மருந்து தன்னைப்௿
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்௿
பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்௿
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.6

6.88.7

மலையானை வருமலையன் றுரிசெய் தானை௿
மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்௿
கலையானைக் கலையாருங் கையி னானைக்௿
கடிவானை அடியார்கள் துயர மெல்லாம்௿
உலையாத அந்தணர்கள் வாழு மோமாம்௿
புலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த௿
சிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.7

6.88.8

சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்௿
செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்௿
சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்௿
தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்௿
ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்௿
உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்௿
சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.8

6.88.9

வார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்று௿
மலையெடுத்த வாளரக்கன் றோளுந் தாளும்௿
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே௿
இன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப்௿
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்௿
பைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்௿
சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.9

6.88 — note

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று. ௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - துயர்தீர்த்தசெல்வர்,௿ தேவியார் - பூங்கொடியம்மை.௿ ௿