Books / Thirumurai 6

81. 6.89 திருவின்னம்பர் - திருத்தாண்டகம்

6.89.1

அல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும்௿
அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்௿
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்௿
தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்௿
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்௿
வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்௿
எல்லி நடமாட வல்லார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.1

6.89.2

கோழிக் கொடியோன்றன் தாதை போலுங்௿
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்௿
ஊழி முதல்வருந் தாமே போலும்௿
உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்௿
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்௿
அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்௿
ஏழு பிறவிக்குந் தாமே போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.2

6.89.3

தொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந்௿
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்௿
பண்டிருவர் காணாப் படியார் போலும்௿
பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்௿
கண்ட மிறையே கறுத்தார் போலுங்௿
காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்௿
இண்டைச் சடைசேர் முடியார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.3

6.89.4

வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை௿
வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்௿
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்௿
ஒளிநீறு பூசு மொருவர் போலுந்௿
தானத்தின் முப்பொழுதுந் தாமே போலுந்௿
தம்மின் பிறர்பெரியா ரில்லை போலும்௿
ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.4

6.89.5

சூழுந் துயர மறுப்பார் போலுந்௿
தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்௿
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்௿
ஆட லுகந்த அழகர் போலுந்௿
தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு௿
தன்மை யளித்த தலைவர் போலும்௿
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.5

6.89.6

பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்௿
பாரூர் விடையொன் றுடையார் போலும்௿
பூதப் படையாள் புனிதர் போலும்௿
பூம்புகலூர் மேய புராணர் போலும்௿
வேதப் பொருளாய் விளைவார் போலும்௿
வேடம் பரவித் திரியுந் தொண்டர்௿
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.6

6.89.7

பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்௿
பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்௿
கல்லாதார் காட்சிக் கரியார் போலுங்௿
கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்௿
பொல்லாத பூதப் படையார் போலும்௿
பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்௿
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.7

6.89.8

மட்டு மலியுஞ் சடையார் போலும்௿
மாதையோர் பாக முடையார் போலுங்௿
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலுங்௿
காலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும்௿
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்௿
ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்௿
எட்டுத் திசைகளுந் தாமே போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.8

6.89.9

கருவுற்ற காலத்தே என்னை யாண்டு௿
கழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ்௿
செருவிற் புரமூன்று மட்டார் போலுந்௿
தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்௿
மருவிப் பிரியாத மைந்தர் போலும்௿
மலரடிகள் நாடி வணங்க லுற்ற௿
இருவர்க் கொருவராய் நின்றார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.9

6.89.10

அலங்கற் சடைதாழ ஐய மேற்று௿
அரவ மரையார்க்க வல்லார் போலும்௿
வலங்கை மழுவொன் றுடையார் போலும்௿
வான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும்௿
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை௿
விறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன்௿
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.10

6.89 — note

௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்,௿ தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.௿ ௿