Books / Thirumurai 6

82. 6.90 திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம்௿

6.90.1

மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை௿
மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை௿
நாவலனை நரைவிடையொன் றேறு வானை௿
நால்வேத மாறங்க மாயி னானை௿
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை௿
அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்௿
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.1

6.90.2

தலையேந்து கையானை என்பார்த் தானைச்௿
சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்௿
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்௿
கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை௿
மலையானை மற்றொப்பா ரில்லா தானை௿
மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்௿
கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.2

6.90.3

தொண்டர்குழாந் தொழுதேத்த அருள்செய் வானைச்௿
சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்௿
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்௿
செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்௿
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்௿
பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட௿
கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.3

6.90.4

விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னை௿
மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்௿
பெண்ணவனை ஆணவனைப் பித்தன் றன்னைப்௿
பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை௿
எண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும்௿
இருவிசும்பு மிருநிலமு மாகித் தோன்றுங்௿
கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.4

6.90.5

உருத்திரனை உமாபதியை உலகா னானை௿
உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப்௿
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்௿
பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற௿
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை௿
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்௿
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.5

6.90.6

ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை௿
இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச்௿
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்௿
செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்௿
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்௿
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.6

6.90.7

நாரணனும் நான்முகனு மறியா தானை௿
நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்௿
பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்௿
பால்வணனைத் தீவணனைப் பகலா னானை௿
வார்பொதியும் முலையாளோர் கூறன் றன்னை௿
மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்௿
கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.7

6.90.8

வானவனை வலிவலமும் மறைக்காட் டானை௿
மதிசூடும் பெருமானை மறையோன் றன்னை௿
ஏனவனை இமவான்றன் பேதை யோடும்௿
இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்௿
தேனவனைத் தித்திக்கும் பெருமான் றன்னைத்௿
தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங்௿
கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.8

6.90.9

நெருப்புருவு திருமேனி வெண்ணீற் றானை௿
நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்௿
தருக்கழிய முயலகன்மேற் றாள்வைத் தானைச்௿
சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை௿
விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை௿
விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்௿
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.9

6.90.10

மடலாழித் தாமரையா யிரத்தி லொன்று௿
மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்௿
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்௿
தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட௿
அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை௿
அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்௿
கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.10

6.90 — note

௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,௿ தேவியார் - கற்பகநாயகியம்மை.௿ ௿