Books / Thirumurai 6

83. 6.91 திருவெறும்பியூர் - திருத்தாண்டகம்

6.91.1

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்௿
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய௿
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்௿
தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி௿
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்௿
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட௿
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.1

6.91.2

பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்௿
பசுபதியைப் பாசுபத வேடத் தானை௿
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை௿
வேதியனை விண்ணவனை மேவி வையம்௿
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்௿
அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்௿
தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.2

6.91.3

கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்௿
கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும்௿
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி௿
உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற௿
மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்த௿
மயானத்து மாசிலா மணியை வாசத்௿
திருவெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.3

6.91.4

பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்௿
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்௿
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்௿
புண்ணியனைப் புவனியது முழுதும் போக௿
உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணை௿
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்௿
திகழெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.4

6.91.5

பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்௿
பயில்வானை அயில்வாய சூல மேந்தி௿
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை௿
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்௿
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்௿
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்௿
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.5

6.91.6

கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர்௿
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி௿
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக௿
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு௿
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு௿
மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்௿
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.6

6.91.7

நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை௿
நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்௿
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்௿
மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன்௿
ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்௿
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்௿
சேணெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.7

6.91.8

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை௿
ஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்௿
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா௿
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்௿
பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்௿
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு௿
செறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.8

6.91.9

அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி௿
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்௿
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட௿
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட௿
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்௿
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்௿
செறியெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.9

6.91.10

அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி௿
அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோ ள்௿
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று௿
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட௿
இருந்தவனை ஏழுலகு மாக்கி னானை௿
எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த௿
திருந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.10

6.91 — note

௿