Books / Thirumurai 6

90. 6.98 திருமறுமாற்றத் - திருத்தாண்டகம்௿

6.98.1

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்௿
நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்௿
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்௿
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை௿
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான௿
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்௿
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்௿
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

6.98.1

6.98.2

அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்௿
அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்௿
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி௿
உடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே௿
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்௿
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந்௿
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்௿
சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.

6.98.2

6.98.3

வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்௿
மாதேவா மாதேவா என்று வாழ்த்தி௿
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்௿
நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோங்௿
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்௿
கன்மனமே நன்மனமாக் கரையப் பெற்றோம்௿
பாராண்டு பகடேறித் திரிவார் சொல்லும்௿
பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.

6.98.3

6.98.4

உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்௿
உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே௿
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்௿
நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்௿
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்௿
நமச்சிவா யஞ்சொல்ல வல்லோம் நாவாற்௿
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட௿
சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.

6.98.4

6.98.5

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்௿
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை௿
சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்௿
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்௿
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே௿
உறுபிணியார் செறலொழிந்திட் டோ டிப் போனார்௿
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்௿
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.

6.98.5

6.98.6

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான௿
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்௿
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்௿
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்௿
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே௿
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான௿
காவலரே யேவி விடுத்தா ரேனுங்௿
கடவமலோங் கடுமையொடு களவற் றோமே.

6.98.6

6.98.7

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்௿
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி௿
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி௿
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்௿
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்௿
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்௿
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்௿
பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே.

6.98.7

6.98.8

ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் றன்னை௿
இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க௿
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்௿
சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற௿
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்௿
நின்றுண்பா ரெம்மை நினையச் சொன்ன௿
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே௿
வந்தீரார் மன்னவனா வான்றா னாரே.

6.98.8

6.98.9

சடையுடையான் சங்கக் குழையோர் காதன்௿
சாம்பலும் பாம்பு மணிந்த மேனி௿
விடையுடையான் வேங்கை யதள்மே லாடை௿
வெள்ளிபோற் புள்ளியுழை மான்றோல் சார்ந்த௿
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்௿
உம்மோடு மற்று முளராய் நின்ற௿
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்௿
பாசமற வீசும் படியோம் நாமே.

6.98.9

6.98.10

நாவார நம்பனையே பாடப் பெற்றோம்௿
நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்௿
ஆவாவென் றெமையாள்வான் அமரர் நாதன்௿
அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட௿
தேவாதி தேவன் சிவனென் சிந்தை௿
சேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் றானே வந்து௿
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலுங்௿
குணமாகக் கொள்ளோமெண் குணத்து ளோமே.

6.98.10

6.98 — note

௿