Books / Thirumurai 6

89. 6.97 திருவினாத் - திருத்தாண்டகம்

6.97.1

௿

6.97.1

6.97.1

அண்டங் கடந்த சுவடு முண்டோ ௿
அனலங்கை யேந்திய ஆட லுண்டோ ௿
பண்டை யெழுவர் படியு முண்டோ ௿
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ ௿
கண்ட மிறையே கறுத்த துண்டோ ௿
கண்ணின்மேற் கண்ணொன்று கண்ட துண்டோ ௿
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ ௿
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

6.97.1

6.97.2

எரிகின்ற இளஞாயி றன்ன மேனி௿
இலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ ௿
விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ ௿
வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ ௿
வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ ௿
அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ ௿
சொரிகின்ற புனலுண்டோ சூல முண்டோ ௿
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

6.97.2

6.97.3

நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ ௿
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ௿
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ ௿
பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ ௿
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ ௿
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ ௿
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ ௿
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

6.97.3

6.97.4

பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ ௿
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ ௿
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ ௿
ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ ௿
கண்ணார் கழற்காலற் செற்ற துண்டோ ௿
காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ ௿
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ ௿
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.

6.97.4

6.97.5

நீறுடைய திருமேனி பாக முண்டோ ௿
நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ ௿
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ ௿
கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம்௿
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ ௿
அதனருகே பிறையுண்டோ அளவி லாத௿
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ ௿
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.

6.97.5

6.97.6

பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்௿
பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்௿
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்௿
குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்௿
கட்டங்கக் கொடிதிண்டோ ளாடக் கண்டேன்௿
கனமழுவாள் வலங்கையி லிலங்கக் கண்டேன்௿
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்௿
தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.

6.97.6

6.97.7

அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்௿
அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்௿
பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்௿
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்௿
கலிக்கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்௿
கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்௿
வலித்துடுத்த மான்றோ லரையிற் கண்டேன்௿
மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.

6.97.7

6.97.8

நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்௿
நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்௿
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்௿
கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்௿
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்௿
அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்௿
ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன்௿
இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே.

6.97.8

6.97.9

விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு௿
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு௿
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு௿
சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு௿
அரையுண்ட கோவண ஆடை யுண்டு௿
வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு௿
இரையுண் டறியாத பாம்பு முண்டு௿
இமையோர் பெருமா னிலாத தென்னே.

6.97.9

6.97.10

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி௿
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்௿
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்௿
ஓரூர னல்லனோ ருவம னில்லி௿
அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்௿
அவனருளே கண்ணாகக் காணி னல்லால்௿
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்௿
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

6.97.10

6.97.11

பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்௿
புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்௿
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்௿
மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்௿
அன்னத்தே ரூர்ந்த அரக்கன் றன்னை௿
அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்௿
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்௿
சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.

6.97.11

6.97 — note

௿