Books / Thirumurai 6

88. 6.96 தனி - திருத்தாண்டகம்௿

6.96.1

ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார்௿
அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்௿
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்௿
தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை௿
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்௿
மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்௿
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்௿
கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.

6.96.1

6.96.2

முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார்௿
முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்௿
செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்௿
செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்௿
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்௿
சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்௿
அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்௿
அடியேனை ஆளுடைய அடிக ளாரே.

6.96.2

6.96.3

முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு௿
மூசுமிள நாகமுட னாகக் கொண்டார்௿
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப௿
அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்௿
வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்௿
மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்௿
துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்௿
சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே.

6.96.3

6.96.4

பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்௿
பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்௿
அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார்௿
அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்௿
கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்௿
கொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார்௿
செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்௿
செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே.

6.96.4

6.96.5

அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்௿
அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்௿
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்௿
சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்௿
மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்௿
மாகாளன் வாசற்காப் பாகக் கொண்டார்௿
தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்௿
சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.

6.96.5

6.96.6

பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்௿
பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்௿
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்௿
நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்௿
வாரடங்கு வனமுலையார் மைய லாகி௿
வந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார்௿
ஊரடங்க ஒற்றிநகர் பற்றிக் கொண்டார்௿
உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

6.96.6

6.96.7

அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்௿
ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார்௿
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்௿
காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்௿
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்௿
மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்௿
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்௿
சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே.

6.96.7

6.96.8

படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்௿
பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார்௿
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்௿
கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்௿
நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்௿
நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்௿
இடமாக்கி இடைமருதுங் கொண்டார் பண்டே௿
என்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே.

6.96.8

6.96.9

எச்சனிணைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்௿
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்௿
மெச்சன்வியாத் திரன்றலையும் வேறாக் கொண்டார்௿
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்து௿
உச்சநமன் றாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்௿
உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்௿
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்௿
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே.

6.96.9

6.96.10

சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்௿
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்௿
உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்௿
உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்௿
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்௿
காபால வேடங் கருதிக் கொண்டார்௿
விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்௿
வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

6.96.10

6.96.11

குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்௿
குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்௿
சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்௿
தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்௿
பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்௿
பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி௿
இராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டார்௿
இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

6.96.11

6.96 — note

௿