Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

10. The anthropomorphic sacred form

Passage 1

உருவத்திருமேனி

The anthropomorphic sacred form.

Passage 2

சிவபெருமான் ஆன்மாக்களைப் பந்திப்பனவும் விடுவன வுமாகிய சொல்லும் பொருளுமாகிய பிரபஞ்சப் பொருள்கள் அல்லாகவராதலானும், தோற்ரமும் அழிவும் இல்லாதவர் ஆதலானும், அளந்தறியப்படாதவர் ஆகலானும் இன்ன வடி வினரென்றும், இன்ன வடிவத்தைக் கொள்ளுவரென்றும், இன்ன வடிவத்தைக் கொள்ளமாட்டாரென்றும் கூறுவதற்கு ஆசங்கையும் உத்தரமும் இல்லையாம்.

Since Lord Shiva is not a worldly entity composed of words and meanings that bind and liberate souls, since He has neither origin nor destruction, and since He cannot be comprehended through measurement, there is no basis for asking or answering questions such as, “What form does He have?” “What form will He assume?” or “What form will He not assume?”

Passage 3

சிவபெருமானும் உயிர்களும் சித்துப் பொருள்களாயி னும் முதல்வனார் சூக்குமசித்துப்பொருள்; உயிர்கள் தூலசித் தப்பொருள்கள். உயிர்கள் காம் நினைத்ததொன்றாக வரற் கேற்ற ஆற்றல் இல்லாகன; சிவபெருமான் அளவிலாற்றல் உடையவர். சிவபெருமான் முற்றறிவும் முற்றுத்தொழிலு

Although Lord Shiva and souls are both conscious entities, the Lord is a subtle conscious entity, whereas souls are gross conscious entities. Souls do not possess the power to bring into existence whatever they may think of; Lord Shiva possesses infinite power. Lord Shiva possesses perfect knowledge and perfect activity; souls possess limited knowledge and limited activity.

Passage 4

முடையவர்; உயிர்கள் சிற்றறிவும் சிறுதொழிலுமுடையன. இறைவனார் இயல்பாகவே மலத்தினீங்கினவர். உயிர்கள் அநாதியே மலத்தோடு கூடியன. இங்ஙனம் பரமசிவன்உயிர் களின் தன்மை இல்லாதவராதலால் அவர் நினைத்த வடிவங் களை எடுக்கும் இயல்புடையவர். ஆதலாற் சிவபெருமா னுடைய திருமேனி சத்தி வடிவமேயாம்.

The Lord is, by His very nature, free from impurities. Souls, from beginningless time, have been united with impurities. Thus, since Paramashiva does not possess the nature of souls, He has the ability to assume whatever forms He wills. Therefore, the sacred body of Lord Shiva is itself the form of Shakti.

Passage 5

அநாதி மலமுத்த சித்துருவாகிய கடவுள், ஆன்மாக்கள் பொருட்டுக் கருணையினால் உருவத்திருமேனி கொண்டு வேதா கமங்களை உபதேசித்தருளாராயின், ஆன்மாக்கள் பதி பசு பாசங்களின் இயல்புணர்ந்து முத்தியடைதல் கூடாதாகும். அன்றியும் குரு பரம்பரையாக அவை உபதேசிக்கப்பட்டு வருதலும் இல்லையாகும்.

If God, whose conscious nature is eternally free from impurities, did not, out of compassion for the sake of souls, assume a corporeal form and graciously impart the Vedas and Agamas, souls would be unable to understand the nature of God, soul, and bondage and attain liberation. Moreover, those teachings would not continue to be transmitted through the succession of gurus.

Passage 6

உருவத்திருமேனிகொண்டு சிவபிரானால் அருளிச் செய் யப்பட்ட வேதாகமங்கள் எமக்கு எவ்விதம் கிடைத்தன எனின்; சதா சிவமூர்த்தி *அவ்டவித்தியேசுரரில் தலைவரா கிய அநந்ததேவருக்கு உபதேசிக்க, அவரால் பூரீகண்டருக் கும், அவரால் விட்டுணுவுக்கும், விட்டுணுவால் பிரமாவுக்கும், பிரமாவால் முனிவர்களுக்கும், முனிவரால் ஈானுடர்க்கும், மானுடரால் மானுடர்க்கும் உபதேசிக்கப்பட்டு வந்தனவாம்.

As for how the Vedas and Agamas graciously revealed by Lord Shiva, in the form of a manifest divine body, came to us: Sadashiva instructed Anantadeva, the chief of the Aṣṭavidyeśvaras; Anantadeva instructed Śrīkaṇṭha, Śrīkaṇṭha instructed Viṣṇu, Viṣṇu instructed Brahmā, Brahmā instructed the sages, the sages instructed human beings, and human beings have continued to instruct other human beings.

Passage 7

இன்னும் படைப்பாகிய தொழிலுக்கு வாதுளாகமத்தி னோதியவாறே, அசையும் பொருளும் அசையாத பொருளு மாகிய உலகங்கள் முதல்வரது திருமேனியில் ஒவ்வொரு உறுப்புக்களினின்று தோன்றுமாறு செய்யவேண்டுமாதலா னும், பக்தர்கட்கு இருவினை யொப்பு வந்தவிடத்து அனுக்கிர சுத்தின் பொருட்டுச் செய்யும் மறைத்தற் றொழிலுக்கு ஊன நடனமியற்ற. வேண்டுமாதலானும், திதி கிருத்தியத்துக்கு அரு ளாகிய உமாதேவியாரோடு இயைய வேண்டுமாதலானும், அனுக்கிரகத்துக்கு யோகிருந்து காட்டவேண்டுமாதலானும், சங்காரத்திற்குத் தோன்றின முறையே அவ்வவ்வுறுப்புக்

Furthermore, in accordance with what is taught in the Vātulāgama regarding the act of creation, He must cause the worlds—comprising both moving and unmoving entities—to emerge from each of the limbs of the First Lord’s sacred body. He must also perform the dance of concealment for the sake of granting grace to devotees when the effects of their twofold karma have reached equilibrium; He must unite with Lady Umā, who is grace itself, for the act of preservation; He must assume the yogic posture to manifest grace; and, for dissolution, in the manner in which He first appeared, each respective limb...

Passage 8

அட்டவித்தியேசுரர் விஞ்ஞானகலராயிருந்து மலபரிபாகம் எய்தப் பெற்றும், அதிகாரம் செய்யும் இச்சையால் ஈசுரதத்துவத்தில் அதிகாரம் செய்துகொண்டிருக்கும் எண்மர். களில் ஒடுங்கவேண்டுமாதலானும், உருவத்திருமேனி முதல்வ ருக்கு இன்றியமையாது வேண்டப்படும்.

The eight Vidyeshvaras, who, having been Vijnanakalars, attained the maturation of their impurities, continue to exercise authority over the Ishvara-tattva because of their desire to wield authority. Since they must ultimately merge into the Kalas, their embodied forms are indispensable to the Primordial Lord.