11. Angabhedam
Passage 1
அங்கபேதம்.
Angabhedam.
Passage 2
சிவபெருமானுடைய திருவுருவம் அருளாதலின், சிரம் முதலிய அங்கங்களும், திருமார்பு முதலிய பிரத்தியங்கங்களும், சூல முதலிய ஆயுகங்களாகிய சாங்கங்களும், வஸ்திரம் முத லிய உபாங்கங்களும் சத்திவடிவேயாம். இவ்வருளாகிய வடி வெல்லாம் உயிர்களின் பொருட்டன்றிச் சிறிதும் தம் பொருட் டுக் கொள்பவர் அல்லர்.
Since Lord Shiva’s sacred form is Grace itself, the principal limbs beginning with the head, the subsidiary limbs beginning with the sacred chest, the accessories such as the trident and other weapons, and the additional ornaments such as garments are all forms of Shakti. None of these forms of Grace is assumed for their own sake, even in the slightest; they are assumed solely for the sake of souls.
Passage 3
சிரசு, முகம், இருதயம் என்பன அங்கங்களாம். திரு மார்பு, கழுத்து, தனம், புயம், நாபி, குய்யம். உதரம், கண் கள். நாசி, வாய், காதுகள், கரங்கள், பாதங்கள், விரல்கள், தொடைகள், முழந்தாள்கள், கணைக்கால்கள் ஆகிய இவை பிரத்தியங்கங்களாம். சூலம், மழூ, வாள், குலிசம், அபயம், அக்கினி, அங்குசம், மணி, சர்ப்பம், பாசம் முதலியவை சாங் கங்களாம். வஸ்திரம், உபவீதம், மாலை, கந்தம், ஆபரணம் முதலியவை உபாங்கங்களாம். [அங்கம் - திருமேனி; பிரத்தி யங்கம் - அத்திருமேனியிலுள்ள உறுப்புக்கள், சாங்கம் - அங் கத்தோடு கூடியது; உபாங்கம் - அங்கத்தைவிட்டு நீங்கா து அதன் சமீபத்தில் இருப்பது.]
The head, face, and heart are the major limbs. The sacred chest, neck, breasts, shoulders, navel, pudendum, abdomen, eyes, nose, mouth, ears, hands, feet, fingers, thighs, knees, and ankles are the subsidiary limbs. The trident, axe, sword, thunderbolt, gesture of protection, fire, elephant goad, bell, serpent, noose, and so forth are the accessories. Garments, the sacred thread, garlands, sandal paste, ornaments, and so forth are the secondary accessories. [Anga means the divine body; pratyanga means the parts belonging to that body; sanga means that which accompanies the anga; upanga means that which remains near the anga without being separate from it.]
Passage 4
அநாதியே சிவபெருமானுக்குச் சுதந்திரமாயுள்ள சிவகர ணமே சிகையாம். “ஓங்கள வின்மை யுயர்சிகை” என்பது சதாசிவரூபம். பிரமா முதலிய மூர்த்திகளினிடமாக இருந்து பஞ்சகிருத்தியத்தைச் செய்தருளும் பரமசிவனுடைய சுத்த குணங்களாகிய ஈசானாதி ஐந்து மந்திரங்களும் சதாசிவமூர்த் திக்கு ஐந்து திருமுகங்களாம். முத்தான்மாக்களுக்கு மெய்ஞ் ஞானத்தை உணர்த்தும் திருவருட்சத்தி இருதயமாம். திரு வடிகள் ஞானசத்தி கிரியாசித்திகளைக் குறிப்பனவாம்.
It is the Sivakaraṇa, which has existed eternally and is independent in Lord Shiva, that is called the crest. “The lofty crest without equal” refers to the form of Sadashiva. The five mantras beginning with Īśāna, which are the pure attributes of Paramashiva who, through Brahma and the other deities, graciously performs the five cosmic acts, constitute the five sacred faces of the Sadashiva form. The divine grace-power that imparts true knowledge to liberated souls is the heart. The sacred feet signify the powers of knowledge and action.