Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

100. Aquatic Flowers

Passage 1

நீர்ப்பூக்கள்

Aquatic Flowers

Passage 2

நீர்ப்பூக்கள் செந்தாமரை, வெண்டாமரை, செங்கழுநீர், நீலோற்பலம், செவ்வாம்பல், வெள்ளாம்பல் என்பவைகளாம்.

Aquatic flowers include red lotus, white lotus, red water lily, blue water lily, red water lily, and white water lily.

Passage 3

திருநாவுக்கரசுசுவாமிகள்.

Tirunavukkarasu Swamigal.

Passage 4

திருக்குறுந்தொகை

Tirukkuruntokai

Passage 5

விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்

Bring great, blossoming flowers and hasten,

Passage 6

அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள்

Surround the feet of the Lord of the universe,

Passage 7

பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்

And the sins you committed in the past will be dispelled

Passage 8

வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.

O Lord of Vaanmiyur, where bees gather in the groves.

Passage 9

பத்திர புஷ்பமெடுத்தல் திருமாலை கட்டுதல்.

Gathering sacred leaves and flowers and making garlands.

Passage 10

சீவாகம விதிப்படி பத்திர புஷ்பமெடுத்து அருச்சிக்கக் கொடுத்தலும், தொடை கண்ணி முதலாகிய பலவகைப்பட்ட திருமாலைகளைக் கட்டிச் சாத்தக் கொடுத்தலும் சிறந்த சிவ புண்ணியமாம். முருகநாயனார்சரித்திரம் இதற்குச்சான்றாகும்.

Gathering sacred leaves and flowers in accordance with the Śaivāgama prescriptions and offering them for worship, as well as making and offering various kinds of sacred garlands, beginning with flower garlands and looped garlands, constitutes an excellent Śiva merit. The history of Muruga Nāyanār bears witness to this.