Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

110. Sandalwood paste

Passage 1

சந்த ன ம்

Sandalwood paste

Passage 2

குங்குமப்பூ முதலிய பொருள்கள் கலந்த சந்தனத்தைச் சாத்துவது திருவருட்சத்தி பதிதல் என்னும் பாவனையாகும்.

Applying sandalwood paste mixed with saffron and other substances is the devotional contemplation known as the descent of the Divine Grace-Shakti.

Passage 3

திருநாவுக்கரசு நாயனார்

Tirunavukkarasar Nayanar

Passage 4

“சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்ததோ ளானை”

“An elephant whose shoulders are anointed with sandalwood, saffron, and fragrant paste”

Passage 5

நைவேத்தியம்

Offering of food

Passage 6

இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்காக, அரிசி பால் நெய் தயிர் தேங்காய் பழவகைகள் முதலிய பொருள் களைக் கொடுத்தல் சிவபுண்ணியம். இதன் உண்மையைக் கூறுமிடத்துப் பசுஞானத்தைப் ஒப்பித்துச் சிவஞானத் தைப் பெறுதலேயாம். †

Offering rice, milk, ghee, curd, coconuts, fruits, and other such items to the Lord as an offering is Sivapunniyam. In its true sense, this means surrendering animal knowledge and attaining Sivajnanam. †

Passage 7

  • தேவாம்

  • Devam

Passage 8

1, “செய்ய மேனியன் தேனொடி பால்தயிர் நெய்ய தாடிய நீலக் குடியரன்.”

  1. “The red-bodied One, who bathes in honey, milk, curd, and ghee, the blue-throated Lord.”

Passage 9

  1. “ஆவி ல்ருசுகந் தாடு மவன்கழல்.”

  2. “His feet are bathed in the five products of the cow.”

Passage 10

திருமந்திரம்

Tirumantiram

Passage 11

“புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு வண்ண லதுகண் டருள்புரி யாநிற்கு மெண்ணிலி பாவிக ளெம்மிறை யீசனை நண்ணறி யாம னழுவுகின் றாரே.”

“For those who perform meritorious deeds, there are flowers and water; seeing these, the Beautiful One graciously stands before them. The countless sinners, however, are unable to approach our Lord Shiva and waste away.”

Passage 12

† மற்றுமுள்ள கிரியைகளின் உண்மைகளை சிவாகமங்களிலும் சிவார்ச் சனா சந்திரிகை சிவபூசை விளக்கம் முதலிய நூல்களிலும் காண்க.

† The truths concerning the other rituals may be found in the Shaiva Agamas and in works such as Sivarchana Chandrikai and Sivapūjai Vilakkam.

Passage 13

திருவிளையாடற்புராணம்

Tiruvilaiyadal Puranam

Passage 14

பாட்டிற் கின் பு குருபரன் பாதமேற் கண்ணீ ராட்டிச் சொன்மல ரணிந்துதற் போதவின் னமுதை யூட்டித் தற்பர ஞானமா மோமவெங் கனலை மூட்டிச் சம்புவின் பூசைமேன் முயற்சிய ரானார்.

They became practitioners of Sambu’s worship, bathing the Guru’s feet with tears of joy in song, adorning them with the flowers of their words, feeding them the nectar of the wisdom revealed at that moment, and kindling the fierce fire of the Om of Supreme Knowledge.

Passage 15

இக்கிரியை இந்திரியங்களும் மனமுங் கூடித் தொழிற் படுவதாகிய புறத்தொழில் அகத்தொழில் என்னும் இரண்டி னாலும் சிவபெருமானுடைய அருவுருவத் திருமேனியை வழி படுவதாம். கிரியையாளர் அருவப் பொருளாகிய சிவபெரு மான் ஈசானதி மந்திரங்களினால், சிவலிங்க முதலிய திருவுருக் கொண்டார் எனக் கருதி மந்திர நியாசத்தினாலே வழிபடுவர். விறகைக் கடைந்தவிடத்துத் தோன்றும் அக்கினிபோல, அவர்களுக்கு அவ்வத் திருமேனிகளில் அவ்வப்போது தோன்றி நின்று அருள் செய்வர். இக் கிரியையை அனுட் டித் தோர்சிவசாமீபமாகிய பதமுத்தியைப் பெறுவர். *

This rite is the worship of the formless-form body of Lord Shiva through both external and internal practices—that is, through external actions performed jointly by the sense organs and the mind, and through internal actions. Practitioners regard Lord Shiva, the formless Reality, as having assumed sacred forms such as the Shiva Linga through the Ishana and other mantras, and worship Him by means of mantra nyasa. Just as fire appears where sticks are rubbed together, He manifests from time to time in those sacred forms and bestows His grace upon them. Those who perform this rite attain the state of liberation known as proximity to Shiva.