113. The Definition and Benefits of Yogic Practice
Passage 1
யோகசாதனையின் இலக்கணமும் பயனும்.
The Definition and Benefits of Yogic Practice.
Passage 2
சகமார்க்கமாகிய யோகநெறிப் பயிற்சியாவது யாதெ னில் :–வாயுவானது எப்பொழுதும் வெளியே வருதலும் உள்ளே போதலுமாக இயங்கிக் கொண்டிருக்கும்; வெளியே வருதல் இரேசகம்; உள்ளே போதல் பூரகம்; வெளியே வரு தலை மேனோக்சிச் செல்லும் வாயு என்றும், உள்ளே செல்லு தலைக் கீழ்நோக்கிச் செல்லும் வாயு என்றும் கூறுவர். இவ் வாயுவை இவ்வாறு செல்ல வொட்டாது தடுத்துக் கும்பகஞ் செய்து, சுழுமுனா மார்க்கத்தில் பிராண வாயுவைச் செல்லும் படி நிறுத்தி, மனசை விஷயங்களின் வழி செல்லவொட்டாது ஒருவழிப் படுத்தி, அந்த மனே வியாபாரமுமன்றி லட்சியத் திலே நிறுத்தி, உடம்பினுள் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அஙாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறா தாரங்களின் அதிதேவதைகளாகிய விநாயகர், பிரமா, விட் டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்பவர்களை முறையே தியானித்து, அவ்வாறாதாரங்களுக்கு மேற்சென்று,
What, then, is the practice of yoga, the path of union? The vital air is constantly moving, going out and coming in. The outward movement is called rechaka, and the inward movement puraka. The air that moves outward is said to travel upward, while that which moves inward is said to travel downward. Preventing the vital air from moving in these ways, performing kumbhaka, and directing the prana through the path of the sushumna; preventing the mind from following the paths of sensory objects and making it one-pointed; withdrawing it from all mental activity and fixing it upon the object of meditation; then meditating, in succession, upon Vinayaka, Brahma, Vishnu, Rudra, Maheshvara, and Sadashiva, who are the presiding deities of the six chakras within the body—Muladhara, Svadhishthana, Manipura, Anahata, Vishuddhi, and Ajna—and proceeding beyond those chakras,
Passage 3
பிரம மந்திரத்தின் கண்ணதாகிய தாமரை முகையை மலரும் படி செய்து, அத் தாமரை மலரிற் பொருந்திய சந்திர மண் டலத்தை மூலாக்கினியினாலே இளகப் பண்ணி, அதன் வழி யாக ஒழுகும் அமிர்தத்தைத் தேகம் முழுதும் நிரப்பிப் பூரணப் பிரகாசத்தைத் தியானித்துச் சமாதி கூடுதல். * பி II தானாங்கமாக வினைகள் கெடுதற்கு வழியாகிய இவ் வட்டாங்க யோகத்தை முழுதும் அனுட்டித்தலாம். +
Causing the lotus bud, which is the eye of the Brahma mantra, to blossom; softening by the primal fire the lunar sphere abiding in that lotus flower; filling the entire body with the nectar that flows through it; meditating on complete radiance; and entering samadhi. * By fully practicing this eight-limbed yoga, which serves as a means for destroying karma, one may attain liberation. +
Passage 4
அட்டாங்கயோகம்:-இயமம், நியமம், ஆசனம், பி ராண யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன.
Ashtanga Yoga consists of yama, niyama, asana, pranayama, pratyahara, dharana, dhyana, and samadhi.
Passage 5
அவற்றுள், இயமடாவது:- கொல்லாமை, வாய்மை’ கள்ளாமை, பிறர்மனவியரையும் பொது மகளிரையும் விரும் பாமை, இரக்கம், வஞ்சனையில்லாமை, பொறையுடைமை, மனங்கலங்காமை, அற்பாகாரம், சுசியுடைமை என்னும் பத்துவிதமாம்.
Among these, yama is of ten kinds: non-killing, truthfulness, non-stealing, refraining from desiring another’s wife or public women, compassion, freedom from deceit, patience, mental composure, moderation in food, and purity.
Passage 6
நியமமாவது :- கவம், சந்தோஷம், கடவுள் உண்டென் னும் விசுவாசம், தானம், ஈசுவர பூசை, ஞானசாத்திரங் கேட்டல், செபம், விரதம் முதலியனவாம்.
Niyama consists of cleanliness, contentment, faith that God exists, charity, worship of Ishvara, listening to scriptures on wisdom, japa, observance of vows, and the like.
Passage 7
‡ ஆசனமாவது :- இருக்கும் முறைமையிற் பலவேறு வகைப்படும். அவற்றுள் சுகாசனமுமொன்று.
‡ Asana means: It is of many different kinds according to the manner of sitting. Sukhasana is one of them.
Passage 8
பிராணாயாமமாவது :- பிராணவாயுவை அடங்குதல். அது மந்திர செபத்துடன் அடக்குவதும், மந்திரசெபமின்றி அடக் குவதுமென இருவகைப்படும்.
Pranayama means: Controlling the vital breath. It is of two kinds: controlling it with the recitation of a mantra, and controlling it without mantra recitation.
Passage 9
பிரத்தியாகாரமாவது :- மனத்தைப் புறத்திற் செல்ல வொட்டாது அடக்குதல்.
Pratyahara means: Restraining the mind from going outward.
Passage 10
தாரணையாவது :- மனத்தை அகத்து ஓர் தானத்தில் நிறுத்துதல்.
Dharana means: Fixing the mind on an inner locus.
Passage 11
தியானமாவது :- மூர்த்தியின் சொரூபத்தை மனத்தால் பாவித்துச் சிந்தித்தல்.
Meditation (Dhyana) means contemplating and reflecting mentally upon the essential nature of the divine form.
Passage 12
சமாதியாவது :- மூர்த்தியாகிய தோற்றமும், சிந்தித்த லாகிய தொழிலும், சிந்திக்கின்றதானும் ஆகிய பேதங்கள் இன்றி, மூர்த்தியுந் தானும் இரண்டறக் கலந்து நிற்றல்.
Samadhi means abiding in a state in which the divine form, the act of contemplation, and the one who contemplates are free from all distinctions, merging inseparably with the divine form.
Passage 13
யோகிகள், யோகியருள்ள மெங்கும் இல்லமாய் வாழும் சிவபெருமான் இத்திருமேனியிலுமிருந்து பூசை கொண்டருளு. வரெனக் கருதிச் சாத்திய மந்திரங்களினால் வழிபடுவர். அவர் களுக்குக் கறந்தபொழுது தோன்றும் பால்போல, அவ்வம் மந்திரங்களால் அவரவர் விரும்பிய வடிவாய், அத்திருமேனி களில் அப்போதப்போது தோன்றிநின்று அருள்செய்வர்.
Yogis worship Lord Shiva, who dwells as the home of all that exists within the yogic path, believing that He resides in this sacred form and graciously accepts their worship. Through the appropriate mantras, He appears from time to time in those sacred forms, assuming whatever form each devotee desires, just as milk appears when it is milked, and bestows His grace upon them.
Passage 14
இவ் வழிபாடு அகத்தொழின் மாத்திரையானே சிவ பெருமானுடைய அருவத் திருமேனியிடத்து நிகழ்வதாதலின், இதனை அநுட்டித்தோர் சிவசாரூபமாகிய பதமுத்தியைப் பெறுவர்.
Since this worship takes place solely as an inner practice toward the formless sacred form of Lord Shiva, those who perform it attain liberation in the state of Shiva’s likeness (Siva-sarupa).
Passage 15
சுந்தரமூர்த்தி நாயனார்
Sundaramurthi Nayanar
Passage 16
பண் - பஞ்சமம்
Pann – Panchamam
Passage 17
வானுடை யான்பெரி யான்மனத் தாலு நினைப்பரியான் ஆனிடை யைந்தமர்ந் தானணு வாகியொர் தீயுருக்கொண் டூனுடை விவ்வுடல மொடுந்கிப் புகுந்தான் பாந்தான் நானுடை மாடெம் பிரானண்ணு மூர்நனி பள்ளியதே,
He who possesses the heavens, who is supreme, and whom the mind cannot conceive even through thought; who abides among the five in the cow; who assumed the subtle form of fire and entered this fleshly body, causing it to perish; our Lord, who possesses me, dwells most intimately in Annoor.
Passage 18
ஞானத்தின் இலக்கணமும் பயனும்
The Definition and Benefit of Wisdom
Passage 19
ஞானபாதமாகிய * சன்மார்க்கமாவது, எல்லாக் கலை ஞானங்களும் புராணங்களும் வேதங்களும் சாத்திரங்களும் சமய நூல்களுமாகிய பலவற்றையும் ஆராய்க்கறிந்து, பல வகைப்பட்ட சமயங்களிலும் கூறப்படும் பொருள்களின் இயல்புகள் யாவும் பூருவ பக்ஷமாகக் கண்டு, பதி பசு பாச லக்கணங்கள் கூறும் சிவாகம நெறியே சித்தாந்த மெனத் தெளிந்து, + காட்சி, காட்சிப்பொருள், காண்பான் எனப் பிரித்தறியும் சவிகற்ப ஞானத்தையுங் கடந்து, அம் மூன்றுமின்றி, அத்துவிதமாய் இயைந்த அகண்டாகார சச்சி தானந்தப் பிழம்பாகிய சிவபெருமான் மாட்டு நிருவிகற்ப ஞானத்தாற் செய்யும் வழிபாடாகும்.
Jnana Patha, known as *Sanmarga, is the worship performed through nirvikalpa jnana of Sivaperuman, who is the undivided, all-pervading essence of sat-chit-ananda, realized as non-dual and united beyond the threefold distinction of the perceiver, the object perceived, and the act of perception. This is attained by examining and understanding the various branches of knowledge, Puranas, Vedas, Shastras, and religious scriptures; considering as preliminary propositions the natures of the doctrines taught in the various religions; and clearly discerning that the path of the Shaiva Agamas, which expounds the characteristics of Pati, Pasu, and Pasa, is indeed Siddhanta.
Passage 20
இவ் வழிபாடு புறத்தொழில் அகத்தொழில் என்னும் இரண்டுமின்றி அறிவுத்தொழில் மாத்திரையானே சிவபெரு மானுடைய உருவம், அருவம், அருவுருவம் என்னும் மூன்று திருமேனிகட்கு மேலாகிய சொரூபத் திருமேனி யிடத்து நிகழ்வதாம்.
This worship takes place in the Svarupa Tirumeni, which transcends the three sacred forms of Sivaperuman—form, formlessness, and form-and-formlessness—and consists solely of the activity of knowledge, without either external or internal ritual action.
Passage 21
இந்த ஞானநெறியைச் சாதித்து அனுபவமடைந்த பெரி யோர் சிவசாயுச்சியமாகிய பரமுத்தியைப் பெறுவர். +
Those great souls who accomplish and experience this path of knowledge attain supreme liberation, known as Siva- sayujya. +
Passage 22
மாணிக்கவாசக சுவாமிகள்
Manikkavacaka Swamigal
Passage 23
பொய்யெல்லா மெய்யென்று புனர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐபனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.
Though I was deluded by the pleasures of women with lovely, deceptive breasts, believing all falsehood to be truth, He protected me from perishing, took the Lady as His consort, and graciously made me His servant so that I might attain the feet of that Lord. Oh! Who could receive such grace?
Passage 24
ஞானிகள் நீங்காத அன்பினால் திருக்கோயிலில் சிவ லிங்க முதலிய திருமேனிகளைச் சிவமேயெனக் கண்டு வழி படுவர். இவர்க்குக் கறவைப் பசுவின் உடம்பெங்கும் பால் செறிந்திருந்தும் கன்றைக் கண்டவிடத்து முலைவழிப் பெருகு வது போல, கருணமிகுதியால் சிவபெருமான் அவ்வன்பே தாமாய் எப்போதும் அத்திருமேனிகளில் வெளிப்பட்டு நின்று அருள் செய்வர். ஆதலால் அவ் வண்மையை அறிந்து அன் பின் வழியே வழிபடுதல் வேண்டும். *
The wise, through unwavering love, worship the sacred forms such as the Śiva Liṅga in the temple, seeing them as Śiva Himself. Just as milk, though pervading the entire body of a cow, flows from its udders when it sees its calf, so Śivaperuman, out of His abundant compassion, ever manifests Himself as that very love in those sacred forms and bestows His grace. Therefore, recognizing this truth, one must worship through the path of love.*
Passage 25
சரியையாளர் முதலிய நால்வரும் சிவபெருமானிடத்து அன்புடையரேனம் முறையே அவர்கட்கு மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என நால்வகை வேறுபாட்டுடன் அவ் வன்பு நிகழ்தலின், இடைவிடாது அன்பு நிகழ்தற்குரியார் தீவிரதர அன்புடையோராகிய ஞானிகளாம். அவர்களே அன்பரெனச் சிறப்பித்துக் கூறப்படுவர்.
Although the four—those who follow Chariya and the others—are all devoted to Śivaperuman, their love manifests in four degrees:
Passage 26
मंदतरம் , मंदம் , தீவிரம் , and தீவிரதரம்
respectively. Those worthy of experiencing uninterrupted love are the wise, whose love is of the most intense degree. They alone are distinguished and called devotees.
Passage 27
திருநாவுக்கரசு நாயனார்
Tirunavukkarasar Nayanar
Passage 28
திருத்தாண்டகட்
Thiruthandakam
Passage 29
† அருந்துணையை யடியார்த மல்ல றீர்க்கு
† The precious medicine that removes the hardships of devotees,
Passage 30
மருமருந்தை யகன்ஞாலத் தகத்துட் டோன்றி
The rare remedy that appeared within this vast world,
Passage 31
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
Abandoning all distress, family ties, and attachments as support,
Passage 32
வான்புலன்க ளகத்தடக்கி மடவா ரோடும்
Restraining the senses within and withering away,
Passage 33
பொருந்தனை மேல் வரும்பயனைப் போக மாற்றிப்
Changing the pleasures that come upon the bed into their consequences,
Passage 34
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
Removing worldly attachments and enabling one to contemplate Him, forever
Passage 35
பெருந்துணையைப் பெரும்பற்றப் புவியூ ரானைப்
A great support and the great attachment—the Lord of Puviyur
Passage 36
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
Every day on which one does not speak of Him is a day unborn.
Passage 37
சிவாலயத்தை வழிபடுதல் அவரவர் கருத்துக் கேற்ற வாறு உரித்தாயிருக்க, சரியையாளரைப்போன் ஞானிகளும் சிவாலயத்தை வழிபடுவதேனெனில், சரியை முதல் நான்கும் சிவபெருமானது உண்மைப் பணியாதலால் ஞானிகள் நாலி
Although worshipping a temple of Shiva is appropriate to each person according to their understanding, why do sages, too, worship temples of Shiva like those who practice Charya? Because the first four—Charya, Kriya, Yoga, and Jnana—are the true services of Lord Shiva, sages are entitled to all four.
Passage 38
னுக்கும் உரியர். எதுபோலுமெனில் அகத்தொழில் செய் வார் புறத்தொழிற்கும் உரியராதல் போலாம். புறத்தொழில் செய்வோர்க்கு அகத்தொழில் அதிகாரம் இன்மைபோல யோகிகள் யோகம், கிரியை, சரியையாகிய மூன்றிற்கும், கிரியையாளர் கிரியை சரியையாகிய இரண்டிற்கும், சரியை யாளர் சரியை ஒன்றிற்கும் உரியராவர். ஆகையால் ஞானி களும் சிவாலயத்தை வணங்குதற்குரியர்.
For example, one who performs inner worship may also be entitled to outer worship. Just as those who perform outer worship lack the qualification for inner worship, Yogis are entitled to the three—Yoga, Kriya, and Charya; those who practice Kriya are entitled to the two—Kriya and Charya; and those who practice Charya are entitled to only Charya. Therefore, sages too are entitled to worship in temples of Shiva.
Passage 39
சிவபெருமானை வழிபடும் முறைகள்.
Methods of worshipping Lord Shiva.
Passage 40
சிவபெருமானை வழிபடும் முறைகள் சிவதருமோத்தரத் திற்கூறியவாறு கன்மயாகம், தவயாகம், செபயாகம், தியான யாகம், ஞானயாகம் என ஐவ்கைப்படும்.
The methods of worshipping Lord Shiva are classified, as stated in the Sivadharmottara, into five types: ritual sacrifice, austerity-sacrifice, recitation-sacrifice, meditation-sacrifice, and knowledge-sacrifice.
Passage 41
அவற்றுள், கன்மயாகமாவது:- விடிய ஐந்து நாழி கைக்கு முன் எழுந்திருந்து சிவசிந்தனை முதல் சிவபூஜை, அக்கினிகாரிய மீறாகச் செய்யுஞ் செயல்களாம்.
Of these, ritual sacrifice consists of rising five nāzhigais before dawn and performing acts beginning with contemplation of Shiva and continuing through Shiva worship and the fire ritual.
Passage 42
தவயாகமாவது :- சாந்திராயண முதலிய விரதங்களினால் தேகத்தை மெலிவித்தலாம்.
Austerity-sacrifice consists of emaciating the body through vows such as the Chandrāyaṇa vow.
Passage 43
செபயாகமாவது :- மந்திரங்களை * வாசகம், இரகசியம், மானதம் என்னும் முறையில் தத்தம் தகுதிக்கேற்றவாறு செபித்தலாம்.
Recitation-sacrifice consists of reciting mantras according to one’s qualification, in the forms of audible recitation, whispered recitation, and mental recitation.
Passage 44
தியானயாகமாவது :- இருதயாதி ஸ்தானங்களிலே சதா சிவாதி மூர்த்திகளைத் தியானிப்பதாம்.
Meditative worship consists in meditating upon the forms beginning with Sadashiva in the heart and other centers.
Passage 45
இந்த நால்வகை வழிபாடுகளாலும் எய்தும் பயன், பிர பஞ்சப் பற்று நீக்கமும், ஞானமுமுண்டாதற்குக் காரணமாத லும் சிவலோகத்திலே போகங்கள் அனுபவித்தலுமாம்.
The benefit attained through these four kinds of worship is the removal of attachment to the phenomenal world, the attainment of knowledge, and the experiencing of enjoyments in the realm of Shiva.
Passage 46
ஞானயாகமாவது :- சிவாகமங்களை ஓதல், ஓதுவித்தல், கேட்பித்தல், கேட்டல், சிந்தித்தல் என்னும் ஐந்துமாம். இவை ஐந்தும் பரமேசுவரனுடைய திருவடியைச் சேர்விக் கும் மேலான ஞானபூசையாம். இதன்பயன் வீடுபேறாம்.
Worship through knowledge consists of five practices: reciting the Shaiva Agamas, teaching them, having them heard, listening to them, and reflecting upon them. These five constitute the supreme worship through knowledge that leads one to the sacred feet of Parameshvara. Its benefit is liberation.