117. Knowledge of the Lord
Passage 1
பதிஞானம்.
Knowledge of the Lord.
Passage 2
பதிஞானத்தில் நிலைபெறவொட்டாது செய்யும்
That which prevents one from remaining established in the knowledge of the Lord
Passage 3
வாசனையைக் கெடுக்கும் உபாயங்கள்.
Methods for destroying the latent impressions.
Passage 4
பரமபதியானவர் பாசஞான பசுஞானங்களினாலே அறி யப்படுபவர் அல்லர். திருவடி ஞானத்தினாலே அன்போடும் தன்னறிவின் கண் ஆராய்க்திருக்க, அத்திருவடி நிழலின்கீழ் பிரிப்பற நின்று தூங்குவதாகும் ஞானநிட்டை கைவருவ தாகும். பதிஞானம் சித்தித்த பின்னரும் பிரபஞ்சப் பற்று வருதல் பிராரத்த அநுபவ நோக்கி என்பர்.
The Supreme Lord is not known through the knowledge of bondage or the knowledge of the soul. When one investigates with love, through the knowledge of His sacred feet and within the awareness of one’s own self, and remains inseparably beneath the shade of those sacred feet, as though asleep, the steadfast state of knowledge is attained. Even after the knowledge of the Lord has been attained, the arising of attachment to the phenomenal world is said to be due to the experience of prārabdha karma.
Passage 5
கன்ம வசத்தால் பிரபஞ்சப் பற்று உதித்து நிஷ்டை கைவராதாயின், பற்றுக் கிடமாய பிரபஞ்சம் நிலையற்ற தெனக் கண்டு, நிஷ்டை நிலைத்தற்கு ஆற்றலைத் தருவதாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷூத்தை விதிப்படி உச்சரிக்க, அறிவின்கண் அறிவாய் விளங்கி நின்று பற்றுக்கு வித்தாய் நின்ற பாசங் கள் செயலற்று விலகும்படி தமதருளைத் தந்துநிற்பர்,
If attachment to the phenomenal world arises through the force of karma and steadfastness is not attained, one should recognize that the phenomenal world, which serves as the object of attachment, is impermanent, and recite Sri Panchakshara according to the prescribed rules, which grants the strength necessary for steadfastness. The Lord will bestow His grace, standing forth as awareness within awareness, so that the bonds which remain as the seeds of attachment may become inactive and withdraw.