119. The Greatness of Pati Jnana
Passage 1
பதிஞானத்தின் பெருமை.
The Greatness of Pati Jnana.
Passage 2
விடயங்களைக் காண்கின்ற கண் தன்னையும் தனக்கு முத லாகிய அந்தக்கரணங்களையும் அறியமாட்டாதிருத்தல் போல வும், அந்தக்கரணங்கள் தம்மையும் தமக்கு முதலாகிய உயி ரையும் அறியமாட்டாதிருந்தல் போலவும், உயிரும் தன்னை யும் தனக்கு முதலாகிய சிவனையும் அறியாதிருக்கும். இவை களை யொருங்கே யறிந்து நிற்கும் சிவபெருமான் தமது இயல் பையும் ஆன்ம இயல்பையும் அவ்வான்மாவிற்கு விளக்கித் தாம் கரணங்களால் அறியப்படாது நிற்பர். ஆதலால் திரு வருளைத் துணையாகக் கொண்டு சிவபெருமானை ஆன்ம அறி விற் கண்டு, அவ் வருளோடு நிற்கப் பெறின் பாசம் விட்டு நீங்கும். நீங்கியது ஒருக்கால் வந்து பொருந்துமாயினும், சிவ பாவனையை விடாது செய்து அதனாலே திருவடிநிழற் கீழ் நீங்காது நிற்றலுமாகும்.
Just as the eye that sees objects does not know itself or the internal faculties that are its source, and just as those internal faculties do not know themselves or the soul that is their source, so too the soul does not know itself or Siva, who is its source. Lord Siva, who knows all these together, reveals His own nature and the nature of the soul to that soul, while remaining unknowable through the faculties. Therefore, if one perceives Lord Siva through the soul’s knowledge, with divine grace as one’s support, and remains united with that grace, one will be freed from bondage. Even if that which has departed should return and attach itself again, one must continue unwaveringly in contemplation of Siva; thereby one will remain inseparably beneath the shade of His holy feet.
Passage 3
திருவடியன்பு தலைப்படுமுறைமை.
The manner in which love for the Holy Feet develops.
Passage 4
சிவத்தின் விருப்பும் பிரபஞ்சத்தில் வெறுப்பும் உண் டாயவிடத்துச் சிவபெருமானார் ஆன்மாவிடத்திற் பிரகாசித்து நின்று அன்பைப் பெருக்க அவ்வன்பின் வழியாக ஆன்ம அறிவின் கண் புகுந்து நின்று பேரின்பத்தைக் கொடுத் தருளுவர்.
When aversion to the world and desire for Śiva arise, Lord Śiva shines within the soul, causing love to increase. Through that love, He enters and abides in the sphere of the soul’s knowledge and graciously bestows supreme bliss.
Passage 5
சிவோகம்பாவனையின் இயல்பும் பயனும்.
The nature and benefit of contemplating “I am Śiva.”
Passage 6
ஆன்மபோதத்தினாற் சுட்டி அறியப்பட்ட இத்தேகாதிப் பிரபஞ்சமாகிய பாசம் நான் அன்று என்று நியதிபண்ணி, அப்போதத்தினாற் சுட்டி அறியப்படாது மேம்பட்டு நின்ற சிவனும் நான் அன்று என அறிந்து, ஆன்மாவின்கண் அச்சிவபிரானார் கலந்துநின்ற முறைமையால், அன்போடு
Having determined that the bondage known through the knowledge of the soul—this body and the world indicated by it—is not I, and having understood that Śiva, who transcends and remains beyond what is known through that knowledge, is also not I, one should, with love, recognize the manner in which Lord Śiva has mingled with and abides within the soul.
Passage 7
கூடிய அடிமைத் திறத்தினால் சிவோகம்பாவனை செய்யின், அவ்வான்மாவுக்கு வேறாதலின்றி அத்துவிதமாய்த் தோன் றுவர். கருடபாவனையால் விடம் நீங்குவதுபோல மலங்கள் விட்டு நீங்கும். அதனால், ஆன்மா நின்மலத்துவத்தைப் பொருந்தும். * சிவோகம்பாவனை நிலைத்தற்குப் பஞ்சாக்ஷ ரத்தை விதிப்படி உச்சரிக்க வேண்டும்.
Through the profound practice of servitude, if one meditates on Sivoham, He will appear to that soul non-differently and as non-dual. Just as poison is removed through meditation on Garuda, the impurities will depart. Thus, the soul will attain purity. * For the meditation on Sivoham to become firmly established, the Panchakshara must be recited according to the prescribed rules.