17. Trident
Passage 1
சூலம்.
Trident.
Passage 2
சனனி ரோதயித்திரி ஆரிணி என்னும் முச்சத்தி வடி வினதாகிய சூலப்படையைச் சிவபெருமான் ஏந்தியருளியது, முத்தொழிலுக்கும் முதல்வராகிய முழுமுதற் கடவுள் தாம் ஒருவரே என்பதையும், † இச்சாசத்தியையும் ஞானசத்தியை யும் கிரியாசத்தியையும் உடையவர் தாமென்பதையும் உணர்த் தும் அறிகுறியாம்.
The fact that Lord Shiva graciously bears the trident, whose three prongs are formed by the three Shaktis called Sanani, Rodhayitri, and Arini, is a symbol signifying that He alone is the Supreme Deity, the Lord of the three cosmic functions, and that He possesses Iccha Shakti, Jnana Shakti, and Kriya Shakti.
Passage 3
பதினொராந்திருமுறை.
The Eleventh Tirumurai.
Passage 4
மூவிலை யொருதாட் சூல மேந்துதன்
Bearing the three-pronged trident on one hand,
Passage 5
மூவரும் யானென மொழிந்த வாறே.
He declared, “The three are Myself.”
Passage 6
மான்
Deer
Passage 7
மானினது நான்கு கால்களும் நான்கு வேதங்களெனக் கொள்ளக் கிடத்தலால், அவ்வேதங்களுக்கு நாதர் தாமென் பதை உணர்த்துதற்காக மானேந்தினர்.
As the deer’s four legs may be understood as the four Vedas, He holds a deer to signify that He Himself is the Lord of those Vedas.
Passage 8
வேத மான்மறி யேந்துதன் மற்றத
The reason for holding the deer of the Vedas
Passage 9
னாத னாலினன நவிற்று மாறே.
is that He is their Lord, as explained by Nalinan.
Passage 10
மழு வாள் முதலியவற்றைக் கொண்டது.
He holds a battle-axe, a sword, and other weapons.
Passage 11
சிவபெருமான் சத்தியமுடையவர் தாம் என்பதை உணர்த்தற்கு மழுவேந்தினர் என்பர்.
It is said that Lord Shiva holds the battle-axe to signify that He possesses Truth.
Passage 12
ஆன்மாக்களின் பிறப்பறுப்பவரும் எல்லாரையும் அடக்கியாளலால் வந்த புகழையுடையவரும் தாமென்பதை யுணர்த்துவதற்காக + ஞானவடிவாகிய வாளை ஏந்தினர்.
To signify that He cuts off the births of souls and possesses the glory that comes from subduing everyone, He holds the sword, which represents the form of wisdom.
Passage 13
எவராலும் கெடுத்தற்கரியவர் தாம் என்பதைக் காட்டுவ தற்காக குலிசத்தைக் கொண்டனர்.
He holds the thunderbolt to show that He cannot be destroyed by anyone.
Passage 14
உலகத் து ன் ப த் து க்குப் பயப்படவேண்டாமென்று அனுக்கிரகம் செய்யும் குணத்தை + அபயகரம் குறிக்கும். ஆன்மாக்களின் கன்மத்துக்கீடாகப் போக முத்திகளைக் கொடுப்பவர் என்பதை வரதகரம் உணர்த்தும்.
The hand that bestows grace signifies the quality of granting protection from the suffering of the world. The hand that grants boons signifies that He bestows liberation upon souls in accordance with their karma.
Passage 15
$ சர்ப்பத்தினுடைய விரிவு சுருக்கம்போலப் பிரபஞ்சத் தோற்ற மொடுக்கம் இருப்பதால், உலகத்துக்கு நிமித்தகார ணர் தாம் என்பதை அறிவித்தற்காகக் குண்டலினி சத்தி ரூபமா கிய பாம்பைப் பூண்டனர்.
Since the manifestation and dissolution of the universe occur like the expansion and contraction of a serpent, He wears the serpent, which represents the Kundalini Shakti, to proclaim that He is the efficient cause of the world.
Passage 16
ஆன்மாக்களுக்கு மலத்தை யூட்டுவிப்பவர் தாம் என் பதை அறிவித்தற்காக மாயாரூபமாகிய பாசத்தைத் தரித் தனர். § அங்குசம் திரோபவ கிருத்தியத்தைச் செய்பவர் என்பதையும், கண்டாமணி நா கமயமாயிருப்பவர் என்பதை யும், அக்கினி ஆன்மாக்களைப் பந்தித்த பாசங்களைச் சங்கரிப் பவர் என்பதையும், உடுக்கை எல்லா உலகங்களையும் சிருட் டிப்பவர் என்பதையும், நீலோற்பலம் சங்கற்ப விகற்பமாகிய மனதத்துவத்தை நடாத்தும் குணமுடையவர் என்பதையும் உணர்த்தும்.
To proclaim that He is the One who causes souls to acquire the impurity, He bears the noose representing Maya. The goad signifies that He performs the act of concealment; the bell indicates that He is composed of the sound of the Nāda; the fire indicates that He destroys the bonds that bind souls; the drum indicates that He creates all the worlds; and the blue lotus indicates that He possesses the quality of directing the mental principle, consisting of thought and discrimination.
Passage 17
திருப்புன்முறுவல் ஆன்மாக்களது சஞ்சிதம், பிராரத் தம் ஆகாமியம் ஆகிய மூவகைத் துயாத்தையும் நீக்கியருளும் குறிப்பாகும்.
The sacred gentle smile signifies His gracious removal of the three kinds of suffering: the accumulated karma, the karma that has begun to bear fruit, and the karma yet to come.
Passage 18
வேதாந்தப் பெருளாயுள்ளவரும், அதனைக் கொடுப்பவ ரும் தாமென்பதைக் காட்டும் குறிப்பாக உபவீதத்தைத் தாங் கியருளினர். பிரபஞ்சத்தை மறைக்கும் திரோபவகிருத்தி யத்தைச் செய்து ஆன்மாக்களது ஆணவமலசத்திகளை மேலி டாமல் அமிழ்த்துபவர் சிவபெருமானே என்பதனை அவரது முயலகனை ஊன்றிய திருப்பாதம் காட்டும். தூக்கிய திருவடி அனுக்கிரகத்தை உணர்த்தும்.
He graciously wears the sacred thread as an indication that He is both the essence of Vedanta and the One who bestows it. His foot planted upon Muyalaka shows that Lord Shiva alone performs the act of concealment, immersing the souls’ innate impurities so that their powers of egoism do not become dominant. His raised foot signifies grace.
Passage 19
கொன்றை - பரிவட்டம் - சிலம்பு - வீரக்கழல்.
Konrai – headband – anklet – heroic anklet.
Passage 20
கொன்றை முதலிய மாலையும் பரிவட்டமும் தரித்தது ஓங் காரப் பொருளாயிருப்பவரும் திரோபவ கிருத்தியம் செய்பவ ரும் என்பதைக் குறிக்கும். சிலம்பையும் வீரக்கழலையுந் நரித் தமை ஆன்மாக்களைச் சோரமாகத் தன்வசப்படுத்துகின்ற முன்ன வினைகளை வென்று பிறவித் துன்பத்தை நீக்குபவர் என்பதை உணர்த்துவதற்காகும். †
Wearing a garland of konrai and other flowers, as well as a headband, signifies that He is the essence of Omkara and performs the act of concealment. Wearing the anklet and heroic anklet signifies that He conquers the past actions that bring souls under his control through delusion and removes the suffering of birth. †