Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

22. The Eightfold Form

Passage 1

அஷ்டமூர்த்தி.

The Eightfold Form.

Passage 2

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், சூரியன், சந்திரன், ஆன்மா என்னும் இவையெட்டும் சிவபெருமானுடைய அஷ்ட

Earth, water, fire, air, ether, the sun, the moon, and the soul—these eight are the Ashtamurti of Lord Shiva.

Passage 3

மூர்த்தங்களாம். இவற்றை யதிட்டிப்பவர் அப்பரம்பொருளே யாவர். சிவபெருமான் அஷ்டமூர்த்தியாய் நிற்பது உலகத்தில் உண்மைப் பொருளாய் நிற்பவர் தாம் என்பதைச் சிற்றறி வினராகிய ஆன்மாக்கள் அறிந்து உய்யும்படி கொண்டருளிய பெருங்கருணையாம்.

They are the forms. The One who establishes and sustains them is none other than the Supreme Reality. The fact that Lord Shiva abides as the Eightfold Form is an act of His boundless compassion, bestowed so that souls of limited knowledge may realize that He Himself exists in the world as the True Reality and attain liberation.

Passage 4

பிருதிவிரூப்மாகிய விக்கிரக வணக்கமும், கங்கை முதலிய நீர்த்த வணக்கமும், நித்திய நைமித்தியங்களிற் செய்யப்படும் அக்கினி வணக்கமும், பஞ்சபூத தலங்களிற் செய்யப்படும் - பஞ்ச பூதலிங் வணக்கமும். சிவபூசை முதலியவற்றிற் செய் யப்படும் சூரிய சந்திர வணக்கமும், குருவையும் சிவனடியார் களையும் பிராமணர் முதலிய பெரியோர்களையும் சிவபெருமா னாகப் பாவித்து வணங்கும் வணக்கமும் சிவபெருமானின் அஷ்டமூர்த்த வணக்கமேயாம்.

Worship of images representing the form of Earth; worship of water, such as the Ganges; worship of fire performed during daily and occasional rites; worship of the five elemental lingas performed at the sacred sites of the five elements; worship of the Sun and Moon performed during Shiva worship and other observances; and worship in which the Guru, devotees of Shiva, Brahmins, and other venerable persons are revered as Lord Shiva—all these constitute worship of Lord Shiva’s Eightfold Form.

Passage 5

திருநாவுக்கரசு சுவாமிகள்

Saint Tirunavukkarasu

Passage 6

நின்றதிருத்தாண்டகம்.

Nindra Thiruthandakam.

Passage 7

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி

Becoming the twofold earth, fire, and water,

Passage 8

† யியமான னா கியறியுங் காற்றுமாகி

† becoming the life-giving breath and the discerning wind,

Passage 9

அருநிலைய திங்களாய் ஞாயி றாத

becoming the moon in its rare state and the sun,

Passage 10

யாகாச மாயட்ட மூர்த்தி யாகி

becoming the ether and the Eightfold Form

Passage 11

பெருநலமுக் குற்றமும் பெண்ணு மாணும்

He is the great good and the faultless feminine and masculine;

Passage 12

பிற்ருருவுந் தம்முருவுக் தாமே யாகி

Becoming other forms and their own form themselves,

Passage 13

எெருநலையா யின்றாகி நாளை யாகி

Becoming yesterday, today, and tomorrow,

Passage 14

நிமிர்புன் சடையடிக ணின்ற வாறே.

Thus stands the Lord with His lofty, matted locks.

Passage 15

பதினொராந் திருமுறை.

The Eleventh Tirumurai.

Passage 16

எண்வகை மூர்த்தி யென்பதிவ் வுலகினி

The eightfold form is said to exist in this world

Passage 17

லுண்மை யானென வுணர்த்திய வாறே.

to make known the truth as it is.

Passage 18

"விருக்ஷ மூலத்திலே இறைத்த நீரால் அம்மரச்சாகை கள் புஷ்டியடையுமாறுபோல, சிவபெருமானுடைய பூசையி

“Just as the branches of a tree are nourished by the water poured at its roots, so through the worship of Lord Shiva...”

Passage 19

னால், அவர் சரீரமாகிய உலகம் செழிக்கின்றது: சிவபெரு மானுக்கு எட்டாவது மூர்த்தம் மற்றைய மூர்த்தங்களுள்ளே வியாபகமாகிய ஆன்மா; ஆகலின் உலகமனைத்தும் சிவசொரூ பம்; எந்தத் தேகமுடைய ஆன்மாவேனும் நிக்கிரகத்துக்கு ஆளாயின், அது முழுமையும் அஷ்டமூர்த்தமுடையாருக்கு வெறுப்பாய் முடியும்" என்று வாயுசங்கிதை கூறுகின்றது.

Thus, the world, which is His body, flourishes: “The eighth form of Lord Shiva is the soul that pervades the other forms. Therefore, the entire universe is Shiva’s true nature. If the soul inhabiting any body becomes subject to punishment, the whole of it will result in displeasure to Him who possesses the eight forms,” says the Vāyusaṃhitā.

Passage 20

சிவபெருமான் எங்கும் நின்று உபகரித்துவரின், யாவரும் அறியாததற்குக் காரணம் என்னையெனின், ஆதித்தன் எவ் விடத்திலும் விளக்கமாய் இருப்பினும் அந்தகர் அறியவராது இருளாய் இருப்பதுபோல முதல்வன் உபகாரம் விளக்கமா யிருப்பினும் அருட்கண்ணுடையார்க்கன்றி ஏனையோரால் அறிதல் முடியாது.

Although Lord Shiva stands everywhere and continues to bestow His help, the reason why no one recognizes this is as follows: just as the sun is present everywhere as light, yet remains darkness to the blind who cannot perceive it, so although the First Lord’s grace is present as illuminating assistance, it cannot be recognized by anyone other than those who possess the eye of grace.

Passage 21

காமரை மலர்களுள் பக்குவமுடைய தாமரை மலரை மட்டும் ஆதித்தன் விரியச்செய்தல் போல, அவ்வருட்கண்ணும் பக்குவமுடையார்க்கன் றிக் கிடைக்கப் பெறாது; பக்குவமுடை யார்க்கும் அவ்வருட்கண் பரமசிவனுடைய பெருங்கருணையி னாற் கொடுக்கப்படவேண்டுமேயன்றித் தாமாகவே சம்பாதித் தக்கொள்ள முடியாது. ஆகலாற் சிவபெருமானருளால் அவ்வருட்கண்ணப் பெற்றவர்களுக்கே அவர் அறிவிற்கறி வாய் நின்று உபகரித்தருளுவர்.

Just as the sun causes only the mature lotus among lotus flowers to blossom, so too the eye of grace cannot be obtained except by those who are spiritually mature. Even for the spiritually mature, that eye of grace must be bestowed through the supreme compassion of Parashiva; they cannot acquire it by their own efforts. Therefore, it is only to those who have received that eye of grace through Lord Shiva’s compassion that He reveals Himself as the object of their knowledge and graciously bestows His assistance.

Passage 22

திருநாவுக்கரசுநாயனார்

Tirunāvukkaracar Nāyaṉār

Passage 23

திருத்தாண்டகம்.

The Sacred Thiruthandakam.

Passage 24

மைப்படிந்த கண்ணாளுந் தா னுங் கச்சி

He of the dark-lined eyes, and He Himself of Kanchi,

Passage 25

மயானத்தான் வார்சடையா னென்னி னல்லான் ஒப்புடைய னல்ல னெருவ னல்ல

He of the cremation ground and flowing matted locks—if I say He is this, He is not; He has no equal, He is not one among many,

Passage 26

னொரூர னல்ல னேரூவம னில்லி

He belongs to no single town; He has no fixed form.

Passage 27

அப்படியு மந்நிறமு மவ்வண் ணமு

Even so, that color and that hue

Passage 28

மவனருளே கண்ணாகக் காணி னல்லால்

cannot be seen unless one beholds it with his grace as the eye.

Passage 29

இப்படிய னிந்நிறத்த னிவ்வண் ணத்த

One cannot write down and show, saying,

Passage 30

னிவனிறைவ னென்றெழுதிக் காட்டொணாதே.

“This is his form, this is his color, and he is the Lord.”