Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

23. Lord Shiva

Passage 1

சிவபெருமான்

Lord Shiva

Passage 2

உலகாதீதரும்—உலகரூபியும்.

Transcendent of the universe—and the embodiment of the universe.

Passage 3

உலகாதீதரும், உலக காரணரும், உலகத்துக்கு அந்தர் யாமியும், உலகரூபியுமாய் நிற்பவர் சிவபெருமான் ஒருவரே. அவர் வடிவம் உலகினைக் கடந்து நிற்றலால் உருத்திரன் விசு வாதிகன் என்றும், * அவருருவில் உலகந்தோன்றி ஒடுங்குத லால் விசுவகாரணர் என்றும், உலகத்துக்கு உயிராய் நிற்ற லால் விசுவாந்தர்யாமி என் றும், உலகமாய் நிற்றலால் விசுவ ரூபி என்றும் வேதம் கூறும்.

Lord Shiva alone exists as the Transcendent of the universe, the Cause of the universe, the Inner Ruler of the universe, and the embodiment of the universe. The Vedas declare that, because His form stands beyond the universe, He is called the Transcendent of the universe; because the universe arises from and dissolves into His form, He is called the Universal Cause; because He exists as the life within the universe, He is called the Inner Ruler of the universe; and because He exists as the universe itself, He is called the Universal Form.

Passage 4

சிவபெருமான் விசுவாதீதர் என்பதை + பிரம விட்டு ணுக்கள் அடிமுடி அறியாவண்ணம் அனற்பிழம்பாயுயர்ந்த முதல்வனாது திருவுருவின் நிலை கூறும் புராண சரிதமும், பரமசிவன் விசுவகாரணர் என்பதை மும்மூர்த்திகளும், தம் முடைய உறுப்பிற்றேன்றி நின்ற திருவுருவின் இயல்பு கூறும் புராண வசனமும், விசுவாந்தர்யாமி என்பதை அவ் விறைவன் வடிவிலே விளைந்த வண்ணமே உலகிற்கு விளைவு கூறும் புராண வசனமும், விசுவரூடி என்பதை + அர்த்த நாரீசுர வடிவு கூறும். புராண வாக்கியமும் வலியுறுத்தும்.

The puranic account describing the state of the sacred form of the Primal One, who rose as a column of fire so that Brahma and Vishnu could not know its beginning or end, affirms that Lord Shiva is transcendent of the universe. The puranic passage describing the nature of the sacred form from which the Trinity emerged as its members affirms that Paramashiva is the Cause of the universe. The puranic passage explaining the manifestation of the universe according to the manner in which it arose from that Lord’s form affirms that He is the Inner Ruler of the universe. The puranic statement describing the Ardhanarishvara form also affirms that He is the Universal Form.

Passage 5

சிவபெருமான் உலகினுக்குயிருமாகி நின்றருளுவர் என் பது. அவர் யோகத்திலிருந்தபொழுது, காமத்திற்குக் காரண

That Lord Shiva stands as the life of the world.

Passage 6

னாகிய மன்மதனிருக்கவும், தேவர் முதலியோர் காமலேட்கை யின்றி மெலிந்த திருவிளையாடலாலும், விட்டுணு அம்மெலிவு கெடும்படி கருதிச் சிவபெருமானிடத்து மன்மதனை ஏவ, அம் மன்மதனை நெற்றிக் கண்ண விழித்தெரித்து, இமயமலை அர சன் புத்திரியாராகிய உமாதேவியாரைத் திருமணஞ் செய்து அவ்வுயிர்கட்குப் பேரின்பத்தை அளித்த திருவிளையாடலா னும் இனிது விளங்கும். அஃதாவது இறைவனார் உயிருக்குயி ராய் நிற்றலை அவர் தொழிற்படாதிருக்கும்பொழுது உயிர்கள் தொழிற்படாமையானும், அவர் தொழிற்படும்பொழுது உயிர் கள் தொழிற்படுதலினாலும் நன்கு விளங்கும்.

When He was absorbed in yoga, although Manmatha, the cause of desire, was present, the gods and others grew weak without desire. Wishing to put an end to their weakness, Vishnu sent Manmatha against Lord Shiva. Shiva opened His third eye and reduced Manmatha to ashes; then, marrying Uma Devi, the daughter of the king of the Himalayas, He bestowed supreme bliss upon those souls. This divine play is also beautifully manifested in another way: when the Lord does not act, the souls do not act; and when He acts, the souls act. Thus it becomes clearly evident that the Lord stands as the life of every soul.

Passage 7

சிவஞான சித்தியார்.

Sivagnana Siddhiyar.

Passage 8

கண்ணுதல் யோகி ருப்பக் காமனின் றிடவேட் கைக்கு விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை யோரார் மாறா னெண்ணிலேண் மதனை யேவவெரிவிழித் திமவான் பெற்ற பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார்.

When the third-eyed Yogi remained in yoga, Manmatha was present, yet the gods dwelling in heaven and others grew weak, deprived of desire. The wise, seeking to end this weakness, sent Manmatha against Him; but with a fiery glance He reduced Manmatha to ashes, then united with the daughter born to the Himalayan king and bestowed supreme bliss upon the souls.

Passage 9

இவ்வுண்மையறியாதவர் சிவபெருமானைத் தேவர்களில் ஒருவர் என்பர். வேதங்கள் தேவதேவரென்றும், மகாதேவ ரென்றும், ஈசரென்றும், மூவரின் முதல்வர் என்றும், ஏக ரென்றும், சர்வாந்தர்யாமி என்றும், ஆதி என்றும் இவ்வாறு சிவபெருமானைப் புகழ்ந்ததுபோல மற்றோர் தேவரைப் புகழ்ந்திலது.

Those who do not know this truth say that Lord Shiva is one among the gods. Just as the Vedas have praised Lord Shiva as the God of gods, Mahadeva, Ishvara, our Lord, the first among the Trinity, the One, the Inner Ruler of all, and the Primordial One, they have not praised any other deity in this manner.

Passage 10

கந்தபுராணம்.

Kandha Puranam.

Passage 11

தேவதேவன் மாதேவன் சிறப்புடை யீசனெங்கோன் மூவரின் முதல்வ னேகன் முடிவிற்கு முடிவாய் நின்றோன் ஆவியு ளாவி யானே னந்தண னாகியென்றே ஏவரை யிசைத்த வம்மா எல்லைதீர் மறைக ளெல்லாம்.

The God of gods, the Great God, the glorious Lord, our sovereign, the first among the Trinity, the One, who stands as the end of the end, the life within life, the ascetic—thus have all the boundless Vedas proclaimed him.