25. The soul is not equal to Shiva
Passage 1
சீவன் சிவனை யொப்பாகான்.
The soul is not equal to Shiva.
Passage 2
இச்சாஞானக் கிரியைகள் சிவபெருமானுக்கு இருத்தல் போல, ஆன்மாக்களுக்கு முண்டாகையினால் அவர்களும் சிவத் தோடு ஒப்பாவார் போலும் என்னில், அன்று. கேவலாவத் தையில் ஆன்மாக்களின் இச்சா ஞானக்கிரியைகளை ஆணவ மலம் மறைக்கும்.
Since souls possess will, knowledge, and action, just as Lord Shiva does, one might think that they too are equal to Shiva. But this is not so. In the kevala state, the souls’ will, knowledge, and actions are concealed by the anava impurity.
Passage 3
சகலத்தில் ஆன்மாக்கள் தாம் தாம் செய்த கன்மத்திற் கேற்ப அறிவிச்சை செயல்கள் ஏகதேசமாய் விளங்கப் பெற்று விடயபோகங்களை ஏகதேசப்பட்டு அனுபவிக்கும். ஏகதேசப்பட்டு அனுபவித்தலாவது சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடையனவாயிருந்து அனுபவித்தலாம்.
In the sakala state, the souls’ knowledge, will, and actions manifest partially according to the karma each has performed, and they experience the enjoyment of objects only partially. To experience partially means to experience while possessing limited knowledge and limited power of action.
Passage 4
சுத்தநிலையில் ஆன்மாக்கள் வியாபக அறிவும் பேரானந் தமும் சிவபெருமான் கொடுக்கக் கொள்ளும் உரிமையுடை யன. சிவபெருமான் † நித்தியானந்த சொரூடி; சிவபெரு மானுக்கு மலபந்தமில்லாமையால் கேவலம், சகலம், சுத்தம் என்னும் அவத்தைகளுமில்லை; ஆதலால் ஆன்மாக்களுக்கு இச்சா ஞானக் கிரியைகள் உளவெனினும், அவற்றிற்கும், சிவனாருடைய இச்சா ஞானக் கிரியைகளுக்கும் வேற்றுமை பெரிதாம். ஆகலால் ஆன்மாக்கள் சிவனோடு சமமாகா; சிவ பெருமான் ஆண்டவனும் ஆன்மாக்கள் அடிமைகளுமாம்.
In the pure state, souls have the capacity to receive the all-pervading knowledge and supreme bliss bestowed by Lord Shiva. Lord Shiva is by nature eternal bliss; since He is free from the bondage of impurities, He has none of the states called kevala, sakala, and suddha. Therefore, although souls possess will, knowledge, and action, there is a great difference between these faculties in them and the will, knowledge, and action of Lord Shiva. Hence souls are not equal to Shiva; Lord Shiva is the Lord, and souls are His servants.
Passage 5
திருநாவுக்கரசுநாயனார்
Tirunavukkarasar Nayanar
Passage 6
ஆண்டானை யடியேனை யாளாக் கொண்டு வடியோடு முடிய யன்மா லறியா வண்ணம் நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை.
He made me, His servant, His subject—the Lord who extended Himself so that Brahma and Vishnu, with their forms and crowns, could not know Him, the Lord of Nedungalam city.