Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

27. The Three Causes

Passage 1

காரணத்திரயம்.

The Three Causes.

Passage 2

ஆன்மாக்கள் எடுக்குந் தேகங்கள் நல்வினை தீவினைகளுக் கேற்றபடி மாறி மாறித் தோன்றுவனவாயும், அழிவனவா யும், சுவர்க்க நரகங்களிற் செல்வனவாயுமிருக்கும். அத் தேகங்களை மாயை தருமென்னில்; மாயை செயலற்ற சடப் பொருள்; ஆகையால் மாயாகாரியமான தேகாதி பிரபஞ் சத்தை மாயை தாமாட்டாது; ஆன்மாக்களே அத்தேகங்களை எடுக்கும் என்னில்; தேகங்கள் எடுக்குமுன்னுள்ள கேவலநிலை யில், ஆன்மாக்களுக்கு அறிவின்மையால் ஆன்மாக்களும் அவைகளை எடுக்கமாட்டா; ஆகையால் சிவபெருமான் ஒரு வரே நிமித்தகாரணராய் நின்று எல்லாவற்றையும் உண்டாக் குவர்.

The bodies assumed by souls appear and perish in various forms, changing according to their good and evil deeds, and they go to heaven and hell. If it is said that Maya provides those bodies, Maya is an inert substance incapable of action; therefore, Maya herself cannot create the world of bodies and other things that are products of Maya. If it is said that the souls themselves assume those bodies, then, in the kevala state before assuming bodies, the souls too cannot assume them, since they lack knowledge. Therefore, Lord Shiva alone, standing as the efficient cause, brings everything into existence.

Passage 3

ஒரு காரியஙிகழ்ச்சிக்கு மூன்று காரணங்கள் வேண்டப் படும். அவை * முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தகார ணம் என்பன. இவ்வுலகில் குடமாகிய காரியத்துக்கு முதற் நாரணம் மண்ணும், தண்க்காரணம் திரிகையும், நிமித்தகார ணம் குலாலனுமாகக் காண்கின் றோம். ஆராயுங்கால் தநுகரண புவன போகமெனப்படும் பிரபஞ்சமாகிய காரியத்

Three causes are required for the occurrence of any effect. They are the *material cause, the instrumental cause, and the efficient cause. In this world, for the effect called a pot, we see that clay is the material cause, the potter’s wheel is the instrumental cause, and the potter is the efficient cause. On examination, for the effect called the universe—consisting of body, instruments, worlds, and experiences—

Passage 4

துக்கும் சுத்த மாயை அசுத்த மாயை பிரகிருதி மாயை யென் னும் மூன்றும் மண்போல முதற்காரணமாகவும், தமது சத் தியே திரிகைபோலத் துணைக்காரணமாகவும், சிவபெருமான் குலாலன்போல நிமித்த காரணமாகி நின்று அப்பிரபஞ்சங் களைத் தோற்றுவிப்பர்.

the three entities called pure Maya, impure Maya, and Prakriti Maya serve as the material cause, like clay; their own Shakti serves as the instrumental cause, like the potter’s wheel; and Lord Shiva, standing as the efficient cause, creates those universes, like the potter.