31. The maturation of the māyā mala
Passage 1
மாயாமல பரிபாகம்.
The maturation of the māyā mala.
Passage 2
ஒடுக்கமும் தோற்றமும் மூறையே கருமமலமும் ஆணவ மலமும் பரிபாகமாதற் பொருட்டென்றதனால் நிலைத்தல் மாயா மலபரிபாகமாதற் பொருட்டெனக் கொள்ளுதல் வேண்டும். நிலைத்தலினால், மாயாமலம் பரிபாகமாதல் எவ்வாறெனில்; மாயை என்பது மயக்கத்தைச் செய்வதாம். மயக்கமாவது ஒன்றைப் பிறிதொன்றாக உணரும் விபரீத உணர்ச்சியாம். அதாவது நித்தமல்லாத உலகத்தை நித்தமென உணர்த லாம். இவ்விபரீத உணர்ச்சியின் கேடு மாயாமலபரிபாக மெனப்படும்.
Since dissolution and manifestation respectively serve the maturation of the karma mala and the āṇava mala, persistence must be understood as serving the maturation of the māyā mala. As for how the māyā mala reaches maturation through persistence: māyā is that which produces delusion. Delusion is the erroneous perception of one thing as another. That is, it is perceiving the impermanent world as permanent. The removal of this erroneous perception is called the maturation of the māyā mala.
Passage 3
இது நித்தமென்றெண்ணப்படும் உலகம் அநித்தமாதலை அனுபவத்திற் காண்டலால் உண்டாம். அவ்வாறு அனுப வத்திற் காண்பதற்குச் சிறிது காலமேனும் உலகம் நிலைத் திருத்தல் வேண்டுமாதலின், நிலைத்தல் மாயாமலபரிபாகத்தின் பொருட்டாயிற்று.
This occurs because the world thought to be permanent is found through experience to be impermanent. For it to be perceived through experience, the world must persist for at least some period; therefore, persistence exists for the sake of the maturation of the māyā mala.
Passage 4
இவ்வாறு ஆணவமல பரிபாகத்தின் பொருட்டு உலகந் தோன்றி, மாயாமல பரிபாகத்தின் பொருட்டு நிலைத்து, கன்ம மலபரிபாகத்தின் பொருட்டு ஒடுங்குமாறு அறிக.
Thus, understand that the world arises for the maturation of the āṇava mala, endures for the maturation of the māyāmala, and dissolves for the maturation of the karma mala.
Passage 5
சூக்கும பஞ்சகிருத்தியம்.
The Subtle Fivefold Divine Activity.
Passage 6
சர்வசங்கார காலத்திலே ஆன்மாக்கள் மாயையிலே ஒடுங்கிக் கிடந்தவிடத்தும், சிவபெருமான் மீளப்படைத்தற் கேதுவாக்கப்படும் சூக்கும பஞ்சகிருத்தியத்தைச் செய்தருளு வர்.
Even when souls remain dissolved in māyā at the time of the total dissolution, Lord Shiva performs the subtle fivefold divine activity, which serves as the cause for their subsequent creation.
Passage 7
மலபரிபாக தாரகம்மியத்திற் கியைந்தவாறு சிவபெரு மான் ஆன்மாக்களுக்கு உணர்த்தற்பாலனவற்றை உணர்த் துதல் அநுக்கிரகம். தடுத்தற்பாலனவற்றைத் தடுத்தல் திரோபவம். சஞ்சித கன்மங்களைப் பக்குவப்படுத்தல் சங்கா ரம். மாயாகாரியங்களைப் பிரசவோன்முகமாகச் செய்தல் திதி. †சேதனாசேதனப் பொருள்களைப் பார்த்துக்கொண் டிருத்தல் சிருட்டி. இதுவே கேவலாவத்தையில் நிகழும் சூக்கும பஞ்சகிருத்தியமாம்.
According to the course of action appropriate to the maturation of the impurities, making the souls aware of what they ought to know is grace (anugraha). Preventing what ought to be prevented is concealment (tirobhava). Bringing the accumulated karmas to maturity is dissolution (sangāra). Making the products of māyā ready for manifestation is preservation (sthiti). †Keeping watch over sentient and insentient entities is creation (sṛṣṭi). This is the subtle fivefold divine activity that takes place in the kevala state.
Passage 8
கந்தபுராணம்.
Kandha Puranam.
Passage 9
கடல்விட நுகர்ந்த தொல்லைக் கடவுள்பின் னழிக்குங் காலை புடலுபி சகிலம் யாவு மொடுந்கிய விடம் தன்றோ சுடலைய தாகு மந்தச் சுடலைகா ணனைய சோதி நடநவில் கின்ற விவல்லை நாடருந் தகைமைத் தஃதே.
When the ancient Lord, having swallowed the poison more potent than the ocean, destroyed it, did not the poison, together with all the worlds, subside? That cremation ground became the cremation ground itself; that radiant One, resembling the cremation ground, dances there. Such is the greatness difficult for the world to know.
Passage 10
திருநாவுக்கர சுராயனார் தனித்திருவிருத்தம்.
The Separate Tiruviruttam of Tirunavukkarasar.
Passage 11
‡ பெருங்கடன் மூடிப் பிரளபங் கொண்டு பிரமனும் போய் இருங்கடன் மூடியிறக்கு மிறந்தான் களேபாமுங் கருங்கடல் வண்ணன் களேபா முங்கொண்டுகங்காளராய் வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.
‡ Covering the vast ocean, bringing about the deluge, Brahma too perished; and when the dark-ocean-hued One likewise took the corpse of the one who died beneath the deep ocean and came as a skull-bearing mendicant, our Lord, standing beyond the returning ocean, plays the good vīṇā.
Passage 12
முத்தொழில் செய்வதால் சிவபெருமான் விகாரமுறார்.
Lord Shiva does not undergo any change by performing the three divine functions.
Passage 13
இனி, சிவபெருமான் சிருட்டி முதலிய தொழில்களை இடையறாது செய்தலினாலே பாரமெய்தி விகாரி யாகாரோ
Now, if it is asked whether Lord Shiva becomes burdened and undergoes change because He continuously performs the functions beginning with creation,
Passage 14
எனில்; சூரியனது சந்திதான த்தில் சூரியகாந்தக் கல்லிலிருந்து நெருப்புத் தோன்றுதலும், தாமரை மலர்தலும், நீர் வற்றுத லும் ஆகிய முத்தொழில்களும் நடைபெறினும், அவற்றினாற் சூரியன் விகார மெய்தாது நிற்றல்போலச் சிவபெருமானது சந்நிதியில் முத்தொழிலும் நடைபெறினும், அவற்றாற் பரம சிவன் விகாரமடையாது நிற்பர் என்பதாம். ஆதலால் சிவ பெருமான் நிர் விகாரி எனப்படுவர்.
the answer is as follows: In the presence of the sun, the three functions of fire emerging from a sunstone, the blossoming of the lotus, and the drying up of water take place; yet, just as the sun remains unchanged by them, even though the three divine functions take place in the presence of Lord Shiva, Parashiva remains unaffected by them. Therefore, Lord Shiva is called the Changeless One.
Passage 15
முத்தொழிற்கும் சுதந்திரம் சிவபெருமானுக்கேயுண்டு.
The freedom to perform all three divine functions belongs exclusively to Lord Shiva.
Passage 16
பிரம விட்டுணு முதலாயினோர் பிரகிருதி மாயைவரையு முள்ளவர்கள்; முப்பத்தாறு தத்துவ வரம்பைக் கடந்தவராய், பஞ்சகிருத்திய பதியாயுள்ளவர் பரமசிவனொருவரேயாவர். பிரம விட்டுணுக்கள் புண்ணிய விசேடத்தால் முகல்வனா ருடைய அதிகாரத்தை அவருடைய ஏவலாற் பெற்றவர்களன் றிப் படைத்தல் காத்தல் என்னுந் தொழில்களுக்கு அவ்விரு வரும் சுதந்திரர் அல்லர். *
Brahma, Vishnu, and others are subject to Prakriti Maya; only the Supreme Shiva, who transcends the bounds of the thirty-six tattvas and is the Lord responsible for the five divine acts, possesses such sovereignty. Brahma and Vishnu received authority over the respective functions of creation and preservation from the Lord through His command, owing to their special merit; neither of them is independent in carrying out these functions.
Passage 17
கந்தபுராணம் உபதேசப்படலம் செ. 31.
Kandapuranam, Upadesa Padalam, verse 31.
Passage 18
பதியரன் பாசந் தன்னிற் பட்டுழல் பசுநா மென் விதியொடு மறைகள் கூறு மெய்மையைத் தெளிய வேண்டின் இதுவென வுரைப்பன் யாங்க ளிவ்வர சிபற்ற வீசன் அதிர்கழ லருச்சித் தேத்து மாலபம் பலவுக் காண்டி.
If we, the souls, wandering in bondage to the Lord, the Master, and the fetter, are to understand clearly the truth proclaimed by the Vedas in accordance with destiny, we shall explain it thus: behold and worship the resounding ankleted feet of the Lord who performed this royal act, and witness the many wonderful deeds.
Passage 19
விட்டுணுவுக்குக் காத்தற்றொழில் சுதந்திரமாயின், அவர் தம்முடைய மகனாகிய மன்மதனைச் சிவபெருமான் நீறாக்கிய காலத்து நீறுபடாது காத்திருக்கலாம். பிரமாவுக்குப் படைப் புத் தொழில் சுதந்திரமாயின், சிவபெருமானாற் கொய்யப்
If preservation were an independent function of Vishnu, then, when Shiva reduced his son Manmatha to ashes, he could have preserved him from being reduced to ashes. If creation were an independent function of Brahma, then, when Shiva cut off his head, he could have preserved himself from being beheaded.
Passage 20
பட்ட தமது தலையை மீளப் படைத்திருக்கலாம். அங்ஙனம் செய்யாமையினால், அவர்களுக்கு அத்தொழில்கள் சுதந்திர மாகாமை உணரப்படும். அயன் அரி இருவரும் பரமசிவ னது ஏவுதலினாலே தங்கள் தங்கள் கிருத்தியங்களைச் செய் கின்றமையினால் அவர்களுக்கு மு.கன்மை சிறிதேனுமில்லை; எல்லா முதன்மையும் சிவபெருமானுக்கே உரியனவாம்.
They might have recreated their own severed heads. Since they did not do so, it is understood that those functions are not independent in them. As Brahma and Vishnu perform their respective functions only by the command of Paramashiva, they possess not even the slightest degree of primacy; all primacy belongs solely to Lord Shiva.