35. Tirodhanashakti
Passage 1
திரோதானசத்தி.
Tirodhanashakti.
Passage 2
*ஆன்மாவின் இச்சாஞானக் கிரியைகளை மறைக்கும் ஆணவமல சத்தியைச் செலுத்தி நிற்றலால், பராசத்தி திரோ தானசத்தி எனப்படும். மலங்களைத் தொழிற்படுத்துக் திரோ தானாசத்தி பராசத்தியில் அடங்குமாயினும், தொழில் வேற் றுமைபற்றி வேறு வைத்தெண்ணப்படும்.
*Because it operates the power of the anava mala that conceals the will, knowledge, and action of the soul, Parashakti is called Tirodhanashakti. Although Tirodhanashakti, which activates the malas, is included in Parashakti, it is considered separately because its function differs.
Passage 3
வேற்றுமையாவது பராசத்தி கருணையொன்றே செய்து நிற்கும். திரோதான சத்திர் கருணை காரணமாக அவரவர் செய்த கன்மத்துக்கு ஏற்றவாறு ஆன்ம அறிவை மறைத்து, தானும் மறைந்து, நின்று மாயாகாரியங்களை விரித்துக்கலாதி அறிவுகளைக் கொடுக்கும். ஆன்மாக்கள் அவ்வறிவைப் பொருந்தி வேத முதலிய நூல்களை ஓதியுணர்ந்தாராயினும், அவர்களுடைய கன்ம அளவிற் சிவபெருமானை அறிய வொட்டாது மறைத்து நிற்கும்.
The difference is that Parashakti remains engaged solely in grace. Tirodhanashakti, motivated by grace, conceals the soul’s knowledge according to the karma performed by each soul, conceals itself as well, and expands the effects of maya, bestowing the various forms of knowledge beginning with the kalas. Although souls, possessing that knowledge, may study and understand the Vedas and other scriptures, it remains concealed from them, preventing them from knowing Lord Shiva beyond the measure determined by their karma.
Passage 4
இப்படி மலத்தோடு கூடிநின்று காரியப்படுத்தி வேண்டு முபாயங்களைச் செய்தலால், சிவசத்தியாகிய அதனை மலத் தோடுங் கூட்டி மலமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். ஆயினும் அது மலமன்று; உயிர்கள்மேல் இரங்கிச் சிவபெரு மானுடைய திருவடிகளை அடையும்படி அதற்கேற்ற வகை களைச் செய்துகொண்டு, மிகுந்த பேரருளாகவே விளங்கும்.
Since it remains united with impurity, brings about effects, and carries out the necessary means, the elders call it impurity by associating it with impurity, although it is the Siva-shakti. Nevertheless, it is not impurity; out of compassion for souls, it manifests as supreme grace, undertaking the appropriate means to enable them to attain the sacred feet of Lord Shiva.
Passage 5
இருவினையொப்பும் மலபாகமும் உண்டான அளவில் திரோதானசத்தி அறக்கருணை கொண்டு ஆன்மா சிவபெரு மானை அடையுமாறு செலுத்தி நிற்கும். இதனை மலமென் பது உபசாரமாம். இச்சத்தி, ஆதிசத்தியென்றும் பெயர் பெறும்.
When the balance of the two kinds of karma and the ripening of impurity have occurred, Tirodhana-shakti, assuming the form of grace, directs the soul toward attaining Lord Shiva and remains so. Calling this impurity is merely a figurative usage. This shakti is also known as Adi-shakti.
Passage 6
மாயை.
Maya.
Passage 7
மா—ஒடுங்குதல், யா—தோன்றுதல். எனவே, பிரபஞ்ச மெல்லாந் தன்னிடத்து ஒடுங்குதற்கும், தன்னிடத்தில் தோன் றுதற்குங் காரணமாயுள்ளது மாயையாம். மாயையானது சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என மூவகைப் படும்.
Mā—withdrawal; yā—manifestation. Thus, maya is that which causes the entire universe both to withdraw into itself and to emerge from itself. Maya is of three kinds: pure maya, impure maya, and Prakriti maya.