36. Pure Māyā
Passage 1
சுத்தமாயை.
Pure Māyā.
Passage 2
சுத்தமாயையாவது, நித்தியமாய், வியாபகமாய், அருவ மாய், சடமாய், மயக்கஞ் செய்யாததாய், சொல்வடிவும் சுத்த மாகிய பொருள் வடிவுந் தோன்றுதற்கு முதற்காரணமாய், மூவகை யான்மாக்களிடத்தும் நிறைவுடையதாய், விஞ்ஞானா கலருக்கும் பிரளயாகலருக்கும் தன் காரியமாகிய விந்துவி லிருந்து சுத்த தனு கரண புவன போகங்களை உண்டாக்கிக் கொடுப்பதாய் உள்ளது.
Pure Māyā is eternal, all-pervading, formless, insentient, non-delusive, and the primary cause from which both the form of words and the pure form of objects arise. It is present in its fullness in the three kinds of souls. From Bindu, its effect, it produces and provides the pure bodies, instruments, worlds, and experiences for Vijñānākalars and Pralayākalars.
Passage 3
இதிலிருந்து சொல்வடிவும் பொருள்வடிவுமாகிய இரு வகைப் பிரபஞ்சங்களையுந் தோற்றுவித்தற் பொருட்டு ஆதி சத்தி தொழிற்படுங்கால் இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி என முத்திறப்படும்.
When Ādi Śakti functions in order to create from this the two kinds of universes—the universe in the form of words and the universe in the form of objects—it becomes threefold as Icchāśakti, Jñānaśakti, and Kriyāśakti.
Passage 4
அவற்றுள், ஞானசத்தி சுத்தமாயையைப் பொருந்தி, வியாபரித்தலால் அம்மாயையிலிருந்து சிவதத்துவமெனப் படும் நாததத்துவங் தோன்றும்.
Of these, when Jñānaśakti unites with Pure Māyā and operates through it, Nāda-tattva, known as Śiva-tattva, arises from that Māyā.
Passage 5
அந்த நாத்தத்துவத்திலே கிரியாசத்தி பொருந்தித் தொழில் செய்தலால், சத்திதத்துவம் எனப்படும் விந்து தத்து வம் தோன்றும்.
As Kriya Shakti combines with and operates within that Nada Tattva, the Bindu Tattva, known as Shakti Tattva, arises.
Passage 6
அவ்விந்துவில் ஞானசத்தியும் கிரியாசத்தியும் சமமாக வியாபரித்தலால், சாதாக்கிய தத்துவந் தோன்றும்.
As Jnana Shakti and Kriya Shakti operate equally throughout that Bindu, the Sadakhya Tattva arises.
Passage 7
சாதாக்கிய தத்துவத்திலே கிரியை ஏறி ஞானங்குறைந்து தொழில் செய்தலால் மகேசுவர தத்துவந் தோன்றும்.
As Kriya predominates and Jnana diminishes and operates within the Sadakhya Tattva, the Maheshvara Tattva arises.
Passage 8
மகேசுவரதத்துவத்திலே ஞானமேறிக் கிரியை குறைந்து வியாபரித்தலால் சுத்தவித்தியாகத்துவந் தோன்றும்.
As Jnana predominates and Kriya diminishes and pervades the Maheshvara Tattva, the Shuddhavidya Tattva arises.
Passage 9
நாததத்துவத்திற் சிவமும், விந்துதத்துவத்தில் சத்தியும், சாதாக்கிய தத்துவத்திற் சதாசிவமும், மரேசுவரதத்துவத் தில் மகேசுவரனும், சுத்தவித்தியாதத்துவத்தின் உருத்திரனும் என்னும் ஐவரும் அதிபராய் நின்று தொழில் செய்வர்.
In the Nāda Tattva, Śiva; in the Bindu Tattva, Śakti; in the Sādākhya Tattva, Sadāśiva; in the Maheśvara Tattva, Maheśvara; and in the Śuddhavidyā Tattva, Rudra—these five preside and perform their respective functions.
Passage 10
இவ்வைந்து தத்துவங்களிலும் முதல்வனது ஞானசத்தி யும் கிரியாசத்தியும் அதிட்டித்தலாலும். சிவதத்துவ புவன வாசிகளுக்கு * சர்வஞ்ஞத்தவம் † சர்வகர்த்திருத்தூவங்களை விளக்குதற்குச் சாதனங்களாகையாலும் இவை சுத்தகத் துவம் என்றும், சிவதத்துவம் என்றும், +19ரேரககாண்டம் என்றும் பெயர்பெறும்.
Since the Jñānaśakti and Kriyāśakti of the Lord preside over these five tattvas, and since they serve as the means for revealing omniscience and omnipotence to the inhabitants of the worlds of the Śiva Tattva, these are called Śuddha Tattva, Śiva Tattva, and +19ரேரககாண்டம் .
Passage 11
இத் கத்துவங்களேயன்றிச் சாந்தியதீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி என்னும் ஐந்து கலைகளும், சுத்தமாகிய புவனங்களும் சுத்தமாயையிலிருக்கு தோன் றும்.
Apart from these tattvas, the five kalās—Śāntyatīta, Śānti, Vidyā, Pratiṣṭhā, and Nivṛtti—and the pure worlds also arise from Śuddhamāyā.
Passage 12
விந்துதத்துவத்தில் சூக்குமை, பைசந்தி. மத்திமை வைகரி என்னும் நான்கு வாக்குக்களும், ஐம்பத்தோரக்கரங் களும், எண்பத்தொரு பதங்களும், பதினொரு மந்திரங்களும்,
In the Bindu Tattva are the four kinds of speech—Sūkṣmā, Paiśantī, Madhyamā, and Vaikharī—the fifty-one letters, the eighty-one words, and the eleven mantras,
Passage 13
சத்தகோடி மகாமந்திரங்களும், விஞ்ஞானகலர் பிரளயாகல ருக்குத் தனு கரண புவன போகங்களுக் தோன்றும். இவை கள் சுத்தமாயா காரியங்களாம்.
The billions of great mantras also arise for the Vijnanakalars and Pralayakalars as bodies, instruments, worlds, and experiences. These are effects of Pure Maya.
Passage 14
அக்கரம், பதம், மந்திரம் என்னும் மூன்றும் சொற் பிர பஞ்சங்களாம். கலை, தத்துவம், புவனம் என்னும் மூன்றும் பொருட் பிரயஞ்சங்களாம்.
The three—letter, word, and mantra—constitute the verbal universe. The three—kala, tattva, and bhuvana— constitute the universe of objects.