Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

39. The Nature of Karma

Passage 1

கன்மத்தினியல்பு.

The Nature of Karma.

Passage 2

† கன்மமானது ஆன்மாக்கள் முற்பிறப்பிற்செய்த இ.கம் அகிதங்களுக்கீடாக எடுக்கும் உடம்புகளுக்குக் காரணமாய், அவ்வுடம்புகளால் அனுபவிக்கப்படும் பலவிதமான சுக துத் கங்களைத் தருவதாய், □ பிரவாகாநாதியாய், பல பேதங்களாய், ஆன்மாக்களை விட்டு நீங்காகதாய், மனம் வாக்குக் காயங்களி னாற் செய்யப்படும் இயல்பினையுடையதாய், புத்திதத்துவம் பற்றுக்கோடாய், இன்ப துன்பங்களைத் தரும் புண்ணிய பாவ வடிவாய்ச் சங்கார காலத்தில் உயிர்கள் மாயையில் ஒடுங்கும்

† The Agamas state that karma is the cause of the bodies assumed by souls in accordance with the good and evil deeds they performed in previous births; that it bestows the various kinds of pleasures and sufferings experienced through those bodies; that it is beginningless in its continuous flow; that it exists in many forms; that it does not leave the souls; that it is of a nature to be performed through the mind, speech, and body; that its support is the principle of intellect; that it takes the form of merit and demerit, which bestow pleasure and pain; and that, at the time of dissolution, when souls become absorbed in Maya,

Passage 3

பொழுதும் அவ்வுயிர்களைவிட்டு நீங்காது அம்மாயையில் ஒடுங் கும் இயல்புடையதாயிருக்கும் என்று ஆகமங்கள் சொல்லும்

it too remains absorbed in that Maya without leaving those souls.

Passage 4

இக்கன்மமானது சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என மூவகைப்படும். அம்மூவகை வினைக்கும் முதற் காரண மாயுள்ளது ஆணவமலமாம்.

This karma is of three kinds: Sanchita, Prarabdha, and Agami. The primordial cause underlying these three kinds of karma is the impurity of Anava.

Passage 5

சஞ்சிதமும், பிராரத்தமும்.

Sanchita and Prarabdha.

Passage 6

கன்மம் பயன் தரும் முறை மூன்று விதமாம். அவை சாதி, ஆயுள், போகம் என்பன. முற்பிறப்பிலே செய்யப் பட்ட நல்வினை தீவினைகள் இப்பிறப்பிற் சாதி, ஆயுள், போகம் என்பவற்றிற்குக் காரணமாம். அவை 19 றக்குழுன் சூக்குமமாய்க கருவினுள் அமைந்து கிடந்து, பிறந்த பின் அனுபவத்துக்கு வருவனவாகும்.

Karma yields its fruits in three ways. These are caste, lifespan, and experiences. The good and evil deeds performed in a previous birth become the causes of caste, lifespan, and experiences in this birth. They remain subtly present within the embryo in the form of the nineteen principles, and after birth they come to be experienced.

Passage 7

சாதி ஆயுள், போகம் என்னும் மூன்றும், நல்வினை தீவினைகளுக்குத் தகுந்தபடி உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி,

The three—caste, lifespan, and experiences—manifest, according to the good and evil deeds, as high caste or low caste,

Passage 8

சிவஞானசித்தியார்.

Sivagnana Siddhiyar.

Passage 9

பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னு மாறுமுன் கருவுட் பட்ட தவ்விதி யனுப வத்தா லேறிடு முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது தேறுநீ யினிச்செய் கன்ம மேலுடற் சேரு மென்றே.

Before the loss of prosperity, pleasure, disease, old age, and death befall you, know that the karma performed in the past is the cause of these experiences that arise after entering the womb; therefore, understand that the karma you perform now will join your future body.

Passage 10

சிவப்பிரகாசம்.

Sivaprakasham.

Passage 11

கன்மநெறி திரிவித நற்சாதி யாயுபோகக் கடனதென வருமூன்று முயிரொன்றிற் கலத்தல் தொன்மைய தூழல்ல துணவாகா தானுந் தொடங்கடைவி னடைய தே தோன்று மாறித் தன்மைதரு தெய்விகமுற் பவுதிகமான் மிகமாந் தகையிலுறும் சேதனசே தனத்தாலுஞ் சாரு நன்மையொடு தீமைதரு சேதன னுக் கிவ ணூ ணுடிலத னூழ்வினையா நணுகுந் தானே. அதிக ஆயுள் அற்பாயுள், அதிக போகம் அற்ப போகம் என ஒவ்வொன்று இவ்விரண்டாய் அறுவகைப்படும். அவற் றுள்ளும் பல பேதங்கள் உண்டு. இவைகளெல்லாம் கன்மத் தின் பயனாக வருவனவாம்.

The path of karma is threefold. The three—good birth, lifespan, and enjoyments—arise as obligations to be experienced by a single soul. Their beginning is ancient; they are not without cause. Each arises according to its own beginning and attainment, assuming a distinct nature. It takes form through the divine and material bodies and through the conscious and insentient entities. It approaches the conscious soul, bringing both good and evil, and reaches it as the karma of the body. Great longevity and short longevity, abundant enjoyment and meager enjoyment —each of these is divided into two, making six kinds in all. Among them, too, there are many distinctions. All these arise as the fruits of karma.

Passage 12

இவ்வுடம்புண்டாதற்குக் காரணம், முற்பிறவியிலே செய் யப்பட்ட கன்மம். அவ்வுடம்புக்குக் காரணம் அதற்கு முந் திய உடம்பில் நின்று செய்யப்பட்ட கன்மம். இப்படியே வித்துக்கு மரமும் மரத்துக்கு வித்தும் காரணமாதல் போல, ஒன்றுக்கொன்று காரணமாயிருக்கும். இப்படி எது முதல் உண்டாகி வருமென்பது சொல்ல முடியாததாய்த் தொன்று தொட்டு வரும். இப்படி வருதல் பிரவாகாநாதி எனப்படும். பிரவாகம் என்பது நீர்ப்பெருக்கு.

The reason this body comes into existence is the karma performed in the previous birth. The reason for that body is the karma performed in the body preceding it. Just as a tree is caused by a seed and a seed by a tree, each is mutually the cause of the other. Thus, it is impossible to say which came first; it has existed from time immemorial. This manner of continuation is called pravāhānādi. Pravāha means a flowing stream.

Passage 13

ஆற்று நீர் ஓடும்பொழுது ஒன்று போக ஒன்றாய்ப் பெருகி வந்துகொண்டிருப்பது போல, உடம்பும் வினையும் ஒன்றுபோக ஒன்றாய்த் தொன்றுதொட்டு அநாதியாக வந்து கொண்டிருக்கும். அநாதி—தொடக்கமும் ஈறுமின்றி என் றும் ஒரு தன்மையாயிருப்பது. பிரவாகானாதி—தோன்றி அழிந்து தொடர்பாய் வருதல்.

Just as, when river water flows, one portion passes away while another swells and continues to come, so too the body and karma have continued from time immemorial, one arising as another while one passes away. Anādi means existing always in one and the same state, without either a beginning or an end. Pravāhānādi means arising, perishing, and continuing in succession.