Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

45. Mayeyam

Passage 1

மாயேயம்.

Mayeyam.

Passage 2

அசுத்தமாயா காரியங்கள் மாயையாலாகிய தத்துவங் களும், அவைகளாலாகிய தூது கரண புவன போகங்களுமாம்.

The effects of impure Maya are the categories originating from Maya, together with the instruments, worlds, and experiences produced by them.

Passage 3

ஈசுவர தத்துவத்தில் வசிக்கின்ற அட்டவித்தியேசுவர ரின் தலைவராகிய அநந்தேசுவரர் சிவபெருமானது அதிகாரத் தைப் பெற்று, வாயுவானது சமுத்திரத்தில் ஒரு பகுதியை விகாரப்படுத்துவது போல அசுத்தமாயையின் ஏகதேசத்தைக் கலக்க அதிலிருந்து காலதத்துவமும், நியதிதத்துவமும், கலா தத்துவமும் முறையே தோன்றும்.

Ananteshvara, the chief of the eight Vidyeshvaras residing in the Ishvara Tattva, receives the authority of Lord Shiva and stirs a portion of the impure Maya, just as the wind disturbs a part of the ocean. From it arise, in succession, the Kala Tattva, the Niyati Tattva, and the Kala Tattva.