Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

48. The Tattva of Kalā

Passage 1

கலாதத்துவம்.

The Tattva of Kalā.

Passage 2

கிரியாசத்தி சத்திதத்துவ வாயிலாகக் கலையை அதிட்டிக் கக் கலாதத்துவம் ஆணவமலத்தைச் சிறிது நீக்கி, ஆன்மா வின் கிரியாசத்தியை விளக்கும்.

Through the medium of the Tattva of Śakti, the Tattva of Kalā, presiding over Kriyāśakti, slightly removes the āṇava mala and manifests the soul’s Kriyāśakti.

Passage 3

கலா என்பதற்கு நீக்கலும் நியமித்தலும் அர்த்தமாகை யால், அந்தக் கலையானது ஆணவ இருளைச் சிறிது நீக்கி, நியதிரூபமான போகநியமனத்தைச் செய்யும். அது எங்ஙன மெனில்; எங்கும் மூடிக்கொண்டிருக்கும் அந்தகாரத்தில் தீப மானது அந்த இருளை ஒரு பக்கத்திலொதுக்கி, விஷயத்தைக் காட்டுவதுபோல, ஆன்ம அறிவை மறைத்துக்கொண்டிருக் கும் மலத்தை ஒரு பக்கத்தில் தள்ளி அறிவையுண்டாக்கும்.

Since Kalā means removal and regulation, that Kalā slightly removes the darkness of āṇava and establishes the regulation of experience in the form of Niyati. How is this? Just as a lamp, in the darkness that envelops everything, pushes the darkness aside in one direction and reveals an object, so it pushes aside, in one direction, the mala that conceals the soul’s knowledge and produces awareness.