Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

51. The Puruṣa Tattva

Passage 1

புருடதத்துவம்.

The Puruṣa Tattva.

Passage 2

காலம் முதலிய ஐந்து தத்துவங்களும் கூடிய சங்கத்தில் புருடதத்துவந் தோன்றும். புருடதத்தவத்தைச் சாதாக்கிய தத்துவம் காரியப்படுத்தும்.

The Puruṣa Tattva arises from the conjunction of the five tattvas beginning with Kāla. The Sādākhya Tattva brings the Puruṣa Tattva into effect.

Passage 3

இவ்வேழு தத்துவங்களும் வித்தியாதத்துவம் என்றும், சுத்தாசுத்ததத்தவம் என்றும், போககாண்டம் அல்லது போகசயித்திருகாண்டம் என்றும் கூறப்படும். இவை ஆன்

These seven tattvas are called the Vidyā Tattvas, the Śuddhāśuddha Tattvas, or the Bhogakāṇḍa, also known as the Bhogacayitṛkāṇḍa. These are the soul’s...

Passage 4

மாக்களுக்குச் சிற்றறிவை எழுப்புந் தத்துவங்கள் ஆகலால் வித்தியாதத்துவம் எனப்படும். இவ்வேழு தத்தூவங்களும் ஆன்மாக்களுக்குச் சிறிது அறிவை விளக்குதற்குச் சாதன மாகையால் சுத்தமும், சுகதுக்க மோகங்களை உண்டாக்கு வதற்குச் சாதனமாகையால் அசுத்தமுமாம். ஆகையால் சுத்தாசுத்தம் எனப்படும். ஆன்மாக்களுக்குச் சகாயமாய் நின்று போகங்களையுண்டாக்குதலால் போககாண்டம் என் றும், அவைகளைப் புசிப்பித்தலால் * போகசயித்திருகாண் டம் என்றும் கூறுவர்.

Since they awaken the limited knowledge of souls, these are called the Vidyā Tattvas. These seven tattvas are pure because they serve as means for revealing a small measure of knowledge to souls, and impure because they serve as means for producing experiences of pleasure, pain, and delusion. Therefore, they are called Śuddhāśuddha, or pure-impure. Since they remain as aids to souls and produce experiences for them, they are also called the Bhogakāṇḍa; and since they make souls partake of those experiences, they are called the Bhogasayitṛkāṇḍa.

Passage 5

இவைகள் அந்த்தேவராற் காரியப்படும். இந்த அந்த்த தேவர் அசுத்தமாயாகாரிய அதிகாரியாவர்.

These are brought into operation by Antadevar. This Antadevar is the agent and authority of the impure Māyā.