Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

56. The Classification of the Five Elements

Passage 1

பஞ்சபூதங்களின் வகை.

The Classification of the Five Elements.

Passage 2

பஞ்சபூதங்கள் அகப்பூதம், அகப்புறப்பூதம், புறப்பூதம் என மூவகைப்படும். அவற்றுள் அகப்பூதம் சூக்கும தேகத் தில் இந்திரியங்களுக்கு ஆதாரமாய் இருப்பன. இவை சூக் குமபூதமெனவும் படும்.

The five elements are of three kinds: internal elements, internal-external elements, and external elements. Among these, the internal elements serve as the basis for the sense organs in the subtle body. They are also called subtle elements.

Passage 3

அகப்புறப்பூதமாவது சரீரத்தை வளர்த்தல், உள்ளிடங் கொடுத்தல் முதலிய தொழில்களை இயற்றிக்கொண்டு, தூல தேகத்தில் இருப்பன.

The internal-external elements exist in the gross body, carrying out functions such as nourishing the body and providing it with space.

Passage 4

புறப்பூதங்கள் அண்ட புவன போக்கியப் பொருள் களுக்கு ஆதாரமாய் இடங்கொடுத்தல் முதலிய தொழில்களை இயற்றுவன.

The external elements carry out functions such as serving as the basis for, and providing space for, the objects of the cosmic worlds and their enjoyments.

Passage 5

மேலும் இவை பொதுவும் சிறப்பும் பொதுச் சிறப்பு மென முத்திறப்படும். புவன வடிவாகிய தத்துவங்கள் எல் லோருக்கும் பயன் கொடுத்தலில் பொதுவாம். சூக்குமதேக வடிவாகிய தத்துவங்கள் போக நுகர்ச்சியின் பொருட்டுத் தனக்குப் பயன்படுதலில் சிறப்பாம். தூலதேகவடிவாகிய

Furthermore, these are classified into three types: common, particular, and both common and particular. The principles that take the form of the worlds are common, as they provide benefit to everyone. The principles that take the form of subtle bodies are particular, as they serve the individual for the enjoyment of sensory experiences. Those that take the form of gross bodies...

Passage 6

தத்துவங்கள் தனது போக நுகர்ச்சிக்கும் மனைவி முதலி யோர் அனுபவித்தற்கும் வாய்த்தமையின் பொதுச் சிறப் பாம்.

Since the tattvas serve both one’s own enjoyment and the experiences of one’s wife and others, they possess common and particular characteristics.

Passage 7

இதனால், புவனவடிவாகிய தத்துவங்கள் முப்பத்தாறாய்ப் பொதுவாய்ப் புறத்தே நிற்றல்போல, அகத்தே ஆன்மாவைப் பற்றி, முப்பத்தாறு தத்துவங்களும் சூக்குமமாய் நிற்குமென அறிக. இந்த முப்பத்தாறு தத்துவங்களுள்ளே சுத்த தத்து வம் ஐந்தும் சடமாயினும் சிற்சத்திக்குச் சுதந்திர வடிவாத லின் சேதனம் எனப்படும். ஏனைய முப்பத்தொரு தத்துவங் களும் அசித்து எனப்படும்.

Accordingly, just as the thirty-six tattvas, which constitute the form of the universe, stand externally in a general form, understand that the same thirty-six tattvas exist internally in a subtle form, encompassing the soul. Among these thirty-six tattvas, the five pure tattvas, though insentient, are called sentient because they constitute the independent form of Cit-Shakti. The remaining thirty-one tattvas are called insentient.

Passage 8

திருநாவுக்கரசு சுவாமிகள்.

Saint Tirunavukkarasar.

Passage 9

திருநேரிசை.

Tirunerisai.

Passage 10

முப்பதுமுப்பத்தா றுமுப்பதுமிடுகுாம்பை

The thirty and thirty-six, and the thirty that are cast into the body,

Passage 11

அப்பர்போலைவர்வந்துவதுதருகிதவிடென்று

Like Appar, they come and say, “Bring this and that here,”

Passage 12

ஒப்பவே நலியலு ற்றா லுய்யுமாற றியமாட்டேன்

If I am afflicted by them all alike, I do not know the way to be saved.