Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

62. The sheath-body

Passage 1

கஞ்சுகசரீரம்.

The sheath-body.

Passage 2

அதன்பின் அவ்வசுத்தமாயையினின்றும் தோன்றும் கலாதத்துவம் முதலிய சட்டையாகிய கஞ்சுகசரீரத்தைப் பொருந்தும். பொருந்தவே, மூன் பொதுவகையால் விளங் கிய அறிவிச்சை செயல்கள் பிரிந்து தோன்றிச் சிறப்பு வகை யால் விளங்கப்பெறும்.

Thereafter, it assumes the Kañcuka body, consisting of the coverings beginning with the Kalā tattva, which arise from that impure Māyā. Once it assumes this body, the knowledge, desire, and action that had manifested in a general manner become differentiated and manifest in a particular manner.