65. The gross body
Passage 1
தூலசரீரம்.
The gross body.
Passage 2
அதன்பின் தூலதேகத்தைப் பொருந்தி எவ்விடத்தும் போக்கு வரவுகள் செய்து, தூலரூபமாகியவினைகளைச் செய்து அவ்வப் பயன்களை அனுபவிக்கும்.
Thereafter, possessing the gross body, it moves about everywhere, performs actions through its gross form, and experiences the corresponding results.
Passage 3
தூலவுடம்பாவது சாதி குலம் பிறப்பு முதலியவைகளால் அபிமானஞ் செய்தற்கு இடமாய் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்சபூதமும் கூடிப் பரிணமித்த உரு உடம்பு.
The gross body is the embodied form that has evolved through the combination of the five elements—earth, water, fire, air, and ether—and serves as the basis for identification with caste, lineage, birth, and the like.