66. The Five Koshas
Passage 1
பஞ்சகோசங்கள்.
The Five Koshas
Passage 2
இவ்வாறு ஆன்மாக்கள் பொருந்தும் ஐந்து சரீரங்களும் ஐந்து கோசம் எனப் பெயர் பெறும். ஆன்மாவுக்கு ஐந்து சரீ ரங்களும் வடிவமாம். வடிவாய் நிற்குங்கால் காரணசரீரம் ஆனந்தமய கோசம் எனவும், கஞ்சுகசரீரம் விஞ்ஞானமய கோசம் எனவும், குணசரீரம் மனேமயகோசம் எனவும், சூக் குமசரீரம் பிராணமயகோசம் எனவும், தூலசரீரம் அன்ன மயகோசம் எனவும் பெயர்பெறும். *
Thus, the five bodies with which souls are associated are called the five koshas. The five bodies are also the forms of the soul. When they exist as forms, the causal body is called the bliss-filled sheath (Anandamaya Kosha), the encasement body the knowledge-filled sheath (Vijnanamaya Kosha), the quality body the mind-filled sheath (Manomaya Kosha), the subtle body the vital-energy-filled sheath (Pranamaya Kosha), and the gross body the food- filled sheath (Annamaya Kosha). *
Passage 3
கேவலத்தில் அறிவிச்சை செயல்கள் விளங்கப்பெறாது நின்ற ஆன்மா, மாயையிற் கலக்குண்ட பாகத்தைப் பொருந் தியபொழுது அறிவிச்சை செயல்கள் பொதுவகையால் விளங்கப்பெற்ற மாத்திரையே ஓரானந்தமுண்டாகப் பெற்று, அம்மயமாய் நிற்றலின், காரணசரீரம் ஆனந்தமயகோசம் எனப்படும்.
The soul, whose cognitive, volitional, and active faculties remain unmanifest in the kevala state, experiences a certain bliss merely when it becomes associated with the part of maya that has mingled with it, whereby those faculties become manifested in a general manner; since it remains pervaded by that bliss, the causal body is called the bliss-filled sheath (Anandamaya Kosha).
Passage 4
அதன்பின் கலை முதலிய ஐந்து தத்துவங்களாலாகிய கஞ்சுக சரீரத்தைப் பொருந்தி, அறிவிச்சை செயல்கள் சிறப்புவகையால் விளங்கப்பெற்று அம்மயமாய் நிற்றலின் கஞ்சுகசரீரம் விஞ்ஞானமய கோசம் எனப்படும். விஞ்ஞானம் என்பது விசேட ஞானம். அது சிறப்புவகையால் அறிவு முதலியன விளங்குதலை உணர்த்தி நின்றது.
Thereafter, by becoming associated with the encasement body constituted by the five tattvas beginning with kala, the cognitive, volitional, and active faculties become manifested in a particular manner, and since it remains pervaded by them, the encasement body is called the knowledge-filled sheath (Vijnanamaya Kosha). Vijnana means distinctive knowledge. It signifies the manifestation of knowledge and the other faculties in a particular manner.
Passage 5
அதன்பின் குணசரீரத்தைப் பொருந்தி அந்தக்கரணத் தின் தன்மை விளங்கப்பெற்று, அம்மயமாய் நிற்றலால் குண சரீரம் மனோமய கோசம் எனப்படும்.
Thereafter, by assuming the Gunasarira and becoming imbued with it through the manifestation of the nature of the inner instrument, the Gunasarira is called the Manomaya Kosha.
Passage 6
அதன்பின் சூக்கும சரீரத்தைப் பொருந்திப் பிராண வாயுவின் சம்பந் கம் பெற்று அதன் மயமாய் நிற்றலால் சூக் கும சரீரம் பிராணமய கோசம் எனப்படும்.
Thereafter, by assuming the Sukshma Sarira, entering into connection with the vital air, and becoming imbued with it, the Sukshma Sarira is called the Pranamaya Kosha.
Passage 7
சி. சித்தியார் 4-2-23.
Siddhiyar 4-2-23.
Passage 8
அகன்பின் தூலசரீரத்தைப் பொருந்தி, அச்சரீரத்தை வளர்ப்பதற்கான அன்னமயமாய் நிற்றலால் தூலசரீரம் அன்னமய கோசம் எனப்படும்.
Thereafter, by assuming the Sthula Sarira and existing as the Annamaya substance that nourishes that body, the Sthula Sarira is called the Annamaya Kosha.
Passage 9
இவ்வைங்கோசங்களும் அன்னமயம் முதல் ஒன்றுக் கொன்று சூக்குமமாய் நிற்கும். ஆன்மா இவ்வைந்கோசங் களிற் கட்டுப்பட்டு நிற்குங்கால் அதுவதுவாய் * வசிப்புண்டு ஏகதேசியாய் அவற்றிற் போக்குவரவு செய்யும்.
These five sheaths, beginning with the food sheath, each successively become subtler than the preceding one. When the soul is bound by these five sheaths, it undergoes the experience of each in turn and, as a limited entity, moves among them.
Passage 10
சிவபெருமான் தருகரணாதிகளால் மலங்களை நீக்கியருளுவர்.
Lord Shiva graciously removes the impurities through the instruments and means He provides.
Passage 11
சிவபெருமான், மாயாகாரியமாகிய கநு கரண புவன போகங்களை ஆன்மாக்களுக்குக் கொடுப்பது எகன் பொருட்டு எனில்; அவ்வான்மாக்களைப் பந்தித்த † ஆணவமலம் கன்ம மலம் என்னும் நோய்களைத் தீர்த்துப் பரஞானத்தை விளக் கிக் சிவானந்தப் பெரும் பேற்றைக் கொடுத்தற் பொருட் டாம். தநு கரணாதிகள் யாவும் மாயாமலகாரியமாகவும், ஆணவ கன்மமலங்களை இம்மாயாமலத்தால் நீக்குவரென்று கூறியது என்னையோவெனில்; ஆடையின் அழுக்கைச் சாணி உவர்மண் முதலிய 19 ヵிதோர் அழுக்கைக் கொண்டு வண்
If the reason why Lord Shiva bestows upon souls the bodies, instruments, worlds, and experiences that arise from Maya is asked, it is for the purpose of curing the diseases known as the impurities of Anava and Karma, which have bound those souls, illuminating supreme knowledge, and granting them the great attainment of Shiva’s bliss. If it is asked why it is said that all bodies, instruments, and the like are products of Maya and that the impurities of Anava and Karma are removed through this impurity of Maya, it is like removing the dirt from a garment by using materials such as cow dung, alkaline earth, and other substances that are themselves impure...
Passage 12
ணான் முழுவதும் நீக்குதல்போல, மாயாகாரியமாகிய உடல் முதலியவற்றை மருந்தாகக் கொண்டு ஏனை ஆணவ கன்ம மலங்களாகிய நோயைப் போக்கி அவ்வான்மாவைச் சிவமாந் தன்மைப் பெருவாழ்வுடையதாகச் செய்வர். *
Just as a remedy removes an illness entirely, they use the body and other products of Māyā as medicine to eliminate the diseases of Āṇava and karma, the other impurities, thereby enabling that soul to attain the great life of the nature of Śiva. *
Passage 13
சிவபெருமான் ஆன்மாக்களுக்கு உணர்த்தும் † முறைமை.
The manner in which Lord Shiva imparts knowledge to souls.
Passage 14
ஆன்மாக்கள் முதல்வன்போலத் தாமே அறியுஞ் சுதந் திர அறிவின்மையால், சிவபெருமான அறிவிக்க அறியுந் தன்மையுடையன. விளைநிலம் உழுதல் எருவிடல் முதலாக அவரவர் செய்கைக்குத் தக்க பலனைத் தருமாறு போலவும், சூரியன் பக்குவமான தாமரை முகைகளை அலர்த்துவித்தல் போலவும், சிவபெருமான் அவ்வவர் கன்மத்துக்கு ஏற்ற வாறு ஏற்றத்தாழ்வான அறிவுகளையும், பக்குவான்மாக் களுக்கு வியாபக அறிவையுங் கொடுத்தருளுவர்.
Since souls do not possess the independent knowledge by which they can know things by themselves, as the Lord does, they have the nature of knowing only when Lord Shiva makes them know. Just as ploughing the fields, applying manure, and so forth enable each person to obtain the appropriate result according to their actions, and just as the sun causes mature lotus buds to blossom, so Lord Shiva graciously bestows upon each soul, according to its karma, varying degrees of knowledge, and grants expansive knowledge to perfected souls.
Passage 15
ஐம்பொறி முதலிய கருவிகளாலும், சத்தாதி விடயங் களாலும், அறிவு முதலியவற்றை விளக்குவனவாகிய கலை வித்தை முதலிய தத்துவங்களாலும், கன்மபலனை வரையறை செய்யும் காலம் நியதி முதலிய தத்துவங்களாலும், தூலவுடம் புகளாலும், பிரத்தியட்சப் பிரமாணங்களாலும், ஆகமங்களா லும், ஆன்மாக்கள் சகல நிலையில் ஒருவன் கூட்டி உணர்த்த உணரும். கருவிகளொன்றுமின்றி நிற்குங் கேவலநிலையில், அருவப்பொருளாய் ஒன்றையும் அறியாது நிற்கும். இவ்விரு நிலைகளையும் அறியவல்ல சிவபெருமானே ஆன்மாக்கள் மேற்கொண்ட கருணையினால் மாயாகாரியங்களைக்கொண்டு ஆன்மாக்களுக்கு உயிர்க்குயிராய் நின்று அறிவிப்பர்.
Through the sense organs and other instruments; through sound and the other objects of the senses; through the tattvas such as kalā and vidyā, which elucidate knowledge and related matters; through the tattvas such as kāla and niyati, which determine the fruits of karma; through gross bodies; through direct perception; and through the Āgamas, souls in the sakala state come to know when the Lord brings them together and makes them understand. In the kevala state, in which they remain without any instruments, they abide as formless entities, knowing nothing. Lord Shiva alone, who can know both these states, out of compassion for the souls, stands as the life of their life and makes them know through the products of māyā.
Passage 16
சிவபெருமான் பிறர் அறிவிக்க வேண்டாது தாமே முதல்வராய் உயிர்களின் பொருட்டுக் கேவலாவத்தையில் அறிதல் வகையில் சூக்கும ஜந்தொழிலையும், சகலர்வத்தை யில் விடயத்தைத் தோற்றுவிக்கு முறையில் சிருட்டி முதலிய தூல ஐந்தொழிலையும், அச்சகலாவத்தையினுள்ளும் சாக் கிரத்தில் இன்ப துன்பப் பயனை ஊட்டுவிக்கு முறையில் அதி சூக்கும ஐந்தொழிலையுஞ் செய்து நிற்பர்.
Lord Shiva, needing no one else to reveal Him and Himself being the Primordial One, performs the subtle fivefold activity in the state of kevala, so that souls may gain awareness; the gross fivefold activities, beginning with creation, in the state of sakala, so that objects may arise; and, even within that state of sakala, the supremely subtle fivefold activity in the waking state, so that the fruits of pleasure and pain may be bestowed.
Passage 17
சிவபெருமான் உயிர்களுக்கு அறிவிக்குங்கால் எவ் வாறு நின்று அறிவிப்பரெனில்; இருநூற்றிருபத்துநான்கு புவனங்கள் திருமேனியாகவும், எண்பத்துநான்கு நூறாயிர யோனி பேதங்கள் அவயவங்களாகவும், இச்சாஞானக்கிரியை கள் உட்கரணமாகவுப் கொண்டு, எண்ணிறந்த உயிர்களி டத்து அறிவிற்கறிவாய் நின்று உணர்த்தவர். அவ்வா றுணர்த்துதலாகிய அதிசூக்கும ஐந்தொழிலும் மேற்கூறிய கருவிகளின் துணையைக் கொண்டன்றிச் சங்கற்ப மாத்திரை யாகவே நாடகமாகச் செய்தருளுவர்.
When Lord Shiva reveals knowledge to souls, how does He stand and make it known? He takes the 224 worlds as His divine body, the 8,400,000 varieties of wombs as His limbs, and the powers of will, knowledge, and action as His internal organs; standing as the Knowledge of knowledge within countless souls, He makes them perceive. This supremely subtle fivefold activity of revealing is graciously enacted as a mere act of will, like a drama, without the aid of the instruments mentioned above.
Passage 18
உணர்த்துதலால் வரும் பயன்.
The benefit resulting from revealing.
Passage 19
அதிசூக்கும ஐந்தொழிலாகிய அறிவித்தலால் வரும் பயன் யாதெனில், சிவபெருமான் ஆன்மாக்களுக்கு மாயா காரியங்களைக் கொண்டு விடயங்களை அறிவித்து, ஏகதேச அறிவை நிகழச்செய்து உலக போகங்களைக் கூட்டி அப் போகானுபவத்தினால் பல பிறவிகளை எய்தும்படிக்கும், அத னால் வெறுப்புத் தோன்றும்படிக்கும் செய்து, பருவம் முதிர்ந் தவிடத்து வியாபக அரிவை விளககி அவ்வறிவின் பயனாகப் பரபோகமாகிய பேரின்பத்தைக் கொடுத்தருளுவர்.
The benefit resulting from the supremely subtle fivefold activity of revealing is this: Lord Shiva reveals objects to souls through the products of maya, causes limited knowledge to arise, and increases worldly pleasures, thereby making them undergo many births through the experience of those pleasures and causing aversion to arise. When their maturity is reached, He reveals expansive knowledge and, through the fruit of that knowledge, graciously grants the supreme bliss known as transcendental enjoyment.
Passage 20
பயன் தரும் முறை. †
The method that yields results. †
Passage 21
ஆன்மாக்களுக்குப் போகங் கொடுத்து அறிவை விளக்கி மோட்சத்தைக் கொடுப்பதாகிய அக்கருணையும் சிவபெருமா
That compassion which grants souls worldly experience, illuminates their knowledge, and bestows liberation, and Lord Shiva…
Passage 22
னக்கு இயற்கைக் குணமெனப்படும் சத்தியாம். அவ்வருட் குணமாகிய சத்தியையின்றிச் சிவமில்லை. அச்சிவத்தை விட்டுச் சத்தி நீங்குதலில்லை. * உலகத்தூப் புறவிருளைக் கிரணத்தாலோட்டிக் கண்களுக்குப் பிரகாசத்தைச் செய் கின்ற சூரியன்போல, சிவபெருமான் அருட்குணமாகிய சத்தி யால் ஆன்மாக்களுக்கு மலசத்தியை நீக்கி அனுக்கிரகள் செய்வர். சூரியனுக்கு இருளை நீக்குவது இயற்கையாய், அத னால் ஆகக்கடவதோர் பயனுமின்றாதல்போல, சிவபெருமா னுக்கு அருட்குணம் மேம்படுதல் இயற்கையாய் அதனால் அவருக்கு ஆகக்கடவதோர் பயனுமில்லை.
Sakti is said to be His inherent nature. Without this Sakti, which is His gracious attribute, there is no Siva; nor can Sakti be separated from Siva. Just as the sun dispels the external darkness of the world with its rays and gives light to the eyes, Lord Siva, through Sakti—the gracious attribute—removes the impurity-power from souls and bestows His grace upon them. Just as it is the sun’s inherent nature to dispel darkness, without any benefit accruing to it thereby, so too it is Lord Siva’s inherent nature for His gracious attribute to flourish, and no benefit accrues to Him from this.
Passage 23
எவ்வெத் தெய்வத்தை வழிபடினும் சிவபெருமானே பயன் கொடுப்பர்.
Whichever deity one worships, it is Lord Shiva who grants the result.
Passage 24
நல்வினையுள்ளுஞ் சிறந்தது தெய்வ வழிபாடு. எவ்வெவ ராயினும் ஒழுக்கம் முதலிய நன்மைகளையுடையவராய்த் தத் தம் மதத்திற்கேற்றவாறு எவ்வெவ்வடிவாய், எவ்வெவ்வண்ண மாய், எவ்வப் பெயர் கொண்டு எவ்வெத்தெய்வத்தை வழிபடி னும் அவ்வவ்வடிவாய், அவ்வவ்வண்ணமாய், அவ்வவ்வடிவப் பெயர்கொண்டு, அவ்வத் தெய்வத்தைத் தமது சத்தியால் அதிட்டித்து நின்று, அவ்வவ் வழிபாடு கண்டு, அதனை ஏற்று அனுக்கிரகிப்பவர் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவபெருமான் ஒருவரேயாம். †
Among good deeds, worship of God is the noblest. Whoever they may be, if they possess virtues such as good conduct and worship whichever deity, in whatever form, of whatever color, and under whatever name, in accordance with their respective religion, Lord Sivaperuman alone—who, as the Primordial Reality, is prior even to the Primordial Reality—abides within that deity through His Shakti, assumes that form, color, and name, beholds their worship, accepts it, and bestows His grace. †
Passage 25
அண்டசம் சுவேதம் உற்பிச்சம் சராயுசம் என்னம் நால்வகை யோனிகளுள் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறப்பன வெல்லாம் பசுக்கள். அப்படிப் பிறத்தல் இல்லாதது பதி. பதிக்கும் பசுவுக்கும் தம்முள் வேற்றுமை இதுவேயாம். ஏனைத் தெய்வமெல்லாம் பிறந்திறத்தலேயன்றி மேல்வினையுஞ் செய் தல் கேட்கப்படுதலால் சுதந்திர அறிவில்லாதனவேயாம். அவையொன்றுமில்லாத சுதந்திர அறிவுடையவர் சிவபெரு மானேயாம். * எவ்விடத்து யாதொரு தெய்வத்தைப் பொரு ளாகக் கொள்ளினம், அவ்விடத்து அத்தெய்வத்தினிடமாக நின்று அவ்வழிபாட்டை அறிந்து உயிர்கட்குப் பலனைக் கூட் டுபவர் அச்சிவபிரான் ஒருவரே. ஏனைத் தெய்வங்கள் சுதந் திர அறிவின்மையால் தாமே பலன் கொடுக்கமாட்டா.
All beings born through one of the four kinds of wombs—Andaja, Svetaja, Udbhijja, and Jarayuja—are souls. The Lord alone is not subject to such birth. This alone is the distinction between the Lord and the soul. Since all other deities are said to be born, to die, and to perform further actions, they too are devoid of independent knowledge. The only one possessing independent knowledge is Lord Shiva. *Whichever deity is regarded as the object of worship in any place, it is Shiva alone who, abiding as that deity, understands that mode of worship and bestows its fruits upon souls. The other deities, lacking independent knowledge, cannot themselves grant the fruits.
Passage 26
சிவஞானசித்தியார் 2-2 - 25.
Sivagnana Siddhiyar 2-2–25.
Passage 27
யாதொரு தெய்வங் கொண்டீ ரக்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப் படுமி றக்கும் பிறக்குமேல் வினையுஞ் செய்யு மாதலா னிவையி லாதா னறிந்தருள் செய்வ னன்றே.
Whichever deity you accept, that deity becomes the Supreme Deity there; the Lord who has the Lady as one half will come. The other deities suffer, die, and are born again, and perform deeds that bring about karma. Therefore, He alone, who is free from all these, knows and bestows grace.
Passage 28
திருநாவுக்கரசுசுவாமிகள்.
Tirunavukkarasu Swamigal.
Passage 29
நூறு கோடி பிரமர்க லண்ந்தினார் ஆறு கோடி ஙாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறி லாதவ னீச னொருவனே.
A hundred crores of Brahmas have passed away; likewise, six crores of Narayanas. Counting the grains of sand in the Ganges, there have been countless Indras. The one Lord Shiva alone is without end.
Passage 30
பசுக்கள் பிராமணர் பிதா மாதா முதலாயினேரை இம் மையிலே வழிபட்டோர்க்கு அவ்வழிபாட்டைக் கடவுளறிந்து சுவர்க்கம் முதலிய உலகங்களில் அதற்கேற்ற பலனைத் தருவ ரென்பது எல்லார்க்கும் சம்மதமான முடிபாம். அதுபோல, எத்தெய்வத்தை வழிபடினும் அவ்வழிபாட்டிற்குச் சிவபெரு மானே பலன் தருவர்.
It is universally accepted that God, knowing that people have worshipped cows, Brahmins, fathers, mothers, and others, grants them in this world the fruits appropriate to that worship in heaven and other realms. Likewise, whatever deity one may worship, it is Lord Shiva alone who bestows the fruit of that worship.
Passage 31
அவ்வாறாயின் பிறதெய்வத்தை வழிப்பட்டார்க்கு அவ் வத் தெய்வமே எதிர் தோன்றி நின்று பலன் கொடுத்ததே யென நூல்களிற் கூறப்படுகின்றதேயெனில், அன்று. அர சன் ஆணையே மந்திரி முதலாயினோர் மாட்டு நின்று பிறர்கு பலன் கொடுக்குமாறு போல, சிவபெருமானே தமது ஆணை யைத் தம்மேவல் வழிநிற்கும் அவ்வக் கடவுளர்மாட்டு வைத்து அத்தேவரிடத்து நாம் செய்யும் வழிபாட்டிற்கு அத்தேவரிட மாக நின்று பலன்கொடுப்பர். அங்ஙனமின்றித் தாமே வினைத்துடக்கிற்பட்டுப்பரதந்திரர்களாய் நிற்கும் அக்கடவுளர் பிறருக்குப்பலன் கொடுத்தல் ஒருபோதும் பொருந்தாது.
If that is so, when the scriptures state that, for those who worship other deities, those very deities appear before them and grant the fruits of their worship, is that not the case? No. Just as a king’s command, remaining with ministers and others, enables them to grant benefits to others, so Lord Shiva places His command in the respective deities who stand in His service, and, through those deities, grants the fruits of the worship we offer to them. Otherwise, it would never be appropriate for those deities, who are themselves bound by karma and remain dependent, to grant fruits to others.
Passage 32
சமயகோடிகளுக்கெல்லாம் அவ்வச் சமயக் கடவுளரைத் தமது சத்தியால் அதிட்டித்து நின்று அருளுபவர் சிவபெரு மானாயின் ஒருவன் எந்தச் சமயத்தில் இருந்தாலுமென்னை? அவனுக்கு யாண்டும் அருளுண்டாமோ எனின்; அது ஒரு போதுங்கூடாது; எங்ஙனமெனில், பூமண்டலாதிபதியாகிய அரசனது ஆஞ்ஞையானது இராசபதம் முதல் சேவகபத மிறுதியாகவுள்ள எவ்வெக்கீழ்க் கீழ் அதிகாரிகள். மாட்டும் செல்லுமாயினும், அவ்வவ்வதிகாரிகள் தம்மை அடுத்தோர்க் குத் தத்தம் சத்திக்கேற்றபடி கொடுக்கும் பயனானது அப் பூமண்டலாதிபதி கன்னை அடுத்தோர்க்குக் கொடுக்கும் பய னுக்குத் தினைத்துணையேனும் ஈடாகாது அழியுக் கன்மையது போலாம்.
If Lord Shiva is the One who, through His Shakti, presides over and bestows grace upon the deities of all religious systems, does it follow that, regardless of the religion a person belongs to, he will always receive His grace? No, that can never be so. For example, although the command of the king who rules the entire earth reaches all the subordinate officials, from those holding royal office down to the lowest servants, the benefits that each of those officials grants to the people under them, according to their respective powers, are not even remotely equal to the benefits that the sovereign of the entire earth grants to those who approach him; they are of a transient nature and perish.
Passage 33
இதனால், பசுவர்க்கமாகிய பிற தெய்வங்களின் வழிபாட் டிற்குச் சிவபெருமானே பலன் தருவரென்பது பெறப்பட்ட மையால் பசுபுண்ணியமும் சிவபுண்ணியமாகுமென்று கொள்ள வருமோ எனில், பசுக்களை நோக்கிச் செய்யப்படும் புண்ணியம் பசுபுண்ணியம்; பதியை நோக்கிச். செய்யும் புண் ணியம் பதிபுண்ணியம். சுவர்க்காதி உலகபோகங்களை விரும் பிப் பதியை நோக்கிச் செய்யும் புண்ணியம் பசுபுண்ணியம். முத்தியின்பத்தை வேண்டிப் பதியை நோக்கிச் செய்யும் புண் ணியம் பதிபுண்ணியம். இனிப் பசுக்களிடத்துச் சிவபாவனை யோடு செய்யும் புண்ணியம் பதிபுண்ணியம். பதியினிடத்து நம்மிலொருவன் என்னும் பசுபாவனையோடு செய்யும் புண்ணி
Thus, since it has been established that Lord Shiva alone bestows the fruits of worship offered to the other deities belonging to the category of souls, can it be concluded that merit directed toward souls also becomes merit directed toward Shiva? No. Merit performed with the souls as its object is merit directed toward souls; merit performed with the Lord as its object is merit directed toward the Lord. Merit performed with the Lord as its object while desiring the pleasures of the worlds, such as heaven, is merit directed toward souls. Merit performed with the Lord as its object while seeking the bliss of liberation is merit directed toward the Lord. Again, merit performed toward souls with the awareness that they are Shiva is merit directed toward the Lord. Merit performed toward the Lord with the awareness that he is a soul like one of us is merit directed toward souls.
Passage 34
யம் பசுபுண்ணியம். ஆகலாற் புண்ணியச்செயல் செய்ப வன் கருத்து வகையால் வேறுபடுதலேயன்றிக் கொள்வோன் கருத்துவகையால் வேறுபடுதல் இல்லை. ஆகலின் ஏனைத் தெய்வங்களையே முழுமுதற் கடவுளென எண்ணிச் செய்யும் பசுபுண்ணியம் சிவபுண்ணியமாகாதவாறு காண்க.
Therefore, a meritorious act differs according to the intention of the person performing it, but it does not differ according to the intention of the person who receives it. Thus, understand that merit directed toward souls, performed by regarding other deities themselves as the Supreme God, does not become merit directed toward Shiva.
Passage 35
சிவ வழிபாடே சிறப்பான அறம்.
Worship of Shiva alone is the supreme virtue.
Passage 36
இவ்வாற்றால் ஏனைத் தேவர்களிடத்துச் செய்யும் வழி பாடுகளையும் சிவபெருமானே ஏற்றுக்கொண்டு பலன் தருவர் என்பது பெறப்பட்டது. ஆதலால் சிவபெருமான் திருவ டியை வழிபடுதலே நல்ல அறமாம். அவருடைய திருப்பாதங் களை மறங்து செய்கின்ற அறங்களெல்லாம் வீண் செயலாகும். அன்றியும்: புண்ணியமாவது அச்சிவபெருமானால் வேதாக மங்களில் விதிக்கப்படும் விதியாதலினாலே அவ்வாறு விதித் தற்குச் சிவபெருமான் ஒரு பொருளினும் விருப்பில்லாதவ ராய், உயிர்களிடத்து வைத்த கருணையே காரணமாம். ஆத லின் அந்நன்றி செய்த அச்சிவபெருமானது திருப்பாத பூசனையே உறுதியாகச் செய்யக் கடவது. *
In this way, it is understood that Lord Shiva Himself accepts the worship offered to the other deities and bestows its fruits. Therefore, worshipping the sacred feet of Lord Shiva alone is true virtue. All virtuous acts performed while forgetting His sacred feet are futile. Moreover, merit consists in following the injunctions prescribed by Lord Shiva in the Vedas and Agamas. The reason He prescribes them is not because He desires anything, but solely because of the compassion He has for living beings. Therefore, one must steadfastly perform worship at the sacred feet of Lord Shiva, who has shown such kindness. *
Passage 37
இவ்வண்ணமிருத்தலால், வீடடைய விரும்பினோர் புறத் தும் அகத்தும் சிவபெருமானை வழிபடல் வேண்டும். சிவ பெருமான் புறத்தே திருக்கோயிலுள்ளிருந்தருளும் சிவலிங் கம் முதலியமூர்த்திகளையும் மெய்யடியார்களது திருவேடங் களையும் குருவையும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிரிடமாகக் கொண்டு நின்றும் ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டை ஏற்று அவ்வழிபாட்டிற்கேற்ற பல னைக் கொடுத்தருளுவர்.
Since this is so, those who desire liberation must worship Lord Shiva both externally and internally. Externally, Lord Shiva abides through the forms such as the Shiva Lingam enshrined in sacred temples, the sacred forms of His true devotees, and the Guru; internally, He abides as the indwelling support of the soul. Accepting the worship performed by souls in these ways, He graciously bestows the fruits appropriate to that worship.
Passage 38
முற்பிறவிகளிலே செய்த வினை காரணமாகவே நால் வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்துநான்கு
It is precisely because of the karma performed in previous births that there are four kinds of origin, seven kinds of birth, and eighty-four
Passage 39
லக்கம் யோனி பேதங்களிலும் சென்று பிறந்திறந்து உழ லும் ஆன்மாக்களை அவற்றினின்றும் எடுக்கு நிமித்மாகவே, சிவபெருமான் பரந்த உலகத்திலே தலம் தீர்த்தம் மூர்த்தி என்னும் மூன்று வடிவங்களைக் கொண்டருளினார். இந்த மூன்றனையும் சிவபெருமானாகவே பாவித்து, வழிபடுவோர் பர மாசாரியரால் உண்மை ஞானம் பெற்று முத்தி அடைவர். ஆதலால் இவ்வுண்மையை அறிந்து பரம்பொருளைத் தினந் தோறும் மேற்குறித்த இடங்களிற் பத்திசெய்து வழிபட வேண்டும்.
In order to rescue souls that wander through birth and death in the various distinctions of wombs, Lord Shiva graciously assumed three forms throughout the vast world: sacred places, sacred waters, and sacred images. Those who regard and worship all three as none other than Lord Shiva will attain true wisdom and liberation through the supreme spiritual teacher. Therefore, understanding this truth, one should worship the Supreme Reality every day with devotion in the places mentioned above.
Passage 40
தணிகைப்புரானம்.
Thanikaippuranam.
Passage 41
ஈண்டுநாற் பிறப்பி லெழுவகைத் தோற்றத் தெண்பத்து நான்கெனு மிலக்க மாண்டபல் பவத்திற் பன்முறை வினையான் மறி தரு முயிர்களை யெடுப்ப வாண்டாரு எமல னநாதியி லுலக மாக்குழி யருந்தலந் தீர்த்தங் காண்டகு மூர்த்தி யென்னமூன் றுருவாயக் கண்ணக னுலகெலாங் கதித்து.
In order to save the souls that, through their deeds, repeatedly undergo the many births encompassed by the eighty- four lakhs of forms of life arising from the four kinds of birth and the seven categories of manifestation, the Lord who created the world from beginningless time manifested throughout the world in three forms—the sacred place, the sacred water, and the auspicious image—and pervaded the entire universe.
Passage 42
தாயுமானசுவாமிகள்.
Thayumanaswamigal.
Passage 43
மூர்த்தி தலந்தீர்த்த முறையாற் கிறாடங்கினர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்த்கும் பராபரமே.
According to the proper order of worshipping the Murti, sacred place, and holy waters, even the Supreme Being will speak a word to those who are deluded, through the true Guru.
Passage 44
அறமும் சிவபெருமானிடத்தில் அன்பில்லா து செய்யின் பாவமாம்.
Even the practice of virtue, if performed without love for Lord Shiva, becomes a sin.
Passage 45
அறம் பாவங்கள் பலன் தருவது, அவ்வறம் பாவங் களைக் கொள்வோர் உயர்வு தாழ்வு பற்றியேயாம். அவ்வா றன்றி செய்வாரது உயர்வு தாழ்வு பற்றியாவது செய்யப்படும் வினைகளின் உயர்வு தாழ்வு பற்றியாவது பயன் தருத லன்று. ஆதலால், சிவபெருமான் திருவடிக்கு அன்புடை
The fruits of virtuous and sinful deeds depend solely on the elevated or degraded status of those who perform them. They do not yield results based on the performer’s status, nor on the superiority or inferiority of the deeds themselves. Therefore, those who love the holy feet of Lord Shiva, even if they commit a sin,
Passage 46
யார் பாவஞ் செய்யினும் அப்பாவமானது புண்ணியமாய் முடி யும். அவர் திருவடிக்கு அன்பிலார் செய்யும் புண்ணியமா னது பாவமாய் முடியும். இவற்றிற்குத் தேவரில் வரங்கள் பெற்ற தக்கன் செய்க பெரிய யாகமானது புண்ணியமேயா யினும், இறைவனாரிடத்து அன்பில்லாமையால் பாதகமாய் முடிந்ததும், மானுடரிற் பாலப் பருவத்தையுடைய சண்டே சுரஙாயனார் தமது பிதாவுக்குச் செய்த கொலைப்பாதகமா னது இறைவனாரிடத்து அன்புடைமையால் புண்ணியமாய் முடிந்ததும் சான்றாகும். ஆகதலால் சிவபெருமானையே அர்ச் சித்தல் வேண்டும்.
will have that sin ultimately become a meritorious act. The meritorious deed performed by those who do not love His holy feet will ultimately become a sin. As evidence of this, although Daksha’s great sacrifice, for which he received boons from the gods, was itself meritorious, it ended disastrously because he lacked love for the Lord; whereas the sinful act of killing his father, committed by Chandeshvara Nayanar while still a child, became meritorious because of his love for the Lord. Therefore, one must worship Lord Shiva alone.
Passage 47
வீடடைதற்கு வழியும் உபாயமும்
The Way and Means of Attaining Liberation
Passage 48
நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பில் எண் பத்து நான்கு நூறாயிர யோனிபேதங்களுள்ளே ஓருயிர் மானு டப் டிறவியில் வந்துதித்தல் மிக அருமையாம். மானுடப் பிறவியெய்தினும், இவ்வுலகத்துள் வேதாகம வழக்கம் இல் லாத நாட்டிலே பிறவாது, அவ்வேதாகம வழக்கம் மிகுந் துள்ள உத்தமதேசத்திலே பிறத்தலரிது; அவ்வாறு பிறத் தல் மிகுந்த புண்ணியத்தாலுண்டாம். அவ்வுத்தம நாட்டி னள்ளும் உத்தம சாதியிற் பிறத்தல் அதனிலும் அரிது. உத்தமசாதியிலே பிறந்தும் புறச்சமயத்திற் செல்லாது நிற் கும் பேற்றிணப் பெறுதல் அதனினும் அரிது.
It is exceedingly rare for a soul to be born as a human being among the fourteen hundred thousand distinctions of species within the seven kinds of birth and the four kinds of origin. Even after attaining human birth, it is rare to be born not in a land where the practices of the Vedas and Agamas are absent, but in an excellent country where those practices flourish; such a birth occurs only through great merit. Even within that excellent country, birth in an exalted caste is rarer still. Even after being born in an exalted caste, it is rarer still to gain the fortune of remaining without turning to alien religions.
Passage 49
அதிகாரம் செல்வம் கல்வி முதலியவற்றால் வரும் செருக் கும் வறுமையால் வருஞ் சிறுமையுநீங்கி அடிமைத் திறத் தோடும் சைவசித்தாந்த நெறியை அடையும் பாக்கியம் பெறு தல் பெரிதும் அரிதாம். அந் நெறியிலே நின்று சிவனரு ளாலே சிவனை வணங்கும் பேறுண்டாயின் அவை மலங்க ளைப் போக்கி வீடடைதற்கு வாயிலும் உபாயமுமாம்.
It is exceedingly rare to attain the good fortune of reaching the path of Shaiva Siddhanta with humility, having cast aside the pride arising from authority, wealth, education, and the like, and the degradation arising from poverty. If, while standing in that path, one gains the blessing of worshipping Shiva through the grace of Shiva, that becomes both the doorway and the means for removing the impurities and attaining liberation.
Passage 50
பிறவிகளுட் சிறந்த மானுடப் பிறவியைச் சிவபெருமான் நமக்குத் தந்தருளியது, மனம் வாக்குக் காயங்களினாலே தம்மை வழிபட்டு முத்தியின்பம் பெற்று உய்தற்பொருட்டே யாம்.
Lord Shiva has graciously bestowed upon us the finest of births, human birth, so that we may worship Him through mind, speech, and body, attain the bliss of liberation, and be saved.
Passage 51
திருநாவுக்கரசு சுவாமிகள்
Saint Tirunavukkarasar
Passage 52
திருக்கு றுந்தொகை
Thirukkuruntokai
Passage 53
வாழ்த்த வாயு நினைத்த மடநெஞ்சும்
The Lord who granted me a tongue to praise Him and a guileless heart to contemplate Him
Passage 54
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
And a head to bow before Him
Passage 55
சூழ்த்த மாமலர் தூவித் திதியாதே
Without scattering fragrant great flowers and worshipping,
Passage 56
வீழ்த்த வாவினை மேரெடுங் காலமே.
They fall into the vast ocean of karma at the appointed time.