Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

75. Vijnanakalars

Passage 1

விஞ்ஞ்ரனாகலர்.

Vijnanakalars.

Passage 2

விஞ்ஞானத்தினாலே கலாசம்பந்தமற்றவர் விஞ்ஞானா கலர். †

Those who, through knowledge, are free from association with kala are called Vijnanakalars. †

Passage 3

அநாதிகேவலத்தில் ஆன்மாக்கள் ஆணவமலத்தினாலே மறைப்புண்டு கிடக்கும். மலத்தின் சத்திகள் பலவாதலால் மறைப்பும் பல வேறுவகைப்படும். அங்ஙனம் மறைப்புண்டு கிடக்கும் ஆன்மாக்களுக்கு மலநோயைத் தீர்க்கச் சிவபெரு மான் திருவுள்ளங் கொண்டருளுவர். கொண்டருளும்போது கன்மமல மாயா மலங்களைக் கூட்டாமலே விஞ்ஞானத்தால் ஆணவமலத்தை நீக்குதற்குரிய ஆன்மாக்களுக்குச் சுத்த மாயா காரியங்களாகிய கலாதி தத்துவங்களாலாக்கப்பட்ட சரீ ரங்களைக் கொடுத்து அசுத்த மாயைக்குமேல் இருக்கும்படி செய்வர். இவ்வாறு கலாதிதத்தூவங்களைப் பெற்று விஞ்ஞா னத்தால் அத்கதுவங்களிற் கட்டுப்படாதிருத்தலின் விஞ்ஞா னாகலர் எனப் பெயர் பெறுவர். இத்தகைய ஆன்மாக்களுக்கு ஆணவமலபந்தமிருத்தலால், இவர் ஒரு மலமுறையவர் எனப் படுவர். இவர்கள் பக்குவர் அபக்குவர் என இரு திறப்படுவர். பக்குவர் சிவாறுக்கிரகத்தால் பரமுத்தி அடைவர்.

In the beginningless state of kevala, souls remain concealed by the anava mala. Since the powers of the mala are many, its concealment also takes many different forms. Therefore, out of compassion, Lord Shiva wills to cure the mala-disease afflicting these concealed souls. When He does so, without combining the kanma mala and maya mala, He grants the souls who are fit to remove the anava mala through knowledge bodies made from the kala and other tattvas, which are products of pure maya, and causes them to remain above impure maya. Since they thus receive the kala and other tattvas but, through knowledge, do not become bound by those tattvas, they are called Vijnanakalars. Because such souls remain bound by the anava mala, they are said to belong to the category of those bound by a single mala. They are of two kinds: the mature and the immature. The mature attain supreme liberation through Shiva’s grace.

Passage 4

அபக்குவர் உத்தமர், மத்திமர், அகமர் என முத்திறப் படுவர். உத்தமர் அணுசதாசிவர் முதலியோராய்ச் சதாசிவ தத்துவத்தில் வசிப்பர். மத்திமர் அஷ்டவித்தியேசுரர் முதலி யோராய் ஈசுவர தத்துவத்தில் வசிப்பர். அதமர் மூன்றரைக்

The Apakkuvars are of three kinds: Uttamas, Madhyamas, and Adhamas. The Uttamas, as Anu-Sadashivas and others, dwell in the Sadashiva Tattva. The Madhyamas, as the Ashta-Vidyeshvaras and others, dwell in the Ishvara Tattva. The Adhamas dwell in the Shuddhavidya Tattva as the three and a half crore deities.*

Passage 5

கோடி தேவர்களாய் * சுத்தவித்தியா தத்துவத்தில் வசிப்பர். இவர் அதிகாரமலமுடையாரய் இருப்பர்.

They possess the Adhikara Mala.

Passage 6

விஞ்ஞானா கலருக்கு எடுத்த பி றவியேயன்றி வேறு பிறவி யில்லை இவர்கள் தீவிரதர சத்திநிபாதத்தைப் பொருந்து தற்குரியராதலால், கருணை வடிவினராகிய இறைவனார் அவர் வடிவில் உள்ளீடாக நின்று உணர்த்துவதாகிய † நிராதார தீக்கை செய்து ஆணவமலத்தை நீக்கியருளுவர். இவர்கள் பிரளயத்திலும் மத்தியிலும் முத்தியடைவர்.

For the Vijnana-kalars, there is no birth other than the birth they have assumed. Since they are fit to receive the intense and most powerful descent of Shakti, the Lord, who is the embodiment of grace, stands inwardly within their form, reveals the truth to them, and, through the Niradhara Diksha, † graciously removes the Anava Mala. They attain liberation both during the Pralaya and in the intermediate state. Pralayakalars.

Passage 7

பிரளயத்திற் கலையற்றவர் பிரளயாகலர்.

Those who are without kalā during the time of dissolution are called Pralayākalars.

Passage 8

கன்மத்தைக் கூட்டி ஆணவமலத்தை நீக்குதற்குரிய ஆன்மாக்களுக்குச் சிவபெருமான் அசுத்தமாயா காரியமாகிய கலாதி தத்துவங்களா லாக்கப்பட்ட சரீரத்தைக் கொடுத்து அவ்வசுத்த மாயையில் இருக்குமாறு செய்தருளுவர். இவ ருக்குப் பிரளயத்தின் பின் பிறவியில்லாமையால் பிரளயா கலரெனப் பெயராயிற்று. இவருக்கு மாயை யுள தாயினும் அதனிற் பிணிப்புண்டு மயங்குதலின்றி ஏனைய இருமலத் தானும் பிணிப்புண்டமையின் இருமலமுடையவரெனப்படுவர்

For souls whose accumulated karma is to be exhausted and whose āṇava mala is to be removed, Lord Shiva graciously provides bodies formed from the kalādi tattvas, which are effects of impure māyā, and causes them to remain in that impure māyā. Since they do not undergo birth after the dissolution, they are called Pralayākalars. Although māyā exists for them, they neither become bound by it nor deluded through it; because they remain bound by the other two malas, they are said to possess the two malas.

Passage 9

இவருக்குச் சத்திநிபாதம் தீவிரம் தீவிரதரம் என்னும் இரண்டுமாம். கன்மம் உளதாகலின் ஒரு பிரளயத்திற் சில பிறவிகள் உள. சிவபெருமான் இவர்களுக்கு மான் மழு

For them, śakti-nipāta occurs in two forms: intense and exceedingly intense. Since karma remains, they undergo some births during a single period of dissolution. Lord Shiva, for these souls, with a divine body characterized by the deer, battle-axe, four arms, and the Kālakāṇḍa, among other features,

Passage 10

சதுர்ப்புயங் காளகாண்டம் முதலிய இலட்சணங்களுடைய திருமேனியோடு தோன்றி உணர்த்துவதாகிய நிரா தார தீக்ஷை செய்து மலத்தை நீக்கியருளுவர்.

appears and instructs them, granting Nirādhāra Dīkṣā, and graciously removes their mala.