Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

76. The Sakalars

Passage 1

ச கலர்.

The Sakalars.

Passage 2

கலையுடையோர் சகலர்† எனவே கலாதி தத்துவங்க ளோடு கூடியவர் எனப்படுவர். சகலர் ஆணவம் கன்மம் மாயையென்னும் மும்மலங்களாலும் கட்டுண்டவர்கள். பிரம விட்டுணு முதலிய தேவர்கள் மனிதர்கள் முதலிய உயிர்கள் எல்லாம் சகலர். கன்ம மலம் மாயாமலங்களைக் கூட்டி ஆணவமலத்தை நீக்குதற்குரிய மறைப்பினையுடைய ஆன் மாக்களுக்கு அசுத்தமாயா காரியமாகிய கலாதிதத்துவங்க ளாலாக்கப்பட்ட சரீரங்களைக் கொடுத்துப் பிரகிருதி மாயை யின்கீழ் இருக்குமாறு செய்வர்.

The Sakalars† are so called because they possess the kalās and are therefore understood to be associated with the principles beginning with kalā. The Sakalars are bound by the three impurities known as āṇava, karma, and māyā. All beings—gods such as Brahmā and Viṣṇu, human beings, and others—are Sakalars. In order to remove the āṇava impurity from souls that possess the obscuring power which combines the impurities of karma and māyā, they are given bodies made from the principles beginning with kalā, which are effects of impure māyā, and are made to remain under the influence of prakṛti-māyā.

Passage 3

இவர் மும்மலமுடையவ ராதலின் மயக்கத்தினால் பல பிறவிகளை யெடுத்து, பிரளயத்தில் கலாதிகளுடன் ஒடுங்கிக் கிடந்து மறுபடி சிருட்டியாகுங்கால் மீண்டுந் தோன்றி இவ் வாறே பிறப்பிறப்பிற்பட்டு உழல்வாராதலின் சகலரெனப் பட்டனர். பக்குவம் வந்த காலத்துச் சிவபெருமான் குரு மூர்த்தியாய்த் தோன்றி நின்று அருள்செய்வர்.

Since they possess the three impurities, they take many births through delusion; they remain withdrawn along with the principles beginning with kalā during the dissolution, and when creation occurs again, they reappear and continue to wander through repeated births and deaths. Hence they are called Sakalars. When the proper maturity is attained, Lord Śiva appears in the form of the Guru and bestows His grace.

Passage 4

சகலர் பிரகிருதி சம்பந்தமான தேகத்தோடு கூடியிருக் கின்ற காலத்தும் தீக்ஷைபெற்றுச் சரியை கிரியை யோகம் என்னும் சிவபுண்ணியங்களைச் செய்தலினால் பிரளயாகலர் விஞ்ஞானாகலாரதலுமுண்டு; பிரகிருதி மாயா புவனப் பற்று ஞானத்தால் நீங்கப் பெற்றவர் சகலரில் பிரளயாகலராவர். இவர்களுக்குச் சிவபெருமான் உருவத் திருமேனி யுடையவ ராய் முன்னின்று பிரளயாகலர். உணர்த்தியருளுவர். பிரகிருதிமாயா புவ னப் பற்றும், அசுத்தமாயா புவனப் பற்றும் ஞானத்தால் நீங்கப் பெற்றவர். சகலரில் விஞ்ஞானாகலராவர். இவர்க ளுக்குச் சிவபெருமான் அறிவினுள் அறிவாய் நின்று உண்மை ஞானத்தை உணர்த்தியருளுவர். சகலருக்கு இரு

While the Sakalars remain associated with bodies connected to Prakriti, they may become Pralayakalars or Vijnanakalars by receiving initiation and performing the Shaiva meritorious practices known as charya, kriya, and yoga. Those among the Sakalars whose attachment to the worlds of Prakriti-maya has been removed through knowledge become Pralayakalars. Lord Shiva graciously reveals and instructs them while standing before them in a manifest divine form. Those whose attachment to both the worlds of Prakriti-maya and Ashuddha-maya has been removed through knowledge become Vijnanakalars among the Sakalars. For them, Lord Shiva stands as the Knowledge within knowledge and graciously imparts true wisdom. For the Sakalars, when the two karmas have become equal and the impurities have reached maturity,

Passage 5

வினையொப்பும் மல பரிபாகமும் வந்தவிடத்துப் பரமசிவன் குருவடிவாய் வந்து உண்மைஞானத்தை யுணர்த்தியருளுவர். சகலரில் விஞ்ஞானாகலத்துவம் வந்தால் மேற்பிறவி யில்லை; பிரளயாகலத்துவம் வந்தால் சில பிறவியுண்டு. முன்னர்க் கூறிய விஞ்ஞானாகலர் பிரளயாகலர் அநாதியாயுள்ளவர். சகலரில் விஞ்ஞானாகலர் பிரளயாகலர் ஆதியாயுள்ளவர்.

the Supreme Shiva comes in the form of a guru and graciously imparts true wisdom. When one among the Sakalars attains the state of a Vijnanakarar, there is no further birth; when one attains the state of a Pralayakarar, there are still a few births. The Vijnanakalars and Pralayakalars mentioned earlier are beginningless. Among the Sakalars, the states of Vijnanakarar and Pralayakarar have a beginning.

Passage 6

அபக்குவர் சனன மரண சாகரத்திற்பட்டு இருவினைக் கீடாகப் பிறந்திறந்து உழலுபவர். இவர்களும் காலாந்தரத் தில் பக்குவானு குணமாகப் பரமேசுவரனால் இரட்சிக்கப் படுவர். மேலும் திரோதாயி மாயேயம் என்னும் இருமலங் கள் மூவகையான்மாக்களுக்கு முண்டு.

The unripe souls are those who, caught in the ocean of birth and death, are born and die, suffering in accordance with their twofold karma. In due course, they too will be saved by Parameshvara according to their maturity. Furthermore, the two impurities called Tirodhayi and Mayeyam exist in the three kinds of souls.

Passage 7

சகலருக்கு இருவினை யொப்பும் மலபரிபாகமும் வந்த விடத்து மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என்னும் நான்கு வித சத்திநிபாதமும் நிகழும். அப்பொழுது சிவபெருமான் சகல வர்க்கத்து ஒரு குருவை ஆகாரமாகக் கொண்டு. நின்றுதீக்கிதெய்து மலத்தை நீக்குவர். *

When the equipoise of the two kinds of karma and the ripening of the impurities arise in souls subject to bondage, the four types of the descent of Shakti—very mild, mild, intense, and very intense—will occur. At that time, Lord Shiva assumes the form of a guru for each class of souls, remains present, grants initiation, and removes the impurities.*