Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

79. Śakti-nipātam

Passage 1

சத்திநிபாதம்

Śakti-nipātam

Passage 2

சத்திநிபாதம் * என்பது திருவருட்சத்தி பதிதல் எனப் பொருள் படும். அதாவது திருவருட் சத்தியின் விளக்கம் ஆன்ம அறிவின் கண்ணே உண்டாதலாம். ஆன்மாக்கள் மாட்டுப் பதிதலாகிய அச்சத்தி நிபாதமும் மந்ததரம் மந்தம் தீவிரம தீவிரதரம் என நால்வகைப்படும்.

Śakti-nipātam* means the descent of the power of divine grace. That is, the manifestation of the power of divine grace takes place in the knowledge of the soul. This descent of that power upon souls is of four kinds: manda-tara, manda, tīvra, and tīvra-tara.

Passage 3

அவற்றுள் மந்ததரசத்தி நிபாதமாவது : ஒருகூறு திரு வருட்சத்தி தோன்ற ஒருகூறு ஆணவமலசத்தி வலிகுன்று தல். மந்தசத்தி நிபாதமாவது : இறுகூறு திருவருட் சத்தி தோன்ற இருகூறு மலசத்தி நீங்குதல். தீவிர சத்திநிபாத மாவது : மூன்றுகூறு திருவருட்சத்தி தோன்ற மூன்றுகூறு மலசத்தி நீங்குதல். †தீவிரதர சத்திநிபாதமாவது: நான்கு கூறு திருவருட்சத்தி தோன்ற மலவாசனை முற்றும் விடுபடு தலாம். இகனால் மலபரிபாகமும் நான்கு வகையாமென்பது உணரப்படும்.

Of these, manda-tara śakti-nipātam is the appearance of one quarter of the power of divine grace and the weakening of one quarter of the power of āṇava mala. Manda śakti-nipātam is the appearance of two quarters of the power of divine grace and the removal of two quarters of the power of the mala. Tīvra śakti-nipātam is the appearance of three quarters of the power of divine grace and the removal of three quarters of the power of the mala. †Tīvra-tara śakti-nipātam is the appearance of all four quarters of the power of divine grace, whereby the residual trace of the mala is completely eliminated. Thus, it is understood that mala-paripākam too is of four kinds.

Passage 4

சத்திநிபாதத்துக்குக் காரணம் இருவினை யொப்பும் மலபரிபாகமுமாம்.

The cause of Śaktinipāta is the equalization of the two karmas and the ripening of the impurities.

Passage 5

சகலவர்க்கத்துபிர்கள் பிரகிருதி புவன வாசிகளாதலால், நால்வகைச் சத்திநிபாதங்களையும் பொருந்துதற்குரியர். பிரள யாகலர் பிரகிருதி மாயாசம்பந்த மில்லாமையால் தீவிரம் தீவிர தரம் என்னும் இருவகைச் சத்திநிபாதங்களைப் பொருந்து தற்குரியர். விஞ்ஞானாகலர் தீவிரதர சத்திநிபாத மாத்திரம் உடையவர்கள்.

Since the souls of the Sakala class dwell in the worlds of Prakṛti, they are eligible to receive all four kinds of Śaktinipāta. Since the Pralayākalars have no association with Prakṛti-māyā, they are eligible to receive the two kinds of Śaktinipāta known as Tīvra and Tīvratara. The Vijñānākalars possess only Tīvratara Śaktinipāta.

Passage 6

மந்ததர சத்திநிபாக முடையவர்கள் பிரமாண்டத்துக்கு மேலுள்ள புவனங்களையும், மந்தசத்திநிபாத முடையவர்கள் புருட தத்துவத்துக்கு மேலள்ள தத்துவங்களையும், தீவிர சத்திநிபாத முள்ளவர்கள் சுத்தவித்தை முதலிய தத்துவங் களில் அபரமுத்தியையும், தீவிரதர சத்திதிபாத முடையவர் கள் பரமுத்தியையும் அடைவார்க ளென்று சிவாகமங்கள் செப்புகின்றன.

The Śivāgamas state that those who possess Manda-tara Śaktinipāta attain the worlds above the Brahmāṇḍa; those who possess Manda Śaktinipāta attain the principles above the Puruṣa principle; those who possess Tīvra Śaktinipāta attain Aparāmukti in the principles beginning with Śuddhavidyā; and those who possess Tīvratara Śaktinipāta attain Paramukti.

Passage 7

சத்திநிபாதமுடையார் இலக்கணம்

The characteristics of those who possess Śaktinipāta

Passage 8

தேகத்தைச் சிறைச்சாலை என்று துணிந்து, அதை நீக்கும் வழி யாதென்று ஆராய்ந்து தேடு, கல், சிவசரித்திரத் தைக் கேட்ட மாத்திரத்தில் சரீரம் புளகங் கொள்ளுதல், கண்கள் ஆனந்த அருவி சொரிதல், வாக்குத் தழுதழுத்தல், சிவனடியாரைக் கண்ட மாத்திரத்தே அன்புடையவர்களாய் அவர்களை வணங்குதல் முதலியன சத்திநிபாதமுடையாருக் குரிய இலக்கணமென்று சைவசமயஙெறி கூறும்.

Regard the body as a prison and earnestly seek and investigate the means of ridding yourself of it. The Saiva religious texts state that the characteristics of those who possess the descent of divine grace are these: their bodies thrill merely upon hearing the history of Siva, their eyes shed streams of blissful tears, their speech falters, and, upon seeing Siva’s devotees, they regard them with love and bow to them.

Passage 9

இனி, சாதாரம் நிராதாரம் என்னும் இரண்டு தீக்ஷை யினுள் சகலவர்க்கத் துயிர்கட்கு அநுக்கிரகம் செய்யும் முறைமையாகிய சாதார தீகைக்ஷயிலுண்டாகும் பாகுபாடும் அப்பாகுபாடுகளின் இயல்பும் கூறப்படும்.

Next, among the two initiations called Sadhara and Niradhara, the distinctions that occur within Sadhara initiation— the method by which grace is bestowed upon living beings of all categories—and the nature of those distinctions will be explained.