96. The Order of Instruction
Passage 1
உபதேசக் கிரமம்.
The Order of Instruction
Passage 2
இவ்விருபத்தெட்டாகமங்களுள். காமிகம் முதலிய ஐந்தா கமங்களும் சத்தியோசாத முகத்தினின்றும் கௌசிக இருடி யின் பொருட்டும், தீப்த முதலைந்தும் வாமதேவ முகத்தினின் றும் காசிப இருடியின் பொருட்டும், விஜயாகம முதலைந்தும் அகோர முகத்தினின் றும், பாரத்துவாச இருடியின் பொருட் டும், இரௌரவாகமம் முதலைந்தும் தற்புருட முகத்தினின்று கௌதம இருடியின் பொருட்டும், புரோற்கீ தம் முதல் எட்டா கமங்களும் ஈசான முகத்தினின்று அகத்திய இருடியின் பொருட்டுந் தோன்றின. அவ்வாகமங்களின்படியே அவர வர்களுக்குத் தீகைஷயும் செய்யப்பட்டது.
Among these twenty-eight Āgamas, the first five, beginning with Kāmika, arose from the Satyojāta face for the sake of Kauśika Ṛṣi; the first five, beginning with Dīpta, arose from the Vāmadeva face for the sake of Kāśyapa Ṛṣi; the first five, beginning with Vijayāgama, arose from the Aghora face for the sake of Bhāradvāja Ṛṣi; the first five, beginning with Rauravāgama, arose from the Tatpuruṣa face for the sake of Gautama Ṛṣi; and the final eight Āgamas, beginning with Purorkītam, arose from the Īśāna face for the sake of Agastya Ṛṣi. Initiation was performed for each of them in accordance with those Āgamas.
Passage 3
மேலே காமிகம் முதலிய ஆகமங்கள் இருபத்தெட்டும் சதாசிவ மூர்த்தியினது ஈசான முகத்தினின்றும் தோன்றி யனவாகக் கூறி, இங்கே சத்தியோசாத முதலிய முகங்களி னின்று காமிக முதலிய ஐந்தும். பிறவுந் தோன்றியனவாகக் கூறியமை மலைவாம் பிறவெனின் ஆகாது; ஈசான முதலிய ஒவ்வோர் முகங்களுக்கும் ஐவைந்து முகபேதங்கள் உள்ளன என்று காமிகாகம் கூறுகின்றமையால், ஈசானமுக சம்பந்த மாகிய ஐந்து முகங்களினின் று காமிகம் முதல் வாதுளமிறுதி யாகிய இருபத்தெட்டு ஆகமங்களும் தோன்றின என்று பெறப்படுதலால் முரணாகாமை தெளியப்படும்.
Above, it was stated that all twenty-eight Āgamas, beginning with Kāmika, arose from the Īśāna face of Sadāśiva; here, however, it is said that the five beginning with Kāmika and the others arose from the faces beginning with Satyojāta. If this is considered a contradiction, it is not so. The Kāmikāgama states that each of the faces beginning with Īśāna has five subdivisions. Therefore, it is understood that all twenty-eight Āgamas, from Kāmika to Vātula, arose from the five faces associated with the Īśāna face. Thus, it is clear that there is no contradiction.
Passage 4
இவ்வாகமங்களுள் முதற்பத்தும் விஞ்ஞானகலருட் பரம சிவனனுக்கிரகத்தைப் பெற்ற பிரணவர் முதலிய அணுசதா
Among these Agamas, the first ten pertain to the Pranavas and other Anus who have received the grace of Parama Shiva among the Vijnanakalars
Passage 5
சிவர் பதின்மருக்கும் அருளிச் செய்யப்பட்டமையால், சிவ பேதம் எனவும், ஏனைய பதினெட்டாகமங்களும், அநாதிருத் திரர் முதலிய பதினெட்டு உருத்திரர்களுக்கும் அருளிச் செய் யப்பட்டமையால், உருத்திரபேதம் எனவும் சொல்லப்படும். சிவபேதம் பத்தையும் கேட்டவர் ஒருவரிடத் தொருவராக ஒவ்வோ ராகமத்துக்கும் மும்மூன்று பேராய் அணுசதாசிவ ருட் டலைவராகிய பிரணவர் முதன் முப்பதின்மராவர். உருத் திர பேதம் பதினெட்டையுங் கேட்டவர் ஒருவரிடத் தொருவ ராக ஒவ்வோராகமத்துக்கு இவ்விரண்டு பேராய், அநாதி ருத் திரர் முதன் முப்பத்தறுவராவர். இவ்வாறு மூலாகமங்களைக் கேட்டவர் பிரணவராதி அறுபத்தறுவராவர் என்று சித் தாந்த சாராவளி செப்புகின்றது. அது,
Because they were bestowed upon the ten Śivas, they are called the Śiva division; and because the other eighteen Āgamas were bestowed upon the eighteen Rudras, beginning with Anādirudra, they are called the Rudra division. Those who received the ten Śiva divisions were, for each Āgama, three persons—one from each of the ten groups— making thirty in all, beginning with Praṇava, the leader among the subordinate Sadāśivas. Those who received the eighteen Rudra divisions were, for each Āgama, two persons—one from each of the eighteen groups—making thirty-six in all, beginning with Anādirudra. Thus, the Siddhānta Sārāvaḷi states that the recipients of the original Āgamas numbered sixty-six, beginning with Praṇava. It says:
Passage 6
அஞ்சன மேனி யரிவையோர் பாகத்த
The Lord with an ebony-hued body, who has the Lady as one half of Himself
Passage 7
னஞ்சொ டிருபத்து மூன்றுள வாகம
The Āgamas number twenty-three, beginning with Nañcu
Passage 8
மஞ்சலி கூப்பி யறுபத் தறுவரும்
With folded hands, the sixty-six
Passage 9
அஞ்சா முகத்தி லரும்பொருள் கேட்டதே.
heard the precious teaching from the five-faced One who knows no fear.
Passage 10
எனத் திருமந்திரம் கூறுதலாலும் உணரப்படும்.
This too is understood from what the Tirumantiram states.
Passage 11
மேலும், இவ்வாகமங்கள் சதாசிவமூர்த்தியால் அநந்த தேவருக்கும், அநந்ததேவரால் ஸ்ரீகண்டருக்கும், ஸ்ரீகண்ட ரால் தேவர்களுக்கும், தேவர்களால் முனிவர்களுக்கும், முனி வர்களால் மனுடருக்கும், மானுடரால் மனுடருக்கும், குருபரம் பரையாய் உபதேசிக்கப்பட்டு, உலகத்திற் பரவுவனவாம். *
Furthermore, these Agamas were taught by Sadashiva Murti to Ananta Deva, by Ananta Deva to Srikantha, by Srikantha to the gods, by the gods to the sages, by the sages to humankind, and from one human being to another, continuing through the succession of gurus, and thus spread throughout the world. *
Passage 12
சிவஞானசித்தியார்.
Sivagnana Siddhiyar.
Passage 13
வேதம் பொது; ஆகமம் சிறப்பு.
The Vedas are general; the Agamas are particular.
Passage 14
ஆரண மாக மங்க ளருளினா வுருவு கொண்டு
Having graciously assumed the form of the Vedas and Agamas,
Passage 15
காரண னருளா னாகிற் கதிப்பவ ரில்லை யாகு
If the Lord who is the Cause does not bestow His grace, there will be none who can attain salvation.
Passage 16
நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாஞ்
From Narayana onward, for all the gods, humans, and Nagas,
Passage 17
சீரணி குருசந் தானச் செய்தியுஞ் சென்றி டாவே.
the accounts of the glorious Guru lineage do not cease.
Passage 18
முதல்வனார் வேதம் ஆகமம் என்னும் இரு வேறு வகைப் பட்ட நூல் செய்தற்குக் காரணம் என்னையெனில்; அவர் பெருங் கருணையாளராதலின், நீதி நெறியில் நிற்கும் உல கோரும், ஞான நெறியில் நிற்கும் உயர்ந்தோரும் ஆகிய இரு வரும் உய்தற்பொருட்டு முறையே வேதத்தையும், ஆகமத் தையும் அருளிச் செய்தார். அன்றியும் வேதத்திற் கூறப்
As for the reason why the Lord created two distinct kinds of scripture, called the Veda and the Agama: because He is supremely compassionate, He graciously revealed the Veda and the Agama respectively so that both those who follow the path of righteousness in this world and those exalted beings who follow the path of knowledge might attain liberation. Moreover, what is stated in the Veda
Passage 19
ஆகமங்கள் தனித்தனி
the Agamas individually