Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

97. Having four padas

Passage 1

நான்கு பாதங்களையுடையன.

Having four padas.

Passage 2

படும் கன்மகாண்டத்துள், சிவார்ச்சனை செய்க; பிரதிட்டை செய்க என்றிவ்வாறு கூறி அவைகளைச் செய்யும் விதம் அவ்விடத்துக் கூறாமையினால் அவற்றைக் கூறுதற்காகவும்,

In the section dealing with ritual actions, they say, “Perform the worship of Shiva; perform the consecration,” and so forth. Since the manner of performing these rites is not explained there, this is also intended to explain them.

Passage 3

இவ்விருபத்தெட்டாகமங்களும் தனித்தனி சரியாபாதம், வேதத்திலே சூரியன் முதல் சிவபெருமான் ஈறாகவுள்ள கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் என நான்கு பாதங் தேவர்களுக்கும் பரத்துவம் கூறுதலால், அப் பல கடவுள களையுடையன. ருள்ளும் சிவனொருவருக்கே பரத்துவங் கூறுதற்பொருட்டும் ஆகமத்தை அருளிச்செய்தார். இதனால் வேதம் சூத்திரமும்,

These twenty-eight Agamas each have four padas: the Charya Pada, the Kriya Pada—which speaks of the supremacy of the deities beginning with the Sun and ending with Lord Shiva—the Yoga Pada, and the Jnana Pada. Since they proclaim the supremacy of many deities, they contain many gods. The Agamas were revealed in order to proclaim supremacy exclusively for Shiva among them. Thus, the Veda is a general scripture, whereas the Agamas are specific.

Passage 4

இவற்றுள், சரியாபாதம் சமயாசாரம் முதலியவற்றை ஆகமம் பாடியமும் போலாம். வேதம் பல தேவர்களுக்கும் யும், கிரியாபாதம் * சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம், பரத்துவங் கூறுதலால் பொது. சிவாகமம் சிவபெருமான் பிரதிட்டை உற்சவம், பிராயச்சித்தம் முதலியவற்றையும் ஒருவரையே ஆராதிக்கச் சொல்லுகையினாற் சிறப்பு. வேத யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களோடு கூடிய, சிவாகமப் பொருட்கு அந்நியமாய் வேதத்தின் பூருவபக்கப் சிவயோக முதலியவற்றையும் ஞானபாதம் பதிபசுபாச லட் பொருளைச் சொல்லும் நூல்களெல்லாம் பூருவபக்க நூலெ சணங்களையும் உபதேசிப்பனவாம். னப்படும்.

Among these, the Charya Pada teaches religious observances and related practices. The Veda is common because it proclaims the supremacy of many deities, while the Kriya Pada teaches Sandhyavandanam, worship, japa, homa, consecration, festivals, expiatory rites, and so forth. The Shaiva Agamas are distinctive because they instruct people to worship only Lord Shiva. The Yoga Pada teaches the limbs beginning with pranayama and the practices of Shiva Yoga and others. The Jnana Pada teaches the principles of Pati, Pasu, and Pasha. Texts that teach such matters are called Purva-paksha texts.

Passage 5

வேதத்தின் முடிவான பொருளைச் சொல்லும் சிவா கமம் சித்தாந்தம் எனப்படும்.

Saivagama Siddhanta is so called because it expounds the ultimate meaning of the Vedas.

Passage 6

இவைகள் யாவும் சைவாகம விதிப்படியே நடைபெறத்தக்கன.

All these are to be carried out in accordance with the injunctions of the Saivagamas.

Passage 7

“பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர் எங்கு மாகி யிருந்தவர் பூசனைக் கங்கண் வேண்டு விபந்தமா ராய்ந்துளான்.” - 1. பெரியபுராணம் திருவாரூர்ச் சிறப்பு.

  1. “He who dwelt in the anthill, praised in the great, resounding Vedas, and who is present everywhere, examined and determined the offerings required for worship.” — Periyapuranam, The Glory of Tiruvarur. 2.

Passage 8

“எண்ணி லாகம மியம்பிய விறைவர்தாம் விரும்பும் உண்மையாவது பூசனை.”

  1. “The truth desired by the Lord who expounded the countless Agamas is worship.” 3.

Passage 9

“நீ மொழிந்த வாகமத்தி னியல்பினாலுனை யருச்சனை புரியப் —வொங்குகின்றதென் னாசை.”

  1. “My desire to worship You in accordance with the nature of the Agama You have expounded is growing ever stronger.”

Passage 10

— திருக்குறிப்புத் தொண்டர் புராணம்.

— The Purana of Tirukkuripputhondar. 4.

Passage 11

“எய்தியசீ ராகமத்தி லியம்பியபூ சனைக்கேற்பக் கொய்தமல ரும்புனலு முதலான கொண்டணைந்தார்.”

  1. “Having gathered flowers, water, and other offerings in accordance with the worship prescribed in the venerable Agama they had learned, they came and presented them.”

Passage 12

  • கண்ணப்பநாயனார் புராணம்.

— The Purana of Kannappa Nayanar.

Passage 13

திருமந்திரம்

Tirumantiram

Passage 14

வேதமொ டாகம மெய்யா மிறைவனூல் ஒதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக நாத னுரையிவை நாடிலி ரண்டந்தம் பேதம தென்னிற் பெரியோர்க் கபேதமே.

“The Vedas and the Agamas are the true scriptures of the Lord. Reflect upon them as the common and the special scriptures taught by the Lord. If one examines these two, what difference is there between them? To the great sages, there is no difference.”

Passage 15

சிவாகமங்களுக்கு வழிநூல் இருநூற்றேழு உபாகமங் கள். சிவாகமங்களுக்குச் சார்புநூல் அட்டப்பிரகரணம் முதலியவைகள்.

The subsidiary scriptures of the Shaiva Agamas are the two hundred and seven Upagamas. The ancillary works associated with the Shaiva Agamas include the Aṣṭaprakaraṇa and others.

Passage 16

சிவாகமத்தின் ஞானகாண்டப் பொருளைச் சுருக்கி இனிது விளக்குந் தமிழ்ச் சாத்திரங்கள்: திருவுந்தியார், திருக் களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபாவிருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திரு வருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக் கவி, நெஞ்சுவிடு தூ து, உண்மைநெறிவிளக்கம், சங்கற்பநிரா கரணம் என்னும் பதினான்குமாம்.

The Tamil scriptures that concisely and clearly explain the meaning of the Jñāna Kāṇḍa of the Shaiva Agamas are these fourteen: Tiruvundiyār, Tiruk-kaḷiṟṟuppaṭiyār, Śivajñānabodham, Śivajñānasiddhiyār, Irupāvirupatu, Unmai Viḷakkam, Śivappirakāśam, Tiruvaruṭpayan, Viṉāveṇpā, Pōṟṟippaṟṟoṭai, Koṭikkavi, Neñjuviṭutūtu, Unmai Neṟiviḷakkam, and Saṅkalpanirākaraṇam.

Passage 17

வேதத்தின் ஞான காண்டப்பொருளைச் சிவாகமத்துக்கு மாறுபடாவண்ணம் உள்ளபடி அறிவிக்குந் தமிழ்வேதங்கள் தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா முதலியவைகளாம்.

The Tamil Vedas—such as the Tēvāram, Tiruvācakam, Tiruvicaippā, and others—set forth the meaning of the wisdom section of the Vedas in a manner that does not conflict with the Śivāgamas.

Passage 18

சித்தாந்த முத்தியே முத்தி

Only Siddhanta liberation is true liberation.

Passage 19

சித்தாந்தமே முத்திக்கு நேர் வழியாம். சித்தாந்த நெறி யில் நிற்கும் பக்குவான்மாக்களுக்கு எடுத்த சென்ம மொன் றிலே சிவபெருமான் ஆசாரிய மூர்த்தியாய் எழுந்தருளிவந்து திருக்கண்நோக்கம் முதலிய தீகைக் செய்து, மலத்தைப் போக்கிச் சிவஞான சமுத்திரத்தில் மூழ்குவித்துச் சிவாநந் தம் மேலிடச் செய்து சீவன்முத்தராக்கி அப்பொழுதே மேல்வரும் செநநத்தை யொழித்து முத்தி முடிவாயிருக்கிற தம்முடைய பாதமலர்க்கீழ் வைத்தருளுவர்.

Siddhanta alone is the direct path to liberation. For souls who have attained maturity and stand in the Siddhanta path, Lord Shiva comes in the form of a spiritual preceptor during one of their births, performs initiatory rites such as the sacred glance, removes their impurities, immerses them in the ocean of Shiva-knowledge, causes the bliss of Shiva to prevail, and makes them liberated while still alive. He then abolishes the births that would otherwise follow and graciously places them beneath the lotus feet that are the final abode of liberation.

Passage 20

இத்துணைப் பெருமை பொருந்திய சித்தாந்தநெறி வீடு பேற்றிற்கு நேர் வழியென உபமன்னியுமனிவர் அகத்திய முனிவர் முதலிய உயர்ந்தோரெல்லாம் வாயுசங்கிதை சிவ கீதை முதலியவற்றில் எடுத்தோதவும், உலகத்தார் அதனைத் தெளியமாட்டாது துரபிமானங்கொண்டு தத்தமக்கு வேண் டியவாறே பித்தமுடிவாகிய பெரும்பித்தாற் பிதற்றிப் பிதற் நிய அப்பாவத்தால் பெரிய கொடுநரகில் வீழ்வர். ஈதென்ன மயக்கம்!

Although exalted persons such as Upamanyu Munivar and Agastya Munivar have proclaimed in works such as the Vāyu Saṃhitā and the Śiva Gītā that this Siddhanta path, endowed with such greatness, is the direct way to attaining liberation, worldly people, unable to understand it, are overcome by false pride. Babbling and disputing under the influence of great delusion, according to their own desires, they fall into the terrible hell brought upon them by that sin. What a delusion this is!

Passage 21

சைவசித்தாந்த நெறியிற் பிறந்தும், பிற புன்னெறிக ளில் மயங்கிச்சென்று உழல்வோர் பிராந்திக்கு யாது கூறு வது. அன்னோர் தமக்குள்ள பொருளைத் தெளிந்தறிந்து அனுபவியாது பிறர் பொருளைப் பெறவிரும்பிய கயவரென அஞ்சி விலக்கப்படுவர்.

Those who, though born into the path of Saiva Siddhanta, become deluded and wander astray in other false paths— what can be said of their confusion? They are to be feared and shunned as wretches who, without clearly understanding and experiencing the reality within themselves, desire to obtain what belongs to others.

Passage 22

திருவாசகம் *

  • Tiruvacakam

Passage 23

புற்றில்வா ளரவுமஞ்சேன் பொய்யர் தம் மெய்யு மஞ்சேன் கற்றைவார் சடையெம் மண்ணல் கண்ணுதல் பாத நண்ணி மற்றுமோர் தெய்வந் தன்னை யுண்டென நினைக்தெம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே.

I fear not the serpent in its hole; I fear not the falsehood of liars. Having approached the feet of our Lord, the three- eyed One with matted locks adorned with koṉṟai flowers, if I encounter those who, thinking that there is another deity besides our Lord, have failed to learn of Him, alas, I shall indeed be afraid.

Passage 24

சிவஞானசித்தியார் †

† Civajñāṉacittiyār

Passage 25

சித்தாந்தத் தேசிவன்றன் றிருக்கடைக்கண் சேர்த்திச் சொநமொன்றி லேசீவன் முத்த ராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி மநித்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை யறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்ப னென்று மொழிந்திடவு முலகரெலா மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவ ரிதுவென்ன பிரார்தி.

Having brought the souls into the gracious gaze of the Siddhanta Desika, he will unite them with the One, make them liberated beings, rule over them, wash away their impurities, pour forth the flood of wisdom and the bliss of immortality, cut off their ensuing births, and place them beneath the lotus feet of liberation—thus he declares. Yet all the people, becoming fools, babble forth great delusions, fall into the great pit of sin, and perish. What a misfortune this is!

Passage 26

முழமுதற் கடவுள் எனப்படுபவர் எல்லா ஞானமும் எல்லா முதன்மையும் எல்லா அநுக்கிரகமும் என்னும் இலக் கணங்களை இயல்பாகவே யுடையராதல் வேண்டும். பரம சிவன் அருளிய வேதாகமங்களின் பெருமையால் அவர் முற்றறிவுடையவர் என்பதும், அவ் வேதாகமங்களின் வழி ஒழுகுவோர்க்கு இன்பத்தையும், ஒழுகாதோர்க்குத் துன்பத் தையுங் கொடுத்தலினால் முடிவிலாற்றல் உடையர் என்பதும், அவ்வின்பதுன்பங்களை நுகரச் செய்து வினையையொழித்த லினால் பேரருளுடையர் என்பதும் பெறப்படும். ஆதலினால், அவரே முழுமுதற் கடவுளாய் முத்தியை அளிப்பவர் என் பது சித்தம். *

The One who is called the Supreme and First God must, by nature, possess all knowledge, all sovereignty, and all grace as His attributes. From the greatness of the Vedas and Agamas revealed by Paramaśiva, it is understood that He possesses perfect knowledge. Since He grants happiness to those who conduct themselves according to those Vedas and Agamas, and suffering to those who do not, it is understood that He possesses infinite power. Since He causes them to experience those pleasures and pains and thereby removes their karma, it is understood that He possesses supreme grace. Therefore, it is established that He alone is the Supreme and First God and the giver of liberation. *

Passage 27

சைவ சாதனைகள்

Shaiva Disciplines

Passage 28

சிவபெருமான் திருவடியை அடைதற்குரிய சைவ நன் னெறிகள் தாதமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கமென நான்கு வகைப்படும். † அவை முறையே சிவசரியை, சிவகிரியை, சிவயோகம், சிவஞானம் என வழங்

The virtuous Shaiva paths by which one attains the sacred feet of Sivaperuman are of four kinds: the Dāsa-mārga, the Satputra-mārga, the Saha-mārga, and the San-mārga. † They are respectively known as Siva-cariyai, Siva- kiriyai, Siva-yōgam, and Siva-jñānam.

Passage 29

கப்படும். அம் மார்க்கத்திற்குரிய முத்திகள் முறையே சிவ சாலோகம், சிவசாமீபம், சிவசாரூபம், சிவசாயுச்சியம் என நான்கு வகைப்படும். அவற்றுள் சிவசரியை முதலிய மூன் றினாலும் அடைதற்குரிய சிவசாலோகம் முதலிய மூன்றினை யும் பதமுத்தியாகிய அபரமுத்தி எனவும், முடிவான ஞான நெறியால் அடையும் சிவசாயுச்சியத்தைப் பரமுத்தி என வும் கூறுவர்.

They are called by four names: Siva-sālōka, Siva-sāmīpa, Siva-sārūpa, and Siva-sāyucchiyam, respectively. Of these, the first three—Siva-sālōka and the other two, attained through Siva-cariyai and the other two disciplines— are called pada-mukti, or aparā-mukti; while Siva-sāyucchiyam, attained through the final path of wisdom, is called parā-mukti.

Passage 30

சாலோகமாவது: அகத்தொண்டர்க்குளதாகிய உரிமை போல, சிவபெருமான் திருமேனி கொண்டெழுந்தருளியிருக் கும் உலகத்துள் எவ்விடத்துந் தடையின்றிச் சஞ்சரித்து அவ் வுலகபோகங்களை அனுபவித்து வாழ்தல்.

Sālōka means living in the world where Lord Siva has manifested in bodily form, moving about freely anywhere in that world and enjoying its pleasures, with the privilege enjoyed by those who serve Him inwardly.

Passage 31

சாமீபமாவது: அவ்வுலகபோகத்தை அனுபவித்தலோடு மைந்தர்க்குள தாகிய உரிமைபோலச் சிவபெருமானுக்குச் சமீபமாயிருந்து அப்போகங்களை அனுபவித்து வாழ்தல்.

Sāmīpa means living close to Lord Siva and enjoying those pleasures, along with experiencing the pleasures of that world, with the privilege enjoyed by His devotees.

Passage 32

சாரூபமாவது: தோழர்க்குரிய உரிமைபோலச் சிவபெரு மான் கொண்டருளும் திருமேனிகளுள் ஒரு திருமேனியைப் பெற்று அத்திருமேனிக்குரிய ஆபரணமும் போகாநுபவமும் உடையராய் வாழ்தல்.

Sārūpa means receiving one of the divine forms assumed by Lord Siva, and living with the ornaments and enjoyments appropriate to that form, with the privilege enjoyed by His companions.

Passage 33

சாயுச்சியமாவது: சிவபெருமான் திருவடியில் இரண்ட றக் கலந்து நின் று நித்தியானந்தத்தை அனுபவித்து வாழ்தல்.

Sayujya means abiding in complete union at the sacred feet of Lord Shiva, experiencing and living in eternal bliss.

Passage 34

கந்தபுராணம்.

Kandapuranam.

Passage 35

ஆதியார் தாளிணை யருளொடே வழிபடு

Worship the twin feet of the Primordial One with grace.

Passage 36

நீ தியா நீரினார் நிலைமையாய் நின்றிடும்

You shall remain established in the state of those who are purified by the waters of justice.

Passage 37

பாதநான் கவர்பெறும் பதமுநான் கதனுளே

The state I shall attain is the state that I cherish;

Passage 38

யோதியார் பெறுவதோ ருயர்பெருங் கதியதே.

It is the supreme, exalted goal attained by those who seek it.

Passage 39

சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கனுள் சரியையின்றேல் கிரியையும், கிரியையின்றேல் யோகமும், யோகமின்றேல் சிவஞானமும், சிவஞானமின்றேல் சிவபெரு மானுடைய திருவடிப் பேறாகிய முத்தியுங் கைகூடாவாம். ஆகவே இவை நான்கும் ஒன்றற்கொன்று ஏற்றம் பெற்றுப்

Among the four—Charya, Kriya, Yoga, and Jnana—if there is no Charya, there can be no Kriya; without Kriya, no Yoga; without Yoga, no knowledge of Shiva; and without knowledge of Shiva, one cannot attain liberation, the attainment of the sacred feet of Lord Shiva. Therefore, these four are mutually dependent and

Passage 40

படிபோல் உள்ளன. அதனால் அம்முத்தியாகிய சுவையைப் பெறுதற்குச் சரியை முதலிய நான்கும் முறையே அரும்பு, மலர், காய், கனி போலாகும் என்றார் தாயுமான சுவாமிகள்.

are arranged like steps. Hence, Saint Tayumanavar said that, in order to experience the sweetness of that liberation, the four beginning with Charya are respectively like a bud, a flower, an unripe fruit, and a ripe fruit.

Passage 41

விரும்புஞ் சரியைமுதன் மெய்ஞ்ஞான நான்கு

The four, beginning with the beloved Chariya, culminate in true knowledge,

Passage 42

மரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே.

Are they not like the budding flower, blossom, unripe fruit, and ripe fruit, O Supreme One?

Passage 43

கிரியைகள் எல்லாம் சிவஞானத்திற்கு அறிகுறிகளாகும். அக்கிரியைகளுள் இன்னது இன்னதற்கு அறிகுறி என்று ஆகமங்களில் தெளிவுறக் கூறப்பட்டுள்ளன. இங்ஙனமாக, கிரியைகளிற் பயனில்லையென்று அவைகளையிகழ்ந்து ஞான முத்தியடைய விரும்புவோர் ஆகாயத்தினின்று தோலையுரித்து உடுக்க விரும்பினோரையும், படிவழியேறிச் செல்லாது கீழ் நின்று மலையினுச்சிக்குப் பாய விரும்புவோரையும் நிகர்ப் பார்கள் என்பது உண்மைநூற் றுணிபேயாம்.

All rituals are signs pointing toward the knowledge of Shiva. The Āgamas clearly explain which particular ritual serves as the sign of which particular aspect. Thus, those who disdain rituals, declaring them useless, and wish to attain liberation through knowledge alone are truly comparable to those who wish to strip the sky of its skin and wear it, or to those who, without ascending by the proper path, wish to leap from below to the summit of a mountain. This is indeed the firm conclusion of the true scriptures.

Passage 44

சரியையின் இலக்கணமும் பயனும்.

The Definition and Benefit of Chariya.

Passage 45

தாசநெறியாகிய சரியையாவது திருநந்தனவனம் வைத் தல், பத்திர புஷ்பமெடுத்தல், திருமாலை கட்டுதல், திருவல கிடுதல், திருமெழுக்குச் சாத்துதல், சுகந்த தூபமிடுதல், திரு விளக்கேற்றுதல், தோத்திரம் பாடல், பூசைத் திரவியங் கொடுத்தல், சிவனடியார் திருவேடத்தைக் கண்டவிடத்து வணங்குதல், அவர்களது பணிவிடைகளைச் செய்தல் முதலிய வைகளாம்.

The service-oriented path known as Chariya consists of establishing a sacred flower garden, gathering auspicious flowers, making garlands, sweeping the temple, applying the sacred cow-dung coating, burning fragrant incense, lighting sacred lamps, singing hymns, providing materials for worship, bowing upon seeing the sacred form of Shiva’s devotees, serving them, and the like.

Passage 46

  • திருநந்தனவனம் வைத்தல்

  • Establishing a Sacred Flower Garden

Passage 47

கடவுட் பூசைக்காகிய மரம் செடி கொடி வகைகளைச் சுத்தமானபூமியிலே உண்டுபண்ணிப் பாதுகாத்தல் வேண்டும்.

Trees, shrubs, and creepers intended for the worship of God should be grown and tended on clean ground.