Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

98. Types of Trees

Passage 1

மரவகைகள்

Types of Trees

Passage 2

மரங்கள் வில்வம், பாதிரி, கோங்கு, பன்னி, கொன்றை, பொன்னாவிரை, மந்தாரை, சண்பகம், குரா, குருந்து, மகிழ், புன்னை, கடம்பு, வெட்சி, ஆத்தி, செருந்தி, பவளமல்லிகை, வன்னி, பலாசு, மாவிலிங்கை, விளா, முட்கிளுவை, நெல்லி முதலியவைகளாம். மரங்களில் உண்டாகும் பூக்கள் கோட் டுப்பூ எனப்படும்.

The trees are vilva, pāthiri, kōngu, panni, konrai, ponnavirai, mandārai, champak, kurā, kurundu, magizh, punnai, kadamba, vetci, āthi, serundi, coral jasmine, vanni, palāśa, māvilangai, vilā, muṭkiḷuvai, Indian gooseberry, and others. Flowers that grow on trees are called kōṭṭuppū.

Passage 3

செடிவகைகள்

Types of Plants

Passage 4

செடிகள் அலரி, நந்தியாவர்த்தம், வெள்ளெருக்கு, செவ் வாத்தை, கொக்கிறகு, துளசி, நொச்சி, செங்கீரை நாயுருவி, கருவூமத்தை, பொன்னூமத்தை, கத்தரி, செவ்வந்தி, வெட்டி வேர், மருக்கொழுந்து, இலாமிச்சை, சிவகரங்தை, விட்டு ணுக்கிராந்தி, மாசிப்பச்சை, திருநீற்றுப்பச்சை, எள்ளு, பூளை, அறுகு முகலியவைகளாம். செடிகளில் உண்டாகும் பூ நிலப்பூ எனப்படும்.

The plants are oleander, crape jasmine, white milkweed, red vātai, kokkiragu, holy basil, nochi, red amaranth, nāyuruvi, karuvūmaththai, ponnumaththai, eggplant, chrysanthemum, vetiver, marukkoḻundu, lemongrass, sivakarandhai, viṭṭuṇukirānti, māsippaccai, sacred-ash greens, sesame, pūḷai, arugu, and others. Flowers that grow on plants are called nilappū.