Books / Sivagnana Siddhiyar

12. பரபக்கம் — 10. சத்தப் பிரமவாதி மதம்

12.1

உரையா னதுமை யலினால் உலகாம் புரையோ ருணரும் பொருள்பொய் யிதனை விரையா துணரும் அதுவீ டெனவே வரையா துரைவா திவகுத் தனனே.

12.2

பரிணா மம்விவர்த் தநம்மா யம்அதில் தருமாம் உலகுள் ளதுசத் தமதே பொருளா வதுசொல் நலம்அல் லவெனில் மருவா துபொருட் டிறமற் றிலையே.

12.3

பூமா வெனவே உரையும் பொருளும் ஆமாம் பொருளொன் றில்அணைந் திலதால் நாம்ஆ தரவெய் துசொல்நன் கருவாய்த் தாமாம் பொருள்நெற் பொரிதா னெனவே.

12.4

சொல்வந் தெழலும் பொருள்தோன் றுதலால் சொல்லே பொருளென் றுதுணிந் திடுநீ சொல்லும் பொருளும் உடனின் றதெனின் சொல்லும் பொருளின் றுசொல்நின் றதுவே.

12.5

சத்தப் பிரமவாதி மத மறுதலை உரையா னதுமை யலினால் உலகேல் உரையாய் ஒருமை யலும்உள் ளதென வரையா துணரும் அதுவண் கதியேல் வரையா மறையோ டுமலைந் தனையே.

12.6

அருவம் உரையா தலின்அவ் வுருவாய் மருவும் பரிணா மம்மறந் திடுமாம் பருகுந் ததியா னதுபா லதெனில் உருவம் அதுவாய் அழியும் உரையே.

12.7

ஆயம் உடன்அந் தவிவர்த் தநமும் மாயவ் வுளதென் றுசொல்எவ் விடமு மாய்நின் றமையின் உரையின் நலமும் ஆயும் பொருளுக் கறிநா மமதே.

12.8

உரைபோல் பொருளுக் குருவின் மையினவ் உரையே பொருளென் றனைஇன் றரியென் உரையே கவிமா லவனுக் குளதாம் உரையாய் கவியா கவொர்மா லினையே.

12.9

நெல்லில் பொரியா வதுநீ டழலில் சொல்லில் பொருளொன் றொடுதொக் கிடலால் கல்வித் திறமாம் உரைகாட் சியினால் மல்லற் பொருள்சா லவளந் தருமே.

12.10

முன்கண் டபொருள் பெயரா தலினால் பின்கண் டபிழம் புணரும் பெயரால் நன்கண் டபொருட் கொருநா சமதின்(று) என்கண் டனைகா ரணமின் றழிவே.

12.11

பொருள்இந் திரியம் உணர்வோ டுபுமான் இருளின் றியிடும் ஔ¤இத் தனையும் மருவும் பொழுதில் வருஞா னமதின் ஒருவும் பெயர்அர்த் தம்உதித் திடுமே.

12.12

அர்த்தம் தௌ¤தற் கொளியா னதுபோல் சத்தம் பொருள்தான் அறிதற் குளதாம் நித்தம் அதுவன் றுரைநின் றழியும் சித்தன் ஒருவன் உரைசெய் தனனே.