Books / Sivagnana Siddhiyar

11. பரபக்கம் — 9. பிரபாகரன் மதம்

11.1

அருந்தவனாம் சைமினிபண் டாரணநூல் ஆய்ந்தானாய்த் யூ¤ருந்தும்உல கிரிற்கொண்டு செப்பியநூல் திறமதனைப் பரிந்துபிர பாகரன்பட் டாசானில் வேறாகிப் புரிந்துரைசெய் நெறியதனைப் புவனிமிசைப் புகன்றிடுவாம்.

11.2

அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வமெனும் அது தோன்றித், தருஞ்செயல்நின் றழியில்பின் பலிப்பிப்ப தாகுமது, வருஞ்செயல்ஒன் றின்றியே மண்சிலைபோ லாமுத்தித், தருஞசெயலீ தெனவுணர்ந்து தாரணிமேல் அவன் சாற்றும்.

11.3

பிரபாகரன் மத மறுதலை வேறுபலந் தருவதுதான் வினையென்று வேதங்கள் கூறவோர் அபூர்வந்தான் கொடுக்குமெனக் கொண்டவுரை மாறுதரு மறையோடு முன்பின்றி வந்ததால் தேறியவிண் பூமுடிமேற் சேர்ந்துமணந் திகழ்ந்ததுவாம்.

11.4

ஆநந்தம் கதியென்ன அறிவழிகை வீடென்கை ஊனம்பின் உணர்விழந்தோர்க் குளதாகும் உயர்முத்தி தானிங்குச் சிவப்பொழியத் தழல்நிற்கு மாறில்லை ஞானங்கெட் டுயிர்நிற்கும் எனுமுரைதான் நண்ணாதால்.