Books / Sivagnana Siddhiyar

10. பரபக்கம் — 8. பட்டாசாரியன் மதம்

10.1

வேதமே யோதி நாதன் இலையென்று விண்ணில் ஏறச் சேதமாங் கன்மஞ் செய்யச் சைமினி செப்பும் நூலின் நீதியே கொண்டு பட்டா சாரியன் நிகழ்த்தும் நீர்மை ஓதநீர் ஞாலத் துள்ளே உள்ளவா றுரைக்க லுற்றாம்.

10.2

உற்றிடுங் காம மாதி குணங்கள்தாம் உயிர்கட் குண்டாம் மற்றிவை தருமே யாகின் மறைமொழி வாய்மை யின்றாம் கற்றநூல் அளவாற் போதம் கலப்பது கல்வி யின்றேல் பெற்றிடும் மழவு மூங்கை என்னவே பேச லாமே.

10.3

உண்டொரு கடவுள் வேதம் உரைத்திட உயிரின் தன்மை கொண்டவன் அல்லன் என்றுங் கூறிடின் உருவங் கூடில் பண்டைய உயிரே யாகும படித்தநூ லளவு ஞானம் கண்டிடும் உருவ மின்றேல் கருதுவ தில்லை என்றான்.

10.4

தேவரும் முனிவர் தாமும் சித்தரும் நரரும் மற்றும் யாவரும் உரைப்பர் வேதம் இயம்பினர் இன்ன ரென்னப் போவதன் றென்று நாளும் பரம்பரை புகல்வ தாகும் கூவல்நி ரென்னில் கொள்ளேம் மறுமையைக் குறித்த லாலே.

10.5

உன்னிய அங்க மாறும் மூன்றுப வேதந் தானும் தன்னுளே அடக்கி வேறு தங்கிடா வகையைச் சார்ந்து முன்னமோர் தோற்ற மின்றி முடிவின்றி நித்த மாகி மன்னியோர் இயல்பே யாகி வழங்கிடும் மறைய தென்றான்.

10.6

செய்தியும் நெறியும் மேவுந் தேவரும் பொருளும் எல்லாம் எய்திய பன்மை யாலே ஓரியல் பியம்பா தாகும் ஐயமில் காலம் மூன்றும் அறிந்தபின் நெஞ்ச கத்தாய் மெய்யதாய் வந்து தோன்றி விளங்கிடும் வேத நூலே.

10.7

தப்பிலா வாகுந் தாது பிரத்தியந் தன்னி னோடே ஒப்பிலா தாம்பி ராதி பதிகமாம் உறுப்புங் கொண்டு செம்பபுமாம் வேதம் சொன்ன விதிப்படி செய்யச் சேம வைப்பதாம் வீடு பாசம் மருவலாம் ஒருவ லாமே.

10.8

போக்கொடு வரவு காலம் ஒன்றினில் புணர்வ தின்றி ஆக்கவே றொரவ ரின்றி அநாதியாய் அணுக்க ளாகி நீக்கிடா வினையிற் கூடி நிலமுத லாக நீடி ஊக்கமா ருலகம் என்றும் உள்ளதென் றுரைக்க லாமே.

10.9

நித்தமாய் எங்கு முண்டாய் நீடுயிர் அறிவு தானாய்ப் புத்திதான் ஆதி யாய கருவியின் புறத்த தாகிச் சுத்தமாய் அருவ மாகித் தொல்லைவல் வினையின் தன்மைக்(கு) ஒத்ததோர் உருவம் பற்றிப் புலன்வழி உணர்ந்து நிற்கும்.

10.10

செயல்தரு வினைகள் மாய்ந்து சிந்தையிற் சேர்ந்து நின்று பயனொடு பலியா நிற்கும் பலாலமும் தழையு மெல்லாம் வயல்தனின் மருவி நாசம் வந்தபின் பலத்தை வந்திங்(கு) இயல்பொருந் தந்தாற் போல என்றும்பின் இயம்பு கின்றான்.

10.11

நீதியா நித்த கன்மம் நிகழ்த்திடச் சுபத்தை நீங்கார் தீதிலா இச்சா கன்மஞ் செந்தழல் ஓம்பிச் செய்ய ஏதுதான் வேண்டிற் றெல்லாம் எய்தலாஞ் சோம யாகம் ஆதிதான் ஆசை வீசி அமைத்திட வீட தாமே.

10.12

கருதிய கன்மம் ஞானம் இரண்டுங்கா லாகக் கொண்டு மருவிட லாகும் வீடு மதிதனை மதித்துச் செய்தி ஒருவிடில் பதித னாகும் பதிதனைக் கதியின் உய்க்கத் தருவதோர் நெறிதான் இல்லை என்னவுஞ் சாற்றி னானே.

10.13

பசுப்படுத்(து) யாகம் பண்ணப் புண்ணியம் ஆவ தென்று வசிப்பினான் மறைகள் சொன்ன வழக்கினால் வாய்மை யாக நசிப்பிலா மந்தி ரங்கள் நவிற்றலின் இன்ப மாகும் பசிப்புளான் ஒருவன் உண்ணப் பசியது தீர்ந்த பண்பே.

10.14

பட்டாசாரியன் மத மறுதலை வேதஞ் சுயம்புவென வேதந்த வாய்மொழியில் வேறும் பிரமாண முளதேல், நீதந்து காணிங்கு மாதுங்க பாரதமும் நேர்கண்ட தாகும் அதுபோல், ஓதுஞ் சொலாய்வருத லானுங்க டாதிபட மோவந்தி டாஒருவரா, லேதந்த தாமறைக ளாய்வந்த வாய்மொழியும் வேறிந்து சேக ரனதே.

10.15

உரைதந்தி டானஒருவன் எனிலிந்த வானினிடை ஒலி கொண்டு மேவி உளதாம், புரைதந்த வாம்மறைகள் அபிவெஞ்ச மாயொளிர்கை பொருள்தந்த தீப மதுவேல், வரை தந்த தாலில்வுரை கபிலன்சொ லாகுமது மறைகின்ற வாறும் வரவும், விரைவின்சொ லாயிதனை யெதுகொண்டு மேவுவது விடைகொண்ட தாலுன் உரையே.

10.16

உருவின்க ணேமருவி வரில்இன்று தேரைஉரை உளதுங்கள் நூலின் மறையும், தருகின்ற நாதரவர் இவரென்று நாமமது தரவந்தி டாமை யதனால், வருமென்று நேடியெனில் வளர்கின்ற தீவதனில் வருகிந்ற வாடை பலவால், ஒருதந்து வாயனவன் இவனென்ற போதிலிவை உளதென்று நீடிய வையே.

10.17

மறைநின்று நாலுதிசை யவர்ஒன்ற தாகவரும் உரை தந்த வாய்மை அதனால், நிறைவென்று நீடுமெனில் வனையுங்க டாதிபல சொலவொன்றி நீடி யுளதாம், குறைவின்றி நாடும் மொழி அவைசென்று கூடுவதொர் குணமுண்ட தாகு மலர்தான், உறைகின்ற மாலைதனில் உளதென்ற தாகுமெனின் உணர்வின்ற தாழி ஒலியே.

10.18

உடல்நின்று நாமுணரு மதுகண்ட வாறொருவன் உலகங்க ளேஉ ருவமாய், இடைநின்று மாமறைக ளவைஅன்று வாய்மொழிய இவைகொண்டு லோக நெறியின், கடனின்று வாழுமது கருதும்பின் ஆணைவழி கருமஞ்செய் காசினி யுளோர், திடமென்று சீர்அரச னுரைதங்கும் ஓலைதிரு முகமென்று சூடு செயலே.

10.19

முடிவின்றி வேதியர்கள் முதல்வந்த மூவர்களும் மொழி யும்சொல் ஆரிய மெனில், கடிவின்றி யேகணித ரவர்கண்ட வாறதுவென் வடகண்ட சாதி கடியா(து), ஒடிவின்றி ஓதுவதென் உரைதங்கு வேதமொழி உளதென்று கூறு மவர்தாம், அடியின்று தானெனும தறிவின்றி ஈனுமவர் இலையென்ற ஆத ரவதே.

10.20

அறிகின்ற பான்மைஅவ யவநின்ற தாகில்அணு அழியுங்க டாதி யெனவே, செறிகின்ற வாறதிலை யெனின்வந்து சேருமது திடமன்றுகூட வொருவன், குறிகொண்டு காரின் முளை வருகின்ற பீசமவை குலையொன்றி வேனி லழியும், உறுகின்ற காலமவை உடனின்று போயழியும் உலகென்று நீடி யிலதே.

10.21

நிறைவெங்கு மாகில்உயிர் நெறிநின்று போய்வருதல் அணைவின்ற தாம் உடலிலே, குறைவின்றெ லாமும்உள குடகந்த மாகில் அவை விடநின்ற வாறு குறியா, உறைகின்ற மாதவர்கள் உடனின்று போய்வறிதொர் உடல்கொண்டு மீள்வ துணராய், மறைதந்த வாய்மைதனில் நிறைவின்றி யேயுலகின் மலைகின்ற தாலுன் உரையே.

10.22

அழிகின்ற தால்வினைகள் ஆகின்ற வாறெனெர வது மங்கி யான பரிசேல், ஒழிவின்றி ஓதநமும் அறவுண்ண நாம் வினைகள் உறுகின்ற வாறதெனலாம், கழிகின்ற தாலறிவு வினைதந்தி டாவினைஞர் கருமங்கள் நாடி யுறுவோர், பழுதின்றி யேஉதவும் அதுபண்ப தாகஅருள் பரமன்க ணாகும் வினையே.

10.23

கருமங்கள் ஞானமது வுடன்நின்ற லல்மருவு கதிதங்க லாகு மெனின்நீ, தரும் அங்க ராகமுதல் அவைதங்க மேலறிவ தவிரும்பின் வீடும் அணையா, பொருள் நின்று தேடிவரு பயன் உண்டு போவினை புரிகின்ற வாற தெனவே, திருநின்ற போகம் வளர் அவிசென்று மேவியது செலவுண்டு சூழவ செயலே.