5. பரபக்கம் — 3. யோகாசாரன் மதம்
5.1
போதமே பொருளாய்த் தோன்றும் பொருளதாய் எழலாற் போதம் வாதனை அதனாற்கூடி வருதலால் வடிவிலாமை ஆதலாற் கனவே போலும் சகமுள தறிவே யாமென்(று) ஓதினான் ஓதா னாய உணர்வினால் யோகா சாரன்.
5.2
யோகாசாரன் மத மறுதலை போதமுந் தவிர வேறோர் வாதனை புகன்றாய் போதம் வாதனை இரண்டுண் டென்னாய் போதவா தனையும் என்னிற் காதலாற் பொருளி னோடு கலந்தபின் எழுங்க ருத்தாம் வாதனை கனவு கண்ட பொருளின்மேல் வருங்க கருத்தே.
5.3
அறிவதே பொருள தாயின் அகம்சடம் என்ன வேண்டும் பிறிபொரு ளாகும் பேதித் திதம்பிர பஞ்ச மென்னில் உறுபொருள் உருவந் தோய்ந்தால் உணர்வு மவ்வுருவாய் நிற்கும்.