6. பரபக்கம் — 4. மாத்தியமிகன் மதம்
6.1
அவயவம் பொருளாய்த் தோன்றும் அவயவம் ஒழிந்தாற் பின்னை, இவைபொரு ளென்ன வேறொன் றிலாமையாற் பொருள்கள் இன்றாம், அவைபொருள் இலாமை யாலே அறிவுமின் றாகு மென்று, நவைதரு மொழியி னாலே நவிலுமாத் தியமி கன்றான்.
6.2
மாத்தியமிகன் மத மறுதலை கடத்தினில் அவயவங்கள் படத்தினில் புகாமற் காத்தும், படத்தினில் அவயவங்கள் கடத்தினிற் புகாமற் கொண்டும், இத்தினில் நிற்கும் ஆகும் அவயவி இரண்டுங் கூடி, உடைத்தொரு பொருளுண் டாகப் பொருளுமுண் டுணர்வும் உண்டே.
6.3
கருவியும் ஔ¤யும் வேறு கருதிடுங் கருத்தும் நிற்கப் பொருள்புண ராமை யாலே போதம்வந் தெழுவ தின்றாம் மருவிடம் பொருளுண் டாக வந்தெழும் புந்தி யானால் பொருளுள தாகு மாகப் போதமும் உள்ள தாமே.