Books / Thirumurai 6

68. 6.76 திருப்புத்தூர் - திருத்தாண்டகம்௿

6.76.1

புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்௿
போர்விடையின் பாகன்காண் புவன மேழும்௿
விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண்௿
விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேத நான்குந்௿
தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரங்கொண் டோ ன்காண்௿
தீர்த்தன்காண் திருமாலோர் பங்கத் தான்காண்௿
திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.

6.76.1

6.76.2

வாராரும் முலைமங்கை பாகத் தான்காண்௿
மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்௿
கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங்௿
குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட௿
காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்௿
கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந்௿
தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.

6.76.2

6.76.3

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்௿
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்௿
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி௿
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்௿
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற௿
புனக்காந்தட் கைகாட்டக் கண்டு வண்டு௿
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.

6.76.3

6.76.4

ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்௿
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்௿
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்௿
துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்௿
மாடேறி முத்தீனுங் கானல் வேலி௿
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி௿
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.

6.76.4

6.76.5

கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்௿
காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்௿
பெருமருவு பேருலகிற் பிணிகள் தீர்க்கும்௿
பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டீகாண்௿
தருமருவு கொடைத்தடக்கை அளகைக் கோன்றன்௿
சங்காத்தி ஆரூரில் தனியா னைகாண்௿
திருமருவு பொழில்புடைசூழ் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.

6.76.5

6.76.6

காம்பாடு தோளுமையாள் காண நட்டங்௿
கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய௿
பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வான்காண்௿
பவளத்தின் பருவரைபோற் படிமத் தான்காண்௿
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட௿
சங்கரன்காண் பொங்கரவக் கச்சை யோன்காண்௿
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.

6.76.6

6.76.7

வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள்௿
வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்௿
பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு௿
பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்௿
அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்௿
ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற்௿
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.

6.76.7

6.76.8

புக்கடைந்த வேதியற்காய்க் காலற் காய்ந்த௿
புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையா ளஞ்ச௿
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்௿
வெண்மதியைக் கலைசேர்த்த திண்மை யோன்காண்௿
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை௿
ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல்௿
திக்கணைந்து வருமருங்கில் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.

6.76.8

6.76.9

பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்௿
பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற௿
கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்று௿
ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட௿
பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம்௿
பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்௿
செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.

6.76.9

6.76.10

உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்ட௿
ஓராழி படைத்தவன்காண் உலகு சூழும்௿
வரமதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண்௿
வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்௿
அரமதித்துச் செம்பொன்னி னாரம் பூணா௿
அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்௿
சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.

6.76.10

6.76 — note

௿ இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - புத்தூரீசர்,௿ தேவியார் - சிவகாமியம்மை.௿ ௿