Books / Thirumurai 6

69. 6.77 திருவாய்மூர் - திருத்தாண்டகம்௿

6.77.1

பாட வடியார் பரவக் கண்டேன்௿
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்௿
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்௿
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்௿
கோட லரவார் சடையிற் கண்டேன்௿
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்௿
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

6.77.1

6.77.2

பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்௿
பதினெண் கணமும் பயிலக் கண்டேன்௿
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்௿
நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்௿
காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்௿
கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்௿
மாலைச் சடையும் முடியுங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

6.77.2

6.77.3

மண்ணைத் திகழ நடம தாடும்௿
வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்௿
விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்௿
வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்௿
நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன்௿
நாலு மறையங்க மோதக் கண்டேன்௿
வண்ணப் பொலிந்திலங்கு கோலங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

6.77.3

6.77.4

விளைத்த பெரும்பத்தி கூர நின்று௿
மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்௿
இளைக்குங் கதநாக மேனி கண்டேன்௿
என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன்௿
திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன்௿
சேணார் மதின்மூன்றும் பொன்ற வன்று௿
வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

6.77.4

6.77.5

கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன்௿
காலிற் கழல்கண்டேன் கரியின் றோல்கொண்௿
டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன்௿
உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்௿
நான்மறை யானோடு நெடிய மாலும்௿
நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக௿
மான்மறி தங்கையின் மருவக் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

6.77.5

6.77.6

அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன்௿
அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்௿
முடியார் சடைமேல் அரவ மூழ்க௿
மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்௿
கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்௿
கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்௿
வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

6.77.6

6.77.7

குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்௿
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்௿
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்௿
ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன்௿
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்௿
தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்௿
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

6.77.7

6.77.8

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்௿
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்௿
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்௿
பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன்௿
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்௿
மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்௿
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

6.77.8

6.77.9

மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன்௿
வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்௿
கையம் பரனெரித்த காட்சி கண்டேன்௿
கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்௿
ஐயம் பலவூர் திரியக் கண்டேன்௿
அன்றவன் றன்வேள்வி அழித்து கந்து௿
வையம் பரவ இருத்தல் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

6.77.9

6.77.10

கலங்க இருவர்க் கழலாய் நீண்ட௿
காரணமுங் கண்டேன் கருவாய் நின்று௿
பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்௿
பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன்௿
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்௿
இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன்௿
வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

6.77.10

6.77 — note

௿