Books / Thirumurai 6

85. 6.93 பலவகைத் - திருத்தாண்டகம்

6.93.1

௿

6.93.1

6.93.1

நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டு௿
நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு௿
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு௿
படவரவும் பனிமதியும் வைத்த செல்வர்௿
தாந்திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர்௿
தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்௿
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீ ராகிற்௿
பொல்லாப் புலாற்றுருத்தி போக்க லாமே.

6.93.1

6.93.2

ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே௿
அகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை௿
மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு௿
மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்௿
பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும்௿
படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய௿
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீ ராகில்௿
நிலாவாப் புலாற்றானம் நீக்க லாமே.

6.93.2

6.93.3

பொய்யாறா வாறே புனைந்து பேசிப்௿
புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்௿
கையாறாக் கரண முடையோ மென்று௿
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்௿
நெய்யாறா ஆடிய நீல கண்டர்௿
நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய௿
ஐயாறே ஐயாறே என்பீ ராகில்௿
அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே.

6.93.3

6.93.4

இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்௿
ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்௿
கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்௿
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்௿
அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்௿
அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய௿
பழனம் பழனமே என்பீ ராகிற்௿
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே.

6.93.4

6.93.5

ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர்௿
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்௿
மாற்றுத் துறைவழிகொண் டோ டா முன்னம்௿
மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்௿
வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்௿
வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய௿
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீ ராகிற்௿
துயர்நீங்கித் தூநெறிக்கண் சேர லாமே.

6.93.5

6.93.6

கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற்௿
கள்ளக் கடலி லழுந்தி வாளா௿
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்௿
நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்௿
அலஞ்சுழிக்கும் மன்னாகந் தன்னான் மேய௿
அருமறையோ டாறங்க மானார் கோயில்௿
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்௿
வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே.

6.93.6

6.93.7

தண்டி குண்டோ தரன்பிங் கிருடி௿
சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்௿
பண்டை உலகம் படைத்தான் றானும்௿
பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்௿
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்௿
சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்௿
கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்௿
கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.

6.93.7

6.93.8

விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே௿
வெள்ளேற்றான் தன்றமரைக் கண்ட போது௿
வடமூக்க மாமுனிவர் போலச் சென்று௿
மாதவத்தார் மனத்துளார் மழுவாட் செல்வர்௿
படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்௿
பங்கயத்து மேலயனும் பரவிக் காணா௿
குடமூக்கே குடமூக்கே என்பீ ராகிற்௿
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே.

6.93.8

6.93.9

தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந்௿
தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்௿
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்௿
கார்மயிலஞ் சாயலார் கலந்து காண௿
எண்காட்டாக் காடங் கிடமா நின்று௿
எரிவீசி இரவாடும் இறைவர் மேய௿
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்௿
வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே.

6.93.9

6.93.10

தந்தையார் தாயா ருடன் பிறந்தார்௿
தாரமார் புத்திரரார் தாந்தா மாரே௿
வந்தவா றெங்ஙனே போமா றேதோ௿
மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா௿
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்௿
திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னி௿
எந்தையார் திருநாமம் நமச்சி வாய௿
என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே.

6.93.10

6.93 — note

௿